ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஏனுங்... என்னங்.. வெரசா செஞ்சு முடிங்.. செங்கோட்டையன் கோரிக்கை.. அதிர்ந்த அதிகாரிகள்!

டாஸ்மாக் சென்று வர பஸ் பாஸ் கேட்டு மனு அளித்துள்ளார் ஒருவர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    டாஸ்மாக் கடைக்கு பேருந்து விடுங்கள்... செங்கோட்டையனின் ஒரு கோரிக்கை- வீடியோ

    ஈரோடு: ஆஹா.. தேசத்தின் குடிமகன் என்றால் இவரை போலத்தான் இருக்கணும்!!

    ஈரோடு அருகே உள்ள கிராமம் வசந்தாபுரம். இங்கு வசித்து வருபவர் செங்கோட்டையன். வயது 40 ஆகிறது. இன்று மாவட்டத்தில் குறைதீர்ப்பு முகாம் நடந்தது. அதனால் செங்கோட்டையன் நேற்று கலெக்டர் ஆபீசுக்கு வந்தார்.

    வரும்போதே கையில் ஒரு மனுவை கொண்டு வந்தார். ஒவ்வொருவரிடம் இருந்தும் அங்கிருந்த அலுவலர்கள் மனுக்களை வாங்கி கொண்டிருந்தார்கள்.

    அதிர்ந்தனர்

    அதிர்ந்தனர்

    பிறகு தனது மனுவை எடுத்து கொண்டு போய் அதிகாரிகளிடம் தந்தார். அதை வாங்கி படித்து பார்த்த அதிகாரிகளுக்கு ஒரு செகண்ட் தலையே சுற்றி விட்டது. செங்கோட்டையனும் அதுவரை பொறுமையாக உட்கார்ந்திருந்தார்.

    டாஸ்மாக் இல்லை

    டாஸ்மாக் இல்லை

    அந்த மனுவில் செங்கோட்டையன், "நான் ஒரு கூலித்தொழிலாளி. இங்கு கூலி வேலை செய்யும் சிலருக்கு மதுதான் முக்கிய தேவையாக இருக்கிறது. நானும் தினமும் மது அருந்தும் பழக்கம் உடையவன். கொடுமுடி ஒன்றியத்தில் உள்ள வேலாம்பாளையத்தில் பல மாதங்கள் ஆகியும் டாஸ்மாக் திறக்கப்படவே இல்லை.

    பஸ் சார்ஜ்

    பஸ் சார்ஜ்

    அதனால் இப்போது பத்து கிலோ மீட்டர் வரை போய் மதுஅருந்தி வருகிறேன். எனக்கு பஸ் சார்ஜ் அதிகமாகிறது. பைக்கில் சென்றால் போலீசார் மடக்கி கேஸ் போடுகிறார்கள். அதனால் எங்கள் பகுதியில் ஒரு டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும். இல்லை என்றால் எனக்கு பஸ்சில் சென்றுவர பஸ் பாஸ் வசதியாவது செய்து கொடுக்க வேண்டும்" என்று கேட்டிருந்தார்.

    உறுதி அளித்தனர்

    உறுதி அளித்தனர்

    இதனை படித்து பார்த்த அங்கிருந்த அலுவலர்கள் அவருக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் நின்றனர். பிறகு, "உங்கள் மனுவை கண்டிப்பா மாவட்ட மதுக்கடை அதிகாரிகளின் பார்வைக்கு அனுப்பி வைக்கிறோம்" என்று உறுதி சொல்லி செங்கோட்டையனை அனுப்பி வைத்தனர்.

    English summary
    Drunkard man requests Erode Collector to arrange free bus pass to go Tasmac and drink
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X