ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டம்மு டம்முன்னு பெரிய பெரிய கல் வீட்டு மேலே விழுது.. குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்ற 7 பேர்!

Google Oneindia Tamil News

ஈரோடு: டம்முன்னு டம்முன்னு.. பெரிய பெரிய கல் எப்ப பார்த்தாலும் எங்க வீட்டு கூரை மேல வந்து விழுது.. எப்போ எங்க தலை மேலே விழுமோன்னு பயந்து பயந்து சாக வேண்டி இருக்கு. அதுக்கு நாங்க ஒரேடியாக செத்துவிடுகிறோம்" என்று சட்டவிரோத கல்குவாரி மீது நடவடிக்கை கோரி ஒரு குடும்பமே தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது!

பவானி அருகே உள்ள மைலம்பாடி அருகே் கன்னாங்கரட்டில் வசித்து வருபவர்கள் அர்ஜூன் சிவராஜ் மற்றும் பத்து குடும்பத்தினர். சிவராஜ் அர்ஜூன் ஒரு விவசாய கூலி தொழிலாளி.

மர்மம் உடைகிறது.. ராஜ ராஜ சோழன் நினைவிடத்தில் நவீன தொழில்நுட்ப ஆய்வு.. 25ம் தேதி அறிக்கை: ஹைகோர்ட் மர்மம் உடைகிறது.. ராஜ ராஜ சோழன் நினைவிடத்தில் நவீன தொழில்நுட்ப ஆய்வு.. 25ம் தேதி அறிக்கை: ஹைகோர்ட்

இவர்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான இடமும் அதனையொட்டி அதிமுக பிரமுகருக்கு சொந்தமான சட்ட விரோத கல் குவாரியும் உள்ளது. இந்த கல் குவாரியில் வெடி வைத்து பாறைகளை தகர்க்கிறார்கள் என்று தெரிகிறது.

புகார்கள்

புகார்கள்

இப்படி பாறைகளை உடைக்க வெடி வைக்கும்போதுதான் பெரிய பெரிய கற்கள் இவர்கள் வீட்டு கூரை மீது விழுவதாக சொல்லப்படுகிறது. இந்த கல்குவாரி சட்டவிரோதமாகவும் செயல்படுவதாக கூறி, பலமுறை ஈரோடு மாவட்ட கலெக்டரிடம் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் குவாரி அதிமுகவினருக்கு சொந்தமானது என்பதால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டுகிறார்கள்.

வாக்குறுதி தந்தார்

வாக்குறுதி தந்தார்

இதனிடையே போன மாசம் அப்பகுதியில் பூமி பூஜை போட பவானி தொகுதி என்பதால் தமிழக சுற்றுசூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் சென்றிருக்கிறார். அவரிடமும் அர்ஜூன் சிவராஜ், பத்து குடும்பத்தினர் சொல்லி முறையிட்டுள்ளனர். குவாரியை அகற்றுகிறேன் என்று சொல்லிவிட்டு போனவர், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

பெரிய பெரிய கற்கள்

பெரிய பெரிய கற்கள்

இதனால் ஆத்திரமடைந்த அர்ஜுன் சிவராஜ் குடும்பத்தை சேர்ந்த 5 பெண்கள் உட்பட 7 பேரும் கலெக்டர் ஆபீசுக்கு வந்தனர். "பெரிய பெரிய கல் வீட்டு கூரை மேல வந்து விழுது. எப்போ மேல விழும்னு தெரியல. தினம் தினம் செத்து பொழைக்க வேண்டியிருக்கு. அதுக்கு நாங்க ஒரேடியாக சாகிறோம்" என்று சொல்லி மண்ணெண்ணையை 7 பேரும் ஊற்றி கொண்டு தீ வைத்து கொள்ள முயன்றனர்.

ஒப்படைப்பு

ஒப்படைப்பு

ஆனால் அதற்குள் அங்கிருந்தவர்கள் விரைந்து வந்து அவர்களை தடுத்து நிறுத்தி சூரம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் 7 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்!

English summary
A Family attempt suicide for to take action against illegal stone quarry run near Erode
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X