ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அன்னைக்கு குஷ்புவை விட்டு கொடுக்காமல் பேசினாரே ஈவிகேஎஸ்.. இன்னைக்கு எப்படி சொல்கிறார் பாருங்க..!

பாஜகவில் இணைந்துள்ள குஷ்பு குறித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

ஈரோடு: அன்னைக்கு குஷ்புவை விட்டுக் கொடுக்காமல் அவ்வளவு பேசினாரே ஈவிகேஎஸ் இளங்கோவன், இன்று "குஷ்பு எங்கிருந்தாலும் வாழ்க" என்று கூறியுள்ளார்.

ஈரோடு கருங்கல்பாளையத்தில் காந்தி சிலை அமைத்து 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன் சொன்னதாவது:

EVKS Elangovan says about Kushboo joining in BJP

"ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை 7 பேரும் குற்றவாளிகள் இல்லை என்ற பொதுவான கருத்து பரவி வரும் நிலையில் அந்த கருத்து உண்மை என்றால் அவர்களை விடுதலை செய்வதில் ஆட்சேபம் ஏதும் இல்லை எனினும் சட்டம் என்ன சொல்கிறதோ அதை ஏற்றுக் கொள்வோம்.

திருமாவளவன் கூறிய கருத்தில் எந்த விதமான தவறும் இல்லை . அது 100% உண்மை.. திமுகவுடன் கூட்டணி என்பது தேர்தலுக்காக அல்ல.. கொள்கையுடன் ஒத்தகருத்து உடனே இருக்கின்றோம்... தேர்தல் நேரத்தில்காங்கிரஸிற்கு குறைவான இடங்களே தருவார்கள் என்பது கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முயற்சி.

பாஜக என்ன குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழக மக்கள் அந்த கட்சியை எப்போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.. குஷ்பூ பிஜேபிக்கு சென்றதை பற்றி எனக்கு கவலையில்லை எங்கிருந்தாலும் வாழ்க.. சொல்வதற்கு ஒன்றும் கிடையாது" என்றார்.

நல்ல ஆம்பளையா இருந்தா என் ஊருக்கு வா.. என்ன மிரட்டுறே, ஸ்டாலின் மீது ராஜேந்திர பாலாஜி ஷாக் பாய்ச்சல்நல்ல ஆம்பளையா இருந்தா என் ஊருக்கு வா.. என்ன மிரட்டுறே, ஸ்டாலின் மீது ராஜேந்திர பாலாஜி ஷாக் பாய்ச்சல்

குஷ்பு குறித்து கூறிய கருத்துதான் தற்போது ஆச்சரியமாக பார்க்கப்பட்டு வருகிறது.. இதற்கு காரணம், அன்று குஷ்பு காங்கிரசில் சேர்ந்த புதிதில், "2016ஆம் ஆண்டில், தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அமைச்சரவையில் குஷ்புவிற்கு கட்டாயம் இடம் தரப்படும்" என்றார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

அதேபோல, தான் பேசும் மேடைகளில் எல்லாம் 2016ல் தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு ஆட்சியை பிடிக்கும் என்றும் முதல்வராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அமர்வார் என்றும் கூறி காங்கிரஸ் கட்சியினருக்கே ஷாக் மேல் ஷாக் தந்தார் குஷ்பு.. கடைசியில் இது ரெண்டுமே நடக்கவே இல்லை.

கேஎஸ் அழகிரிக்கு முன்பு, குஷ்புவை மாநில தலைமைக்கு முயற்சித்து வருவதாகவும் சொல்லப்பட்ட நிலையில், ஈவிகேஎஸ் இன்று , குஷ்பு எங்கிருந்தாலும் வாழ்க என்று சொல்லி உள்ளது வாழ்த்தா? விரக்தியா? என்று தெரியவில்லை.

English summary
Congress Senior Leader EVKS Elangovan says about BJPs Kushboo
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X