ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீர்வரத்து குறைந்த போதிலும் 100 அடியுடன் கடல் போல் காட்சி அளிக்கும் பவானிசாகர் அணை

Google Oneindia Tamil News

ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்த போதிலும் நீர் மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Recommended Video

    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்த போதிலும் 100 அடியை எட்டிய நீர்மட்டம்

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாகும்.

    Erode Bhavanbi Sagar Dams water level retains 100 feet

    மொத்த கொள்ளளவு 32.8 டிஎம்சி ஆகும். கடந்த 4ஆம் தேதி முதல் நீலகிரி மலைப் பகுதியில் கனமழை பெய்ததால் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து இன்று காலை நிலவரப்படி 99.49 அடியாக உயர்ந்துள்ளது.

    Erode Bhavanbi Sagar Dams water level retains 100 feet

    இந்நிலையில் நீலகிரியில் மலைப்பகுதியில் மழையின் தாக்கம் குறைந்துள்ளதால் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 7 ஆயிரத்து 617 கன அடியாக உள்ளது.

    அணையில் நீர் இருப்பு 28.3 டிஎம்சி ஆகவும் அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 1100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    Erode Bhavanbi Sagar Dams water level retains 100 feet

    அணைக்கு நீர்வரத்து குறைந்த போதிலும் மொத்தம் 105 அடி உயரமுள்ள அணையில் இன்று நீர்மட்டம் 100 அடியை எட்டியதால் பாசனப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    முல்லைப்பெரியாறு அணை...வெள்ளப்பெருக்கு...மக்களுக்கு இடுக்கி மாவட்டக் கலெக்டர் எச்சரிக்கை!! முல்லைப்பெரியாறு அணை...வெள்ளப்பெருக்கு...மக்களுக்கு இடுக்கி மாவட்டக் கலெக்டர் எச்சரிக்கை!!

    English summary
    Erode Bhavanbi Sagar Dam's water level retains 100 feet despite water incoming slows.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X