ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ட்விஸ்ட்.. எடப்பாடி அணி வேட்பாளர் தென்னரசுவின் வேட்புமனு தாக்கல் ஒத்திவைப்பு.. ஏன்? என்ன நடந்தது?

எடப்பாடி பழனிசாமி சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவில் இன்று இடைக்கால உத்தரவு வர உள்ளது.

Google Oneindia Tamil News

ஈரோடு: இபிஎஸ் அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தென்னரசு வேட்புமனு தாக்கல் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருந்த நிலையில் ஒத்திவைப்பு உள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தமிழ்நாடு அரசியலில் பல சுவாரசிய திருப்பங்கள், சம்பவங்கள் நடந்து வருகின்றன. முக்கியமாக அதிமுகவிற்குள் பல அதிரடி மோதல்கள் தினம் தினம் நடந்து வருகிறது.

ஈரோடு கிழக்கில் ஒரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் சார்பாக வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளார். அதிமுக ஓபிஎஸ் அணியின் வேட்பாளராக செந்தில் முருகன் என்பவரை அவர்கள் தரப்பு களமிறக்கி உள்ளது.

போகியில் பிறந்த ஓட்டக்கார தேவர் பன்னீர்செல்வம்! டீ கடை டூ முதல்வர்! அரசியலில் சாதித்தது, சறுக்கியது! போகியில் பிறந்த ஓட்டக்கார தேவர் பன்னீர்செல்வம்! டீ கடை டூ முதல்வர்! அரசியலில் சாதித்தது, சறுக்கியது!

எடப்பாடி தரப்பு

எடப்பாடி தரப்பு

இன்னொரு பக்கம் ஈரோடு கிழக்கில் பாஜகவிற்கு காத்திருக்காமல் கே. எஸ் தென்னரசை எடப்பாடி பழனிசாமி தரப்பு தங்களின் அதிமுக அணி வேட்பளாரை அறிவித்து உள்ளது. அதோடு நேற்று புதிய கூட்டணியையும் எடப்பாடி உருவாக்கி இருந்தார். அதோடு பாஜகவை பற்றி கவலைப்படாமல் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியை நேற்று முதல்நாள் உருவாக்கி இருந்தார். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பதிலாக இந்த கூட்டணி உருவாக்கப்பட்டு இருந்தது. ஆனால் 6 மணி நேரத்தில் இந்த கூட்டணி அறிவிப்பு கைவிடப்பட்டது. பாஜக இதனால் என்ன செய்யும், வேட்பாளரை களமிறக்குமா, இறக்காதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாஜக

பாஜக

பாஜக இந்த தேர்தலில் கடுமையாக திணறி வருகிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமி சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவில் இன்று இடைக்கால உத்தரவு வர உள்ளது. அதிமுக பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும். இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கியதை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும். அதிமுக பொதுக்குழு மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும்.

 எடப்பாடி தரப்பு கோரிக்கை

எடப்பாடி தரப்பு கோரிக்கை

இடைத்தேர்தலில் எங்கள் சார்பில் வேட்பாளரை நிறுத்த விரும்புகிறோம் ஆனால் தேர்தல் ஆணையம் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்தை ஏற்க மறுக்கிறது. இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறையீட்டில் தேர்தல் ஆணையம் செய்துள்ள பதிலில், அதிமுக சார்பாஜ் ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவை நாங்கள் இன்னும் ஏற்கவில்லை. இந்த பொதுக்குழு நடந்த விதத்தை நாங்கள் இன்னும் ஏற்கவில்லை.

பொதுக்குழு விதம்

பொதுக்குழு விதம்

எடப்பாடியை இன்னும் நாங்கள் இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்கவில்லை. இரட்டை இலை சின்னம் தொடர்பாக வழக்கு எதுவும் நிலுவையில் இல்லை. இரட்டை இலை சின்னத்தை யாருக்கு கொடுப்பது என்று தேர்தல் நடத்தும் அலுவலர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அளித்த பதில் மனுவில் கூறப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த பதில் எடப்பாடி தரப்பிற்கு பெரிய பின்னடைவை கொடுத்துள்ளது. எடப்பாடி இடைக்கால பொதுச்செயலாளர் இல்லை, இப்போதும் ஓ பன்னீர்செல்வம்தான் ஒருங்கிணைப்பாளர் என்ற நிலை இதனால் ஏற்பட்டு உள்ளது.

பின்னடைவு

பின்னடைவு

இதனால் எடப்பாடி அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கலும் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் எடப்பாடி அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தென்னரசு வேட்புமனு தாக்கல் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருந்த நிலையில் ஒத்திவைப்பு உள்ளது. வரும் 7ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரட்டை இலை சின்னம் முடங்கும் நிலையில் இருக்கிறது. எடப்பாடி இடைக்கால பொதுச்செயலாளரே கிடையாது என்றும் கூறப்பட்டு உள்ளதால் கே. எஸ் தென்னரசு வேட்புமனு தாக்கல் செய்வது 7ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

English summary
Edappadi Palanisamy team candidate K S Thennarasu team not filing nomination today for Erode East by-election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X