ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஈரோடு மாவட்டத்தில் வாரத்தில் 3 நாட்கள் மளிகை கடைகள் இயங்காது.. கலெக்டர் அறிவிப்பு

Google Oneindia Tamil News

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அந்த மாவட்டத்தில் வாரத்தில் 3 நாட்கள் மளிகை கடைகள் இயங்காது என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Recommended Video

    144 தடை நேரத்தில் வெளியே செல்ல ஆன்லைன் பாஸ் | Emergency Travel Pass | EPASS Apply Online | Tamilnadu

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1242 ஆக உயர்ந்துள்ளது.

    Grocery stores no longer operate 3 days a week in Erode district

    தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக திருவள்ளூர், நாகப்பட்டினத்தில் தலா 7 பேருக்கும் , ஈரோட்டில் 6 பேருக்கும் சென்னையில் 5 பேருக்கும், செங்கல்பட்டு சேலத்தில் தலா 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில கொரோனா பாதித்தவர்க்ளின் எண்ணிக்கை 6 உயர்ந்துள்ளதால் ஒட்டுமொத்தமாக ஈரோட்டில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க ஈரோடு மாவட்ட நிர்வாகம் விழிப்புடன் செயலாற்றி வருகிறது . மாவட்ட காவல்துறையினர் 24 மணி நேரமும் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

    வாணியம்பாடி நாளை முதல் 100% கட்டுப்படுத்தப்பட்ட பகுதி.. அனைத்து வார்டும் சீல்.. கலெக்டர் அறிவிப்புவாணியம்பாடி நாளை முதல் 100% கட்டுப்படுத்தப்பட்ட பகுதி.. அனைத்து வார்டும் சீல்.. கலெக்டர் அறிவிப்பு

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் ஞாயிறு, வெள்ளி மற்றும் புதன்கிழமைகளில் மளிகை கடைகள் இயங்காது என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். காய்கறிகளை ஒரே நேரத்தில் தேவையான அளவு வாங்கி வைத்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கதிவரன் அறிவுறுத்தியுள்ளார். இதன்படி திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய நான்கு நாட்கள் மட்டுமே அரசு அனுமதித்த நேரத்தில் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நபர்களில் 13 நபர்கள் இன்று குணம் அடைந்து வீடு திரும்பினர். அவர்களுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன், மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன்ஆகியோர் மலர்கொத்து மற்றும் பழங்க கொடுத்து வழி அனுப்பி வைத்தனர்.

    English summary
    Grocery stores no longer operate 3 days a week in Erode district: district collector kathiravan
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X