ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

16 வயசு பையன்.. சிரித்தபடி பப்ஜி விளையாட்டு.. திடீரென சுருண்டு விழுந்து.. ஈரோட்டை பதற வைத்த மரணம்!

பப்ஜி விளையாடி கொண்டிருந்த சிறுவன் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்

Google Oneindia Tamil News

ஈரோடு: சிரித்தபடியே பப்ஜி கேம் விளையாடி கொண்டிருந்த சிறுவன், திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் ஈரோடு மாவட்டத்தை நிலைகுலைய வைத்துள்ளது.

Recommended Video

    PUBG Game Finished Boy's Life? Immense Stress is a Reason?

    நாடு முழுவதும் 4வது லாக்டவுன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது... இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.. ஸ்கூல்களும் தற்போது லீவு என்பதால் பிள்ளைகள் வீட்டிலேயே விளையாடி வருகின்றனர்.

     lockdown: 16 year old boy who plays pubg in and dies near erode

    பொதுவெளியில் நண்பர்களுடன் இயல்பாக விளையாட முடியாத சூழல் உள்ளதால், ஆன்லைன் விளையாட்டிலேயே மூழ்கி கிடக்கிறார்கள்.. குறிப்பாக, பப்ஜி, லூடோ போன்ற விளையாட்டுக்கள்தான் பள்ளி, கல்லூரி மாணவர்களை சுண்டி இழுத்து வருகிறது. அந்தவகையில், ஈரோட்டில் ஒரு சிறுவன் செல்போனில் பப்ஜி கேம் விளையாடி கொண்டிருந்தான்.

    கருங்கல்பாளையத்தில் உள்ள கமலா நகரை சேர்ந்த இந்த சிறுவனுக்கு வயது 16 ஆகிறது.. பாலிடெக்னிக் இப்போதுதான் சேர்ந்துள்ளதாக தெரிகிறது.. வீட்டு பக்கத்தில் உள்ள திடலில் உட்கார்ந்து செல்போனில் கேம் விளையாடியபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

    3 நாள் வெறும் வயிற்றில் இந்த ஹோமியோபதி மருந்தை எடுங்க.. கொரோனாவுக்கு இதுதான் மருந்து- தமிழக அரசு3 நாள் வெறும் வயிற்றில் இந்த ஹோமியோபதி மருந்தை எடுங்க.. கொரோனாவுக்கு இதுதான் மருந்து- தமிழக அரசு

    இதை பார்த்து பதறிய அக்கம்பக்கத்தினர் சிறுவனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.. அங்கு டாக்டர்கள் செக் செய்து பார்த்ததில், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக சொன்னார்கள்.. சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.. நன்றாக விளையாடி கொண்டிருந்த சிறுவன், அடுத்த செகண்டே திடீரென மரணமடைந்தது அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    English summary
    lockdown: 16 year old boy who plays pubg in and dies near erode
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X