ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சோதனையின்போது திடுக்.. ஈரோடு எம்பி கணேசமூர்த்தியை தாக்கிய மின்காந்த அலை! ட்யூப் லைட் எரிந்த விபரீதம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Erode MP Ganesamoorthy: ஈரோடு எம்பி கணேசமூர்த்தியை தாக்கிய மின்காந்த அலை- வீடியோ

    ஈரோடு: உயர் அழுத்த மின் கோபுரம் கீழே நின்ற ஈரோடு எம்பி கணேசமூர்த்தி மின்காந்த அலை தாக்குதலுக்கு உள்ளாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஈரோடு உள்பட மேற்கு மண்டலத்தின் பல மாவட்டங்களில் விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல மாதங்களாகவே போராடி வருகிறார்கள்.

    உயர்மின் கோபுரங்கள் உயரமாக இருப்பதால், கீழே சென்றால், மின்சாரம் தாக்காது என்பது மின்சாரத்துறை, சமாதானமாக உள்ளது. ஆனால், மின்சார கம்பியின் கீழ், யாராவது சென்றால் கூட, மின்காந்த புலன் பாயும் என்று, விவசாயிகள் அச்சத்தை தெரிவித்து வருகிறார்கள்.

    அணுக்கழிவை எதிர்த்த நாங்க தேச துரோகிகள்.. அப்ப கர்நாடகா பாஜக?.. பூவுலகின் நண்பர்கள் பொளேர் கேள்வி அணுக்கழிவை எதிர்த்த நாங்க தேச துரோகிகள்.. அப்ப கர்நாடகா பாஜக?.. பூவுலகின் நண்பர்கள் பொளேர் கேள்வி

    நேரடி ஆய்வு

    நேரடி ஆய்வு

    இவ்வாறான சூழ்நிலையில், விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான், ஈரோடு தொகுதி எம்.பி. கணேசமூர்த்தி (மதிமுக), ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே உள்ள மூணாம்பள்ளி என்ற கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர்மின் கோபுரத்தின் கீழ் நின்று நேரடியாக ஆய்வு செய்தார்.

    ட்யூப் லைட்டுகள்

    ட்யூப் லைட்டுகள்

    உயர்மின் கோபுரத்தின் கீழ் நின்றாலும், மின்சாரம் பாய்கிறதா என்பதை கண்டறிய தன்னுடைய உடலில் டெஸ்டரை வைத்து பார்த்தார். உடனே டெஸ்டரில் இருந்து விளக்கு ஒளிர்ந்தது. உடலில் மின்சாரம் பாய்கிறது என்பதை இது பட்டவர்த்தனமாக காட்டியது. இதேபோல, தனது கைகளில் 2 ட்யூப் லைட்டுகளை அவர் பிடித்துக் கொண்டார். என்ன ஆச்சரியம், வயர் இணைக்கப்படாமலே, ட்யூப் லைட் எரிந்தது.

    மத்திய அரசிடம் சொல்வேன்

    இதுகுறித்து அவர் கூறியதாவது: உயர்மின் கோபுரத்தின் கீழ் நின்றுகொண்டு உடலில் டெஸ்டரை வைத்து பார்த்தால் மின்சாரம் பாய்ந்து விளக்கு எரிகிறது. இதை அறிக்கையாக தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளேன். மேலும் இதுகுறித்த புகைப்படங்களை நாடாளுமன்றத்தில் காட்டி பேச உள்ளேன். மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர், மின்சாரத்துறை அமைச்சரிடமும், இந்த பிரச்சினையை கொண்டு செல்லப் போகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    மின்காந்த அலைகள்

    மின்காந்த அலைகள்

    மின்காந்த அலைகள் உடலில் பாயும்போது, மக்களுக்கு நிறைய நோய் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பும், விளை நிலங்களில் தென்னை உள்ளிட்ட மரங்கள் பட்டுப்போகவும் வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் விவசாயிகள்.

    English summary
    Erode MP Ganesamoorthy involving himself for testing electricity attack under the power transmission tower.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X