ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எடப்பாடி சப்போர்ட் தேவை! அண்ணாமலையின் முடிவு.. பிளானே வேறயாம்.. புட்டு புட்டு வைத்த புள்ளி! சீக்ரெட்

Google Oneindia Tamil News

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடியை பகைக்க பாஜக தலைவர் அண்ணாமலை விரும்பவில்லை. 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அண்ணாமலை விரும்புகிறார் என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக பாஜக இன்னும் முடிவு எடுக்கவில்லை. பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில், , ஈரோடு கிழக்கில் திமுக கூட்டணியின் பவர் + பண பலம் இரண்டையும் சமாளிக்க வேண்டும் என்பதால், வலிமையான கட்சிதான் களமிறங்க வேண்டும். எங்கள் கூட்டணியில் வலிமையான கட்சி என்றால் அது அதிமுகதான்.

நாங்கள் தேர்தலில் என்ன நிலைப்பாடு எடுப்போம் என்பதை விரைவில் அறிவிப்போம். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இதில் முடிவு எடுக்க முடியாது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜகவின் நிலைப்பாடு குழப்பமாக இருக்கும் நிலையில் இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் மணி ஒன்இந்தியா யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

சாமர்த்தியம்.. வேறு மாதிரி காய் நகர்த்திய எடப்பாடி! விருப்பமனு கேட்டது ஏன்? இதான் காரணமா? அப்போ பாஜகசாமர்த்தியம்.. வேறு மாதிரி காய் நகர்த்திய எடப்பாடி! விருப்பமனு கேட்டது ஏன்? இதான் காரணமா? அப்போ பாஜக

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

அவர் அளித்துள்ள பேட்டியில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடியை பகைக்க பாஜக தலைவர் அண்ணாமலை விரும்பவில்லை. 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அண்ணாமலை விரும்பலாம். எடப்பாடி ஆதரவு இருந்தால்தான் ஈரோட்டில் எம்பி தேர்தலுக்கு நிற்கும் போது தனக்கு சாதகமாக இருக்கும் என்று அண்ணாமலை நினைக்கிறார். அதனால் இப்போது ஈரோட்டில் எடப்பாடியை எதிர்க்க அண்ணாமலை யோசிக்கிறார். ஆனால் தனி நபரை விட கட்சிதான் முக்கியம். அண்ணாமலையை நம்பி பாஜக இல்லை. ஆனால் இப்போது அந்த நிலைதான் பாஜகவில் ஏற்பட்டு உள்ளது. பாஜகவில் அந்த அவலம் ஏற்பட்டு உள்ளது.

தனி நபர்

தனி நபர்

எந்த தனி நபரையும் நம்பி இந்த நாடு இல்லை. எந்த கட்சியும் இல்லை. தனி நபரை நம்பி நீங்கள் அரசியலை கொண்டு செல்கிறீர்கள் என்றால் தோற்றுப்போய்விடுவீர்கள். ஈரோடு கிழக்கில் போட்டியிட்டால் வாக்கு வங்கியின் உண்மை தெரிந்துவிடும். பாஜகவின் உண்மையான பலம் தெரிந்துவிடும் என்று பயப்படுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் இதே பாஜகதானே.. இதே அண்ணாமலைதானே இனி திமுக vs பாஜகதான் களம் என்று கூறிக்கொண்டு இருந்தார். என்ன பேச்சு பேசினார்கள். கொஞ்ச நஞ்ச பேச்சா பேசினார்கள்.

அண்ணாமலை

அண்ணாமலை

கோடிக்கணக்கான வாக்கு இருக்கிறது என்று கூறினார்கள். பேசாத பேச்செல்லாம் பேசிவிட்டு இப்போது ஓடி ஒளிந்துகொண்டால் என்ன நியாயம். இத்தனை நாள் பேசியதற்கு என்ன அர்த்தம். தைரியம் இருந்தால் போட்டி போட்டு காட்டுங்கள். ஈரோடு கிழக்கில் இயற்கையாக பார்த்து உங்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. முடிந்தால் போட்டியிட்டு காட்டுங்கள். பாஜகதான் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியின் மையம் என்றால் அதை நிரூபிக்கட்டும். அதிமுக கூட்டணியில் இருக்கும் இரண்டு பெரிய கட்சிகள் பாஜக, பாமக.

பாமக

பாமக

இதில் பாமக தேர்தலில் போட்டியிடவில்லை. மற்றபடி அதிமுக பாஜகவிடம் போய் மரியாதை கொடுக்க ஒரே காரணம்தான் உள்ளது. பாஜக மத்தியில் ஆட்சியில் இருக்கிறது. பாஜக நினைத்ததை எல்லாம் செய்து கொண்டு இருக்கிறது. அதனால் அதிமுகவினர் போய் அவரை பார்த்தனர். எடப்பாடி, ஓபிஎஸ் தரப்பு மட்டும்தான் போய் அதிமுக அலுவலகத்தில் நின்றது என்று நினைக்காதீர்கள். ஜெயலலிதாவே இப்படி எல்லாம் போய் நின்று இருக்கிறார். 1997ல் பாமக, மதிமுக போன்ற கட்சிகளின் அலுவலகத்திற்கு ஜெயலலிதா போய் நின்று இருக்கிறார். அப்படி இருக்கும் போது பாஜக அலுவலகத்திற்கு எடப்பாடி, ஓபிஎஸ் தரப்பு போய் நின்றதை தவறாக நினைக்க கூடாது.

ஜெயலலிதா

ஜெயலலிதா

ஜெயலலிதா இருந்த காலத்தில் இவர்கள் எதோ சுயமரியாதை சிங்கங்களாக இருந்தனர் என்பது போல பேசுகிறார்கள். இதெல்லாம் தவறானது. ஜெயலலிதா ஏன் பாமக, மதிமுக அலுவலகத்திற்கு சென்றார். அப்போது போகாத மானம்தான் இப்போது போகிறதா? இதெல்லாம் விதண்டாவாதம். சின்னத்தை காப்பாற்றி கொள்வதற்காக, வேறு விஷயங்களில் தங்களை காப்பாற்றி கொள்வதற்காக எடப்பாடி, ஓபிஎஸ் ஆகியோர் பாஜக அலுவலகம் சென்று இருப்பார்கள். அதை எல்லாம் பெரிய விஷயமாக பார்க்க கூடாது. யாருக்கு தெரியும். இப்போது ஜெயலலிதா இருந்திருந்தால் அவரும் கூட பாஜக அலுவலகம் சென்று இருப்பார்.

2009

2009

2009ல் திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிந்தது. அதன்பின் கனிமொழியை எம்பியாக்க வேண்டும் என்பதற்காக அதே காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்திற்கு திமுக செல்லவில்லையா? திமுக பெரிய கட்சி தானே? அப்போது கருணாநிதி தானே தலைவராக இருந்தார். அவர் 5 முறை முதல்வராக இருந்தவர் தானே? அவர் கட்சி ஆட்களை காங்கிரஸ் அலுவலகத்திற்கு அனுப்பவில்லையா? அரசியலில் தங்களுக்கு ஒன்று நடக்க வேண்டும் என்றால் அரசியல் தலைவர்கள் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வார்கள். அப்படித்தான் எடப்பாடி, ஓபிஎஸ் ஆகியோர் பாஜக அலுவலகம் சென்று இருப்பார்கள், என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.

English summary
He wants Edappadi support: Annamalai has a different plan fro Erode East by-poll says Senior Journalist Mani.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X