ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆளே இல்லையாமே? "அந்த" முடிவை எடுக்க போகும் டிடிவி தினகரன்? ஓபிஎஸ்ஸுக்கு லக்.. அப்போது எடப்பாடி?

ஓபிஎஸ் அணி போட்டியிட்டால் அவருக்கு ஆதரவு கொடுத்துவிட்டு தேர்தலை புறக்கணிக்கலாமா என்ற யோசனையும் தினகரனுக்கு வந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

Google Oneindia Tamil News

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலுக்காக ஓபிஎஸ் பாணியில், டெல்டா மாவட்டம் மற்றும் தென் மாவட்டத்திலுள்ள தனது கட்சி நிர்வாகிகளை உள்ளடக்கி தேர்தல் பணிக்குழு பட்டியலை தயாரித்து வருகிறாராம் அமமுக டிடிவி தினகரன்.

ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலுக்காக 111 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை நேற்று எடப்பாடி பழனிசாமி தரப்பு நியமனம் செய்துள்ளது. ஈரோடு கிழக்கில் இந்த பணிக்குழு தற்போது தீவிரமாக பணிகளை செய்து வருகிறது. வேட்பாளரை அறிவிக்கும் முன் வார்டு வார்டாக பணிகளை செய்வது தொடர்பாக ஆலோசனைகளை செய்து வருகிறது. எடப்பாடி தரப்பின் இந்த வேகத்தால் ஓ பன்னீர்செல்வம் தரப்பும் திக்குமுக்காடி போய் உள்ளது.

இந்த நிலையில்தான் எடப்பாடிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தேர்தல் பணிக்குழுவை ஓபிஎஸ் தரப்பு நியமனம் செய்துள்ளாராம், நேற்று 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை ஓ பன்னீர்செல்வம் குழு நியமனம் செய்தது.

துரோகம், பதவி வெறி, சுயநலம்.. எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. டிடிவி தினகரன்! துரோகம், பதவி வெறி, சுயநலம்.. எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. டிடிவி தினகரன்!

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

இங்கே பாஜக போட்டியிடுவதாக இருந்தால் அவர்களுக்காக இந்த தேர்தல் பணிக்குழு வேலைகளை செய்யும். பாஜக போட்டியிடவில்லை என்றால் அதிமுக சார்பாக ஓ பன்னீர்செல்வம் கண்டிப்பாக வேட்பாளரை களமிறக்குவார், என்று ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார். இன்னொரு பக்கம் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சிவபிரசாந்த் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சென்னையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர்டிடிவி தினகரன் இதனை தெரிவித்தார். இதையடுத்து டிடிவி தினகரன் தேர்தல் பணிக்குழுவை விரைவில் அறிவிக்கவுள்ளாராம். ஆனால், ஓபிஎஸ்சுக்கு எப்படி வேட்பாளரே கிடைக்காத சூழல் இருக்கிறதோ, அதேபோல தேர்தல் பணிக்குழுவை அமைக்க தினகரனுக்கு ஆட்களே இல்லையாம்.

அமமுக

அமமுக

அதனால், ஓபிஎஸ் பாணியில், டெல்டா மாவட்டம் மற்றும் தென் மாவட்டத்திலுள்ள தனது கட்சி நிர்வாகிகளை உள்ளடக்கி தேர்தல் பணிக்குழு பட்டியலை தயாரித்து வருகிறாராம் தினகரன். எந்த மாவட்டத்தில் தேர்தல் நடக்கிறதோ அந்த மாவட்ட நிர்வாகிகளை பெரும்பான்மையாக கொண்ட தேர்தல் பணிக்குழு தான் தேர்தல் பணிகளை விரைந்து செயல்படுத்த ஏதுவாக இருக்கும். ஆனால், அத்தகைய ஆட்கள் தினகரன் கட்சிக்கும் இல்லை என்பதால் மற்ற மாவட்ட நிர்வாகிகளை இணைத்து பட்டியலை ரெடி செய்கிறார் என்கிறார்கள் அ.ம.மு.க.வினர்.

ஓபிஎஸ் அணி

ஓபிஎஸ் அணி

ஈரோட்டில் போதுமான ஆட்கள் இல்லை. இருக்கும் ஆட்களும் தேர்தல் வேலைகளை செய்யும் அளவிற்கு பெரிய கைகள் இல்லை. அதனால் டிடிவி தினகரன் இந்த முடிவை எடுத்துள்ளாராம். இதற்கிடையே, ஓபிஎஸ் அணி போட்டியிட்டால் அவருக்கு ஆதரவு கொடுத்துவிட்டு தேர்தலை புறக்கணிக்கலாமா என்ற யோசனையும் தினகரனுக்கு வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். தேர்தலை அவர் புறக்கணிக்கிறாரா ? இல்லையா ? என்பது ஓபிஎஸ்சின் வேட்பாளர் அறிவிப்பில் இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். தினகரனுக்கு இந்த சிந்தனை வருவதற்கு காரணமே, ''தேர்தல் செலவுகளை தினகரனே பார்க்க வேண்டும் என அவரது வேட்பாளர் தற்போது அழுத்தமாக சொல்லி வருகிறாராம். இதனால் தினகரன் அப்-செட்டாகியிருக்கிறார்.

எதுக்கு செலவு?

எதுக்கு செலவு?

பொதுவாக, ஜெயிப்பதற்கு 1 சதவீதம் கூட வாய்ப்பில்லாத போது தோத்துப் போகிற தேர்தலுக்காக எதற்கு செலவு செய்ய வேண்டும் ? தேர்தலை எதிர்கொள்ள அடிப்படைச் செலவுகளை கவனிப்பதற்கான தொகையை கணக்கிட்டால் கூட சுமார் 1 கோடி ரூபாய் தேவைப்படும். தோற்றுப் போவோம் என தெரிந்தும் 1 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டுமா? 1 கோடி என்பது பெரிய தொகைதானே ? என்று வேட்பாளர்கள் யோசிப்பதால் இந்த சிக்கலே. அதனால்தான் கட்சி தலைமையிடம் எதிர்பார்க்கிறார்கள். தினகரன் போன்றவர்கள் அதை தர மறுக்கிற போதுதான், வேட்பாளர்களுக்கும் கட்சி தலைமைக்கும் கருத்து வேறுபாடு வருகிறது'' என்று சொல்கிறார்கள் அ.ம.மு.க.வினர்.

English summary
Erode East By election: TTV Dinakaran struggling to find members for ground works.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X