ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏக குஷியில் எடப்பாடி.. இன்றே கிளைமேக்ஸ்.. 7 மணிக்கு எல்லாம் முடிகிறது.. இறுதியாகும் அதிமுக வேட்பாளர்

Google Oneindia Tamil News

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலுக்கான அதிமுக பொது வேட்பாளர் தேர்விற்கான காலக்கெடு இன்றோடு முடிகிறது. அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் இன்று இரவு 7 மணிக்குள் தங்களின் விருப்பமான வேட்பாளர் பெயர் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனிடம் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலை முன்னிட்டு உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி சார்பாக தேர்தல் ஆணையத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், அதிமுக பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும்.

இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கியதை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும். அதிமுக பொதுக்குழு மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும், என்று மனுதாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது இரட்டை இலை சின்னத்தையும் எடப்பாடி தரப்பு கேட்டு இருந்தது.

ஈரோடு கிழக்கு..இபிஎஸ் லைனுக்கு வரும் ஓபிஎஸ்..வேட்பாளரை வாபஸ் பெற திட்டம்..பரபர ஆலோசனை ஈரோடு கிழக்கு..இபிஎஸ் லைனுக்கு வரும் ஓபிஎஸ்..வேட்பாளரை வாபஸ் பெற திட்டம்..பரபர ஆலோசனை

இரட்டை இலை

இரட்டை இலை

இந்த முறையீட்டில் தேர்தல் ஆணையம் செய்துள்ள பதிலில், அதிமுக சார்பாஜ் ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவை நாங்கள் இன்னும் ஏற்கவில்லை. இந்த பொதுக்குழு நடந்த விதத்தை நாங்கள் இன்னும் ஏற்கவில்லை. எடப்பாடியை இன்னும் நாங்கள் இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்கவில்லை, என்று கூறியுள்ளது. எடப்பாடி பழனிசாமி சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் இன்று விசாரணை நடந்து வந்தது. இதில் கடந்த வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு ஒன்றை வெளியிட்டது.

இடைக்கால உத்தரவு

இடைக்கால உத்தரவு

அதன்படி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும், அதை பொதுக்குழு உறுப்பினர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் இடம்பெறலாம். வேட்புமனுவில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்து போடட்டும். இந்த உத்தரவு இடைத்தேர்தலுக்காக மட்டுமே, என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுக்குழுவை உடனே கூட்ட முடியாத பட்சத்தில் கடிதம் மூலம் பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆலோசனையை பெற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு இடைக்கால உத்தரவு போடப்பட்டது.

தீர்மானம்

தீர்மானம்

இதையடுத்து வேட்பாளரை தேர்வு செய்யும் அதிமுக ஏ மற்றும் பி பார்மில் கையெழுத்து போட அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. இவருக்கான அதிகாரம் வழங்கி அதிமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் சார்பாக வாக்கு சீட்டு ஒன்று பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதில் அதிமுக வேட்பாளராக கே. எஸ் தென்னரசுவை அங்கீகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. அவரின் பெயரை டிக் அடிக்க கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

கோரிக்கை

கோரிக்கை

அவர் இல்லாத பட்சத்தில் இருக்கின்ற பாக்சில் பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களுக்கு விருப்பமான நபர்களின் பெயர்களை தேர்வு செய்ய முடியும். பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களுக்கு விருப்பமான நபர்களின் பெயர்களை அதில் குறிப்பிட முடியும். இந்த வாக்கு சீட்டுடன் தமிழ் மகன் உசேனுக்கு வேட்பளாரை தேர்வில் கையெழுத்து போட அதிகாரம் அளித்த தீர்மானமும் இடம்பெற்று உள்ளது. இந்த இரண்டும் பொதுக்குழு உறுப்பினர்கள் 2675 பேருக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. அவர்கள் இதை பூர்த்தி செய்து இன்று மாலை 7 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

7 மணி வரை

7 மணி வரை

இன்று மாலை 7 மணிக்குள் மாவட்ட செயலாளர்கள் வாயிலாக இதை அதிமுக தலைமையகத்திற்கு அனுப்ப வேண்டும். அதன்பின் அதிக வாக்குகள் கொண்ட வேட்பாளரை தமிழ் மகன் உசேன் தேர்வு செய்வார். இதனால் எடப்பாடி தரப்பு வேட்பாளர் தென்னரசுக்கு பொதுக்குழுவில் எத்தனை வாக்குகள், ஓ பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் செந்திலுக்கு எத்தனை பொதுக்குழுவில் வாக்குகள் என்பதுதான் இறுதியில் முக்கியத்துவம் பெரும். அதில் அதிக வாக்குகள் பெற்றவரை பொது வேட்பளாராக அறிவித்து, அதில் தமிழ் மகன் உசேன் கையெழுத்து போடுவார். அவர் போடும் கையெழுத்தே இப்போது முக்கியம். பொதுக்குழு எடப்பாடி பக்கம் நின்றால் அவரின் வேட்பாளர் தேர்வாவர். அதுவே ஓ பன்னீர்செல்வம் பக்கம் நின்றால் அவரின் வேட்பாளர் தேர்வாவர். இவர் பொது வேட்பாளர் என்பதால் இரட்டை இலை அவருக்கே கிடைக்கும். சின்னம் முடங்காது.

English summary
General candidate for Erode East from AIADMK: General council members to send their choice by today 7 PM.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X