ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னதிது.. வெள்ளையா பெருசா.. பக்கத்துலயே சுடுகாடு வேறு இருக்காமே.. அலறி ஓடிய ஈரோட்டு மக்கள்!

ஈரோடு மாவட்ட எல்லையில் பேய் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

ஈரோடு: என்னதிது.. வெள்ளையா.. பெருசா.. என்று மக்கள் தெறித்து ஓடுகிறார்கள்.. அப்படி ஒரு சிசிடிவி காட்சி ஈரோட்டில் வைரலாகி வருகிறது.

Recommended Video

    திடீரென ரோட்டில் தோன்றிய வெள்ளை உருவம்..வெளியான சிசிடிவி காட்சி

    ஈரோட்டில் இருந்து சேலம், நாமக்கல் மாவட்டங்களுக்கு செல்லும் மாவட்ட எல்லையில் காவிரி ஆறு பாய்ந்து செல்கின்றது.... இந்த ஆற்றங்கரை பக்கம் ஒரு சுடுகாடும் உள்ளது. அந்த பக்கத்தில் யார் இறந்தாலும் இங்குதான் கொண்டு வந்து புதைப்பது வழக்கம்.. எரிக்கும் தகன மேடையும் இங்குதான் உள்ளது.

     ghost: the fear of the ghost in erode distrcit

    இங்கு, ஈரோட்டில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்லும் மாவட்ட எல்லை செக்போஸ்ட்களில் மற்ற மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை பரிசோதனை செய்து போலீசார் அனுப்பி வைக்கின்றனர்.. மேலும் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராவை கொண்டும் வாகன சோதனைகளை கண்காணித்து வருகின்றனர். அப்படித்தான் ஒருநாள் சிசிடிவி கேமிராவை பார்த்தனர்.

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து ஈரோடு மாவட்ட எல்லைக்கு உள்ளே வரும் வழியில் சாலையை அகலப்படுத்தும் பணிக்காக ஒரு சிமெண்ட் மூட்டை பை வைக்கப்பட்டிருந்தது.. அந்த பையில் இருந்து சிறியதாக வெள்ளை கலரில் ஒரு உருவம் தோன்றியது.. சின்னதாக தோன்றிய அந்த உருவம் கிட்ட வர வர பெரிசாகி கொண்டே வந்தது.

    கதற கதற.. மொத்தம் 40 பெண்கள்.. 10 வயசு குழந்தை முதல் கிழவி வரை.. ஒரு வருஷத்துல.. பயங்கர வாலிபன்!கதற கதற.. மொத்தம் 40 பெண்கள்.. 10 வயசு குழந்தை முதல் கிழவி வரை.. ஒரு வருஷத்துல.. பயங்கர வாலிபன்!

    நடுரோட்டில் ஒரு வெள்ளை உருவம் பூதாகரமாக வந்து கொண்டே இருந்தது.. பிறகு திடீரென எதிரே வந்து கொண்டிருந்த ஒரு காரில் மறைந்துவிட்டது.. சிசிடிவியில் இதனை பார்த்த போலீசாருக்கு தூக்கி வாரிப்போட்டது. பக்கத்திலேயே சுடுகாடு இருப்பதால் இன்னும் அள்ளு கிளம்பி உள்ளது.. அந்த செக் போஸ்ட்டில் இருக்கும்போதே கிலியால் உறைந்தும் உள்ளனர்.. அது என்ன பேயா? பிசாசா என தெரியவில்லை.

    இந்த எல்லையில் மட்டும் பேய் உள்ளதா, அல்லது அந்த பகுதி முழுவதும் அந்த வெள்ளை உருவம் நடமாடி வருகிறதா தெரியவில்லை.. ஆனால் இந்த வெள்ளை உருவம் வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது... பேய் இருக்கா, இல்லையா என்ற ஆராய்ச்சி ஒரு பக்கம் காலங்காலமாக நடந்து வந்தாலும், பேய் குறித்த பீதி மட்டும் அப்படியே நம்முடனேயே பயணித்து வருகிறது.

    English summary
    ghost: the fear of the ghost in erode distrcit
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X