ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆஹா ட்விஸ்ட்.. ஈரோடு கிழக்கில் தனித்து இறங்குகிறதா பாஜக? அந்த "தலை" போட்டியிடுகிறாராமே.. அப்படியா?

Google Oneindia Tamil News

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜகவின் மூத்த தலைவர் ஒருவரின் பெயரும் இதில் அடிபட்டு வருகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27-ம் தேதி நடைப்பெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடக்கும் என்று இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் பீவர் தொடங்கி உள்ளது. இந்த இடைத்தேர்தலில் பாஜக என்ன நிலைப்பாடு எடுக்கும், தனித்து போட்டியிடுமா.. கூட்டணி வைக்குமா என்ற கேள்வி நிலவி வருகிறது.

108 அரிய பக்தி நூல்களை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்! தூள் கிளப்பும் இந்து சமய அறநிலையத்துறை! 108 அரிய பக்தி நூல்களை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்! தூள் கிளப்பும் இந்து சமய அறநிலையத்துறை!

பாஜக தனித்து போட்டி

பாஜக தனித்து போட்டி

இந்த நிலையில் இந்த தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன. அதிமுக சார்பாக வேட்பாளர்கள் களமிறக்கப்பட வாய்ப்பு இல்லை. மாறாக அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி களமிறங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் ஜி கே வாசன் இன்று எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆலோசனை செய்து கொண்டு இருக்கிறார். பெரும்பாலும் கடந்த தேர்தலில் இங்கு அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் யுவராஜ் மீண்டும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநில காங்கிரஸ்

மாநில காங்கிரஸ்

இந்த நிலையில் இந்த தொகுதி தமிழ் மாநில காங்கிரசுக்கு செல்வதால் பாஜக இங்கே தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வர தொடங்கி உள்ளன. அதிமுகவில் என்ன நடக்கும், கட்சி யாருக்கு செல்லும் என்று தெரியாத நிலையில், பாஜக இங்கு தனித்து போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கொங்கு மண்டலத்தை பாஜக தனது கோட்டை என்று கூறி வருகிறது. அதிமுக எடப்பாடி - பாஜக இடையிலும் நல்ல உறவு இல்லை. இருவருக்கும் இடையில் நிறைய கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. இதனால் இந்த தொகுதியில் பாஜக தனித்து போட்டியிட்டு தனது பலத்தை சோதிக்க பார்க்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாஜக இங்கே வெற்றிபெறவில்லை என்றாலும் லோக்சபா தேர்தலுக்கு நல்ல முன்னோட்டமாக இருக்கும்.

தோல்வி

தோல்வி

இந்த இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தாலும் கூட நல்ல வாக்கு சதவிகிதத்தை எடுத்தாலே அது பாஜகவிற்கு பெரிய பலமாக இருக்கும். தமிழ்நாட்டில் தங்களின் வாக்கு சதவிகிதம் 10க்கும் மேல் உள்ளது என்று பாஜக கூறி வருகிறது. இந்த இடைத்தேர்தலில் மட்டும் 10% வாக்குகளுக்கு அருகில் பெற்றுவிட்டால் போதும் லோக்சபா தேர்தலில் அதை வைத்தே பாஜக அதிக இடங்களை அதிமுகவிடம் கேட்க முடியும். முக்கியமாக கொங்கு மண்டலத்தில் அதிக இடங்களையும் பெற முடியும். கூட்டணி பேச்சுவார்த்தையில் பாஜகவிற்கு இது கூடுதல் பவரை கொடுக்கும். தோல்வி அடைந்தாலும் கூட பாஜகவிற்கு ஒரு வித நம்பிக்கையை இது கொடுக்கும்.

பாஜக சார்பு

பாஜக சார்பு

அதனால் பாஜக சார்பாக இங்கே மாநில பொதுச்செயலாளர் ஏபி முருகானந்தம் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அல்லது மாநில பாஜக வேளாண் செயலாளர் ஜிகே நாகராஜன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. ஆனால் இதில் இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. அதோடு இங்கே திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் போட்டியிடும் பட்சத்தில் காங்கிரசை எதிர்ப்பதை பாஜக அதிகம் விரும்பும். கூட்டணியில் அதிமுக இங்கே போட்டியிட வாய்ப்பு வழங்காத பட்சத்தில் பாஜக தனியாகவே இறங்கும் முடிவை எடுக்கும் வாய்ப்புகளும் உள்ளன. அதிமுக உடைந்து இருக்கும் நிலையில் தங்களை இரண்டாவது பெரிய கட்சியாக முன்னிறுத்திக்கொள்ள பாஜகவிற்கு இந்த தேர்தல் உதவியாக இருக்கும் என்று பாஜக வட்டாரங்கள் கணக்கு போடுகிறதாம்.

English summary
Is AP Murugananthan planning to contest in Erode East by-election as a BJP candidate?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X