• search
ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சேலம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்படுமா?.. முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?.. முதல்வர் சொன்னதை கேளுங்க

|

ஈரோடு: தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது என்றும் ஊரடங்கும் நீடிக்கப்படாது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

  Tamilnadu Lockdown Extension | Salem District பிரிப்பு பற்றி Edappadi Palanisamy பதில்

  ஆக31 வரை லாக்டவுன் நீட்டிப்பு- கட்டுப்பாடுகள், தளர்வுகள் எவை? முதல்வரின் விரிவான அறிவிப்பு

  ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா, புதிய திட்டங்கள் அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்டவற்ரில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார்.

  அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் நிருபர்கள் கேள்விகளை கேட்டனர். அதற்கு அவர் பதில் அளித்தார். கோவையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது குறித்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். யார் சிலையை சேதப்படுத்தியிருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

  சக உயிர்களை காக்க.. தயங்காமல் பிளாஸ்மா தானம் செய்வோம்.. வீடியோ வெளியிட்ட முதல்வர்

  தீர்ப்பு

  தீர்ப்பு

  இந்த சம்பவம் தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்படும். மின் கட்டணம் நிர்ணயித்ததில் என்ன முறைகேடு இருக்கிறது என்றே தெரியவில்லை. எதிர்க்கட்சியினர் நீதிமன்றத்திற்கு சென்றனர். அங்கு தீர்ப்பும் கிடைத்துவிட்டது. இந்த தீர்ப்பு குறித்து ஊடகங்கள் அனைத்தும் வெளியிட்டன. இதற்கு மேலும் சந்தேகம் என்றால் என்ன செய்வது?

  கட்டணம்

  கட்டணம்

  தற்போது கடுமையான கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மின்வாரிய தொழிலாளர்கள் வீடு வீடாக சென்று மின் கணக்கீடு செய்ய இயலாது என தெரிவித்துள்ளார்கள். ஏற்கெனவே மொத்தமாக 4 மாதமாக கணக்கீடு செய்தனர். அதற்கான கட்டணத்தையும் எடுத்தனர்.

  கட்டணம்

  கட்டணம்

  பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அந்த கட்டணம் 2ஆக பிரிக்கப்பட்டு, 4 மாதத்திற்கு சுமார் 800 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியிருந்தால் அதை 2 ஆக பிரித்து அதாவது 400 யூனிட்டாக பிரித்து அதிலும் 100 யூனிட் கழிக்கப்பட்டு மீதமுள்ள 300 யூனிட்டுக்கு பணம் செலுத்த வேண்டும். இவ்வாறு பிரிக்கப்படும் போது 500 யூனிட்டுக்கு மேல் வந்தால் கட்டணம் அதிகமாகும்.

  ரூ 25 லட்சம்

  ரூ 25 லட்சம்

  அப்படி அதிகமாகும் கட்டணத்தை அடுத்த மாத கணக்கெடுப்பில் குறைவாக வந்தால் அந்த நேரத்தில் கழிக்கப்படும் என்ற அரசின் விளக்கத்தை நீதிமன்றம் ஏற்றது. மருத்துவம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ 50 லட்சமும் மற்ற துறையினருக்கு ரூ 25 லட்சமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  உயிரிழப்புகள்

  உயிரிழப்புகள்

  சேலம் இரண்டாக பிரிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வருவது பொய்யான தகவல். இனிமேல் தமிழகத்தில் எந்த ஒரு மாவட்டமும் பிரிக்கப்படாது. ஞாயிற்றுக்கிழமைகளை போல் முழு ஊரடங்கை மற்ற நாட்களிலும் அதிகரிக்கும் திட்டம் அரசுக்கு இல்லை. கொரோனா பரவலைத் தடுக்க அரசு சரியான நடவடிக்கைகளை எடுத்து உயிரிழப்புகளை குறைத்து வருகிறது.

  தேர்தல் வாக்குறுதிகள்

  தேர்தல் வாக்குறுதிகள்

  இந்தியாவிலேயே அதிக கொரோனா பரிசோதனை செய்த ஒரே மாநிலம் தமிழகம்தான் என்றார். சேலம் மாவட்டம் எடப்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முடிவுற்றப் பணிகளைத் திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், தேர்தல் வாக்குறுதிகளை தமிழக அரசு படிப்படியாக செயலாக்கிக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்.

  வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  CM Edappadi Palanisamy says that no new districts will be separated in Tamilnadu hereafter.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X