ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாற்றுத்திறனாளி தம்பதிகளிடம் ரூ. 25,000 செல்லாத நோட்டுக்கள்... உதவிய கலெக்டர்!!

Google Oneindia Tamil News

ஈரோடு: ஈரோட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தம்பதிகள் மாடுகளை விற்று 5 ஆண்டுகளுக்கு முன்பு சேகரித்து வைத்து இருந்த 25,000 ரூபாய் செல்லாதது, தடை செய்யப்பட்டது என்று தெரிய வந்த பின்னர், மாவட்டக் கலெக்டர் சி. கதிரவன் தனது வருமானத்தில் இருந்து அந்தப் பணத்தை கொடுத்து உதவி இருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் பொதியமூப்பனூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் சோமு. கண்பார்வை இல்லாதவர். இவரது மனைவி பழனியம்மாள். மாற்றுத்திறனாளி. இவர்கள் இருவரும் சூடம், ஊதுபத்தி தயாரித்து விற்று வந்தனர். தற்போது பொது முடக்கம் என்பதால் இவர்களது தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்றாட செலவுகளுக்கு பணம் இல்லாமல் திண்டாடி உள்ளனர்.

Disabled couple from Erode is having demonetisation rupee note helped by collector

இந்த நிலையில் 2016ல் தங்களது மாடுகளை விற்று கிடைத்த பணத்தை வீட்டில் சேமித்து வைத்துள்ளனர். அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு வங்கிக்கு சென்றனர். இவர்கள் கொண்டு வந்த பணம் அனைத்தும் செல்லாதது என்று வங்கியில் தெரிவித்துவிட்டனர். இதனால் இந்த தம்பதிகள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். நலத்திட்டங்கள் அல்லது உதவிகள் மூலம் மாவட்ட நிர்வாகம்தான் அவர்களுக்கு உதவ வேண்டும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியாகி இருந்தது.

கொரோனா தடுப்பு மருந்து.. உலக அளவில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க போகிறது.. பிரதமர் மோடி உறுதி கொரோனா தடுப்பு மருந்து.. உலக அளவில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க போகிறது.. பிரதமர் மோடி உறுதி

இதையடுத்து மாவட்டக் கலெக்டர் சி. கதிரவன் இந்த தம்பதிகளுக்கு உதவுவதற்கு முன் வந்தார். தனது வருமானத்தில் இருந்து 25,000 ரூபாயை நன்கொடையாக கலெக்டர் வழங்கினார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Disabled couple from Erode is having demonetisation rupee note helped by collector
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X