India
  • search
ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"6 அபார்ஷன்".. காம கொடூரன் அப்பவும் என்னை விடல.. டைல்ஸ் கடை உள்ளேயே.. விட்ராதீங்க சார்.. கதறும் பெண்

Google Oneindia Tamil News

ஈரோடு: தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண்ணின் நிலைமை சீரியஸாக உள்ள நிலையில், அது தொடர்பான விசாரணை மும்முரமாகி உள்ளது.. கடந்த 2 நாட்களாகவே இந்த சம்பவத்தின் பரபரப்பு இன்னமும் ஈரோட்டில் அடங்கவில்லை.

ஈரோடு மாவட்டம் கர்ணாபுரத்தைச் சேர்ந்தவர் அந்த பெண்.. 37 வயதாகிறது.. கல்யாணமாகி 12 வருடமாகிறது.. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்துவிட்டார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாற்றுத் திறனாளிகளுக்கான 'வாரியம்’.. 3 எம்.எல்.ஏக்களும் நியமனம்!முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாற்றுத் திறனாளிகளுக்கான 'வாரியம்’.. 3 எம்.எல்.ஏக்களும் நியமனம்!

பெற்றோருடன் வசித்து வருகிறார்.. அந்த பகுதியில் உள்ள, சிமெண்ட் டைல்ஸ் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்..

 தனிமையில் பெண்

தனிமையில் பெண்

கணவரை பிரிந்து தனிமையில் வசிக்கிறார் என்றதுமே, அந்த டைல்ஸ் கடை ஓனர் இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டார்.. அவர் பெயர் நவநீதன்.. "ஆதரவு தருகிறேன்" என்ற பெயரில் பெண்ணிடம் நெருங்கிப்பழகி வந்திருக்கிறார். தன் ஆசையை பலமுறை அந்த பெண்ணிடம் தீர்த்து கொண்டுள்ளார்.. சூழல் காரணமாக, இந்த பெண்ணும் அதற்கு எந்தவிதமான எதிர்ப்பையும் காட்டவில்லை என தெரிகிறது..

உறவு

உறவு

அதைவிட கொடுமை, பெண்ணிடம் உறவு வைத்திருப்பது, அந்த ஓனரின் மனைவிக்கும் தெரியுமாம்.. ஆனால் அவர் பெரிதாக இதை எடுத்து கொள்ளவில்லை. அதற்கு காரணம், இந்த தம்பதிக்கு நீண்ட காலமாகவே குழந்தை இல்லை.. இதனால் மனம் வெறுத்து போயிருந்த மனைவி, கணவரின் காரியத்தை கண்டுக்கொள்ளாமல் இருந்ததாக தெரிகிறது.. இதுவும் ஓனருக்கு வசதியாக போய்விட்டது.. அதனால், மனைவிக்கு தெரிந்தே, அந்த பெண்ணிடம் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்திருக்கிறார்..

 அபார்ஷன்

அபார்ஷன்

இப்படியே 11 வருடங்கள் ஓடிவிட்டது.. அந்த பெண் 6 முறை கர்ப்பம் அடைந்துள்ளார்.. 6 முறையும் அபார்ஷன் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளார் டைல்ஸ் ஓனர்.. இப்போது அந்த ஓனர் தொல்லை அதிகமாகிவிட்டதாம்.. நிறைய பாலியல் டார்ச்சர் தருகிறாராம். இதனால், மனம் நொந்துபோன அந்த பெண், தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்கொலைக்கு முன்பு ஒரு வீடியோவை பேசி வெளியிட்டிருந்தார்..

டார்ச்சர்

டார்ச்சர்

அதில், விநாயகா செராமிக்ஸ் சிமெண்ட் டைல்ஸ் கடையில் 11 வருஷமாக வேலை பார்த்து வருகிறேன்... அந்த கடையின் ஓனர் நவநீதன் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்... 6 முறை இதுவரைக்கும் அபார்ஷன் செய்துவிட்டேன்.. என் மரணத்துக்கு காரணம் விநாயகா செராமிக்ஸ் டைல்ஸ் கடையின் ஓனர் நவநீதனும், அவரது குடும்பத்தினரும் தான்" என்று தெள்ளத்தெளிவாக பேசியிருந்தார். பிறகு, கோவை ஆர்எஸ் புரத்தில் உள்ள நவநீதன் வீட்டுக்கு முன்பு நின்று கொண்டு, மண்ணெண்ணை எடுத்து தன் உடம்பெல்லாம் ஊற்றி தீக்குளித்திருக்கிறார்.

 வெந்து போன உடம்பு

வெந்து போன உடம்பு

உடம்பெல்லாம் வெந்துபோய் அலறிய பெண்ணை, அங்கிருந்தோர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கிறார்கள்.. போலீசாரும் விரைந்து சென்று, பெண்ணிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.. போலீசாரிடமும் கதறி அழுதுள்ளார் அந்த பெண்.. "அந்த ஓனரை விட்டுடாதீங்க சார்.. சரியான தண்டனை கொடுங்கள்... அப்பதான் என்னை போல, அப்பாவி பெண்கள் இனியாவது பாதிக்கப்படாமல் இருப்பார்கள்.. இவர்களிடம் சிக்கி கொண்டு, பாதிக்கப்படும் நான்தான் கடைசி ஆளாக இருக்க வேண்டும்.. அந்த நவநீதன் பொய் சொல்வார்.. அதையெல்லாம் நம்பாதீங்க.. நடந்தது இதுதான்.. அவர் தந்த தொல்லை தாங்காமல்தான் நான் தீக்குளித்தேன்" என்றார்.

 வாக்குமூலம்

வாக்குமூலம்

ஆனால், இந்த பெண் தீக்குளித்ததுமே அதற்கு வேறு ஒரு காரணம் சொல்லப்பட்டது.. வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், கடை ஓனரிடம் பணம் கேட்டாராம், அதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்ததால் தீக்குளித்ததாகவும் சொல்லப்பட்டது.. ஆனால், இந்த உயிருக்கு போராடி வரும் பெண்ணின் வாக்குமூலம் அடிப்படையிலும், வீடியோவின் அடிப்படையிலும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி தந்திருக்கிறார்கள்.. இப்போது அந்த பெண் மிகவும் சீரியஸாக இருக்கிறாராம்.. தீவிரமான சிகிச்சை தரப்பட்டு வருகிறது..!

English summary
Erode woman complaint against her owner and unable to bear the sexual harassment பாலியல் தொல்லை காரணமாக, இளம்பெண் தற்கொலைக்கு முயன்றார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X