ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிறுநீரகம் தானம் செய்தால் ரூ. 3 கோடி.. தனியார் மருத்துவமனையின் பெயரில் அப்பாவிகளை வளைக்கும் கும்பல்

Google Oneindia Tamil News

ஈரோடு: சிறுநீரகத்தை தானம் செய்தால் ரூ 3 கோடி என ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை பெயரில் மோசடி நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

இன்றைய காலகட்டங்களில் உறுப்பு திருட்டு என்பது பரவலாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதை கட்டுப்படுத்த போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் ஒரு புகாரை தெரிவித்துள்ளார். அதில் தங்கள் மருத்துவமனையின் பெயரை பயன்படுத்தி பண மோசடியில் சிலர் ஈடுபடுகின்றனர்.

தேசபக்தியாளர்களே.. தமிழ்தான் சுத்தமான மொழி.. அதை படிங்க.. இந்தி நடிகர் அதிரடி தேசபக்தியாளர்களே.. தமிழ்தான் சுத்தமான மொழி.. அதை படிங்க.. இந்தி நடிகர் அதிரடி

நிர்வாகம் புகார்

நிர்வாகம் புகார்

சிறுநீரகம் தானம் செய்தால் ரூ 3 கோடி பணம் கிடைக்கும் என எங்கள் மருத்துவமனையின் பெயரை குறிப்பிட்டு மோசடியில் ஈடுபடும் கும்பலை கைது செய்ய வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் புகார் அளித்துள்ளது.

கும்பல்

கும்பல்

இதற்கு பதிவு கட்டணமாக குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என வாட்ஸ் ஆப் மூலம் அந்த கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருகிறது. மருத்துவமனையின் முகவரியை கொண்டு போலியாக பேஸ்புக் பக்கத்தையும் அந்த கும்பல் உருவாக்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

நிர்வாகம்

நிர்வாகம்

மருத்துவமனையின் பெயரை தவறாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வரும் நபர்களை கைது செய்ய வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. போலி பேஸ்புக் கணக்கு தொடங்கிய கும்பல் குறித்து அவர்கள் கொடுத்துள்ள ஈரோடு மருத்துவமனையின் தொலைபேசி எண்ணுக்கு ஒரு பெண் போன் செய்து விவரம் விசாரித்த போதுதான் இந்த மோசடி குறித்து மருத்துவமனைக்கு தெரியவந்தது.

தடுத்து நிறுத்த வேண்டும்

தடுத்து நிறுத்த வேண்டும்

மேலும் பல அப்பாவி நபர்களிடம் இருந்து பணம் பறிக்கும் எண்ணத்துடன் நடைபெறும் இந்த உறுப்பு தானத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வீரப்பன்சத்திரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

English summary
Erode Hospital Administration gives complaint against fake organ donor group and seeks necessary action.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X