ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எங்களுக்காவது ஞாயிற்றுக்கிழமை லீவு.. ஆனா மோடிக்கு எல்லா நாளுமே லீவாச்சே.. ஸ்டாலின் கலாய்

Google Oneindia Tamil News

ஈரோடு: எங்களுக்காவது ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் விடுமுறை. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி எல்லா நாட்களும் லீவுல தானே இருக்கிறார் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வியூகம் வகுக்கின்றன. அந்த வகையில் கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது.

இதில் எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். முக்கிய எதிர்க்கட்சிகளான சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், திரிணமூல் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம், திமுக, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்டவை ஆகும். பாஜகவில் பிரதமர் வேட்பாளர் என்றால் அது மோடி என்ற நிலை உள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகளில் உள்ளவர்களில் பெரும்பாலானோரின் கட்சிகள் பெரிய கட்சிகள் என்பதால் அங்கு பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பொதுக் கூட்டம்

பொதுக் கூட்டம்

இந்நிலையில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளது. அதன்படி கான்பூரில் நேற்று பாஜக பொதுக் கூட்டம் நடந்தது.

அமித்ஷா கிண்டல்

அமித்ஷா கிண்டல்

அதில் பேசிய அமித்ஷா எதிர்க்கட்சியினரை கிண்டல் செய்து பேசினார். அப்போது அவர் பேசுகையில் மகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் திங்கள்கிழமை மாயாவதியும், செவ்வாய்க்கிழமை அகிலேஷும், புதன்கிழமை மம்தா பானர்ஜியும், வியாழக்கிழமை சரத் பவாரும், வெள்ளிக்கிழமை தேவ கௌடாவும், சனிக்கிழமை ஸ்டாலினும் பிரதமராக இருப்பர்.

8 அடி உயர சிலை

8 அடி உயர சிலை

ஞாயிற்றுக்கிழமை அன்று ஒட்டுமொத்த நாட்டுக்கே விடுமுறை அளிக்கப்படும் என அமித்ஷா கடுமையாக நக்கலடித்தார். இதற்கு ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் 8 அடி உயர சிலையை ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

அப்போது அவர் கூறுகையில் மெகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரதமர் இருப்பார் என அமித்ஷா விமர்சனம் செய்துள்ளார். இதன் மூலம் எதிர்க்கட்சிகள்தான் ஆட்சிக்கு வரபோகின்றன என்பதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார். ஒரு நாளாவது பிரதமர் மோடி இந்தியாவில் இருந்தது உண்டா. மோடிக்கு எல்லா நாளும் விடுமுறைதானே என்றார் ஸ்டாலின்.

English summary
MK Stalin replies that We are taking leave only on Sunday. But Modiji will be always on leave.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X