ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

போராட்டத்திற்கு வெற்றி.. ஈரோட்டில் கருணாநிதிக்கு சிலை வைத்த திமுக.. சொன்னபடி செய்த ஸ்டாலின்!

ஈரோட்டில் உள்ள பன்னீர்செல்வம் பூங்காவில் மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

ஈரோடு: ஈரோட்டில் உள்ள பன்னீர்செல்வம் பூங்காவில் மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் சிலை நிறுவப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் சிலையை ஈரோட்டில் நிறுவ வேண்டும் திமுக பல வருடங்களாக கோரிக்கை வைத்து வந்தது. கருணாநிதியின் அரசியல் வரலாறு ஈரோட்டில் தொடங்கியது என்று கூட கூறலாம்.

Former CM Karunanidhis statue opened in Erode by DMK chief M K Stalin

ஈரோட்டில்தான் கருணாநிதி, பெரியார் உடன் நெருக்கம் ஆனார். பெரியாரிடம் கருணாநிதி அரசியல் கற்க ஈரோடுதான் உதவியது. கருணாநிதியின் அரசியல் பாசறையே ஈரோடுதான் என்று பலரும் கூறுவார்கள். அறிஞர் அண்ணாவுடன் கருணாநிதி நெருக்கமானது இங்குதான். அதேபோல் இங்கிருந்துதான் குடியரசு நாளிதழ் நடத்தப்பட்டு வந்தது.

திமுக கூட்டணி எம்.பிக்கள் 4 பேரின் பதவிக்கு சிக்கல்?.. விளக்கம் கேட்டு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்!திமுக கூட்டணி எம்.பிக்கள் 4 பேரின் பதவிக்கு சிக்கல்?.. விளக்கம் கேட்டு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்!

இதனால் ஈரோட்டில் உள்ள பன்னீர்செல்வம் பூங்காவில் சிலை வைக்க திமுக முயற்சி செய்தது. ஆனால் அதற்கு அதிமுக அரசு அனுமதி வழங்காமல் இருந்தது. இதையடுத்து ஈரோட்டில் பேருந்து நிலையம் எதிரே திமுகவினர் சொந்த இடத்தில் கருணாநிதிக்கு சிலை வைத்தனர்.

Former CM Karunanidhis statue opened in Erode by DMK chief M K Stalin

ஆனால் பன்னீர்செல்வம் பூங்காவில் எம்ஜிஆர், அண்ணா, பெரியார் சிலை இருக்கிறது. அதனால் இதற்கு அருகே கருணாநிதி சிலை வைக்க வேண்டும் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இதற்கு அரசு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து சென்னை ஹைகோர்ட்டில் திமுக வழக்கு தொடுத்து அனுமதி வாங்கியது.

ஹைகோர்ட் அனுமதியை தொடந்து தற்போது ஈரோட்டில் உள்ள பன்னீர்செல்வம் பூங்காவில் கருணாநிதியின் வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று கருணாநிதியின் வெண்கல சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதையடுத்து தொண்டர்கள் மத்தியில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், பெரும் போராட்டத்திற்கு பின் இந்த சிலை திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அண்ணா, எம்ஜிஆர், பெரியார் சிலைக்கு அருகில் கருணாநிதியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்காக பல தியாகங்களை செய்தவர் கருணாநிதி. தன்னுடைய கடைசி மூச்சு வரை அவர் மக்களுக்காக குரல் கொடுத்தார். கருணாநிதியின் அரசியல் பாசறை ஈரோடுதான்.

இந்திரா காந்தியின் எமர்ஜென்சியை எதிர்த்தவர் கருணாநிதி. இந்திரா காந்தி தூதர்களின் சமாதானத்தை ஏற்க மறுத்து ஆட்சியை பறி கொடுத்தவர் கருணாநிதி.

கருணாநிதியின் வாழ்க்கையே போராட்டம் தான், பள்ளியிலும் போராடியே சேர்ந்தார். கல்லக்குடி என பெயர் மாற்றத்துக்காக போராட்டம் நடத்தியவர் கருணாநிதி. இப்போது பெரும் போராட்டத்திற்கு பின் அதேபோல் அவரின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை திறந்து வைத்தது பெரிய மனநிறைவை தருகிறது, என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Former CM Karunanidhi's statue opened in Erode by DMK chief M K Stalin today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X