ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொங்கு நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க.. ஒன்றாக இணையும் எம்பிக்கள்- கணேச மூர்த்தி எம்பி அதிரடி பிளான்

Google Oneindia Tamil News

ஈரோடு : ஈரோடு எம்பி கணேச மூர்த்தி இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "விவசாயிகள் பிரச்னைகக்காக தனித்தனியாக இயக்கம் கொண்டுள்ள விவசாய இயக்கங்களையும், மேற்கு மாவட்ட எம்பிக்களையும் ஒருங்கிணைந்து செயல்பட அழைப்பு விடுத்துள்ளோம். அவர்களும் இணைந்து செயல்பட தயார் என அறிவித்துள்ளார்கள். இதன்படி வரும் 29ம் தேதி உழவர் பாதுகாப்பு அமைப்பு சார்பாக கூட்டம் நடைபெற உள்ளது" என்றார்.

மதிமுகவைச் சேர்ந்த ஈரோடு எம்பி கணேச மூர்த்தி இன்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் "விவசாயிகளின் பிரச்னைகளை அரசாங்கத்தின் கவனத்துக்கு எடுத்து செல்வதற்காக மேற்கு பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம்.

இதற்காக 29ம் தேதி தமிழ்நாடு உழவர்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பின் கீழே நாடாளுமன்ற உறுப்பினர்களை எல்லாம் அழைத்து இருக்கிறோம். அவர்களும் வருவதாக ஒப்புதல் அளித்துள்ளார்கள். அதேபோல் ஒவ்வொரு பிரச்னைக்காக விவசாயிகள் தனித்தனி இயக்கங்களை கொண்டு இருப்பதை கண்டு இருக்கிறோம்.

இணைந்து போராடுவோம்

இணைந்து போராடுவோம்

ஆகவே அனைத்து பிரச்னைகளையும் ஒருங்கிணைக்கிற வகையிலே அதனுடைய நிர்வாகிகளை ஒருங்கிணைத்து ஒரு பிரச்னைக்கு என்று தனித்தனியாக போராடாமல் அனைத்து பிரச்னைக்கும் ஒருங்கிணைந்து போராடுவது என்ற முயற்சி எடுப்பதற்காக இந்த உழவர் பாதுகாப்பு அமைப்பின் சார்பாக இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்.

விவசாயிகளும் இணைகிறார்கள

விவசாயிகளும் இணைகிறார்கள

இது தொடர்பாக கடந்த வாரமே அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்த்தித்து இந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் வர வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். அதேபோல் விவசாய அமைப்பினரும் அந்தந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து வருவதாக ஒப்புதல் தந்துள்ளார்கள். இந்த கூட்டத்தின் நோக்கமே அனைத்து விவசாயிகளின் பிரச்னைக்காக தனித்தனியாக போராடாமல், அதற்காக தனித்தனியாக இயக்கம் கொண்டுருக்கிற இயக்கங்களை ஒருங்கிணைத்து போராடுவதே நோக்கம்.

இயக்கம் துவக்கி உள்ளோம்

இயக்கம் துவக்கி உள்ளோம்

இதேபோல் அனைத்து மேற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைத்து அரசாங்கத்தினுடய கவனத்துக்கு விவசாயிகளின் பிரச்னையை எடுத்துச் சென்று நியாயத்தை வெளிப்படுத்துவதற்காக இந்த இயக்கத்தை துவக்கி இருக்கிறோம்.

அரசாங்கம் தயாராக இல்லை

அரசாங்கம் தயாராக இல்லை

உயர் மின் கோபுரம் அமைப்பதால் இன்றைக்கு அதிகமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தை எப்படியும் செயல்படுத்துவோம் என அரசு ஈடுபட்டாலும், அதற்கு எதிராக நீதிமன்றத்திலே வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. நியாயத்தை எடுத்துக்கொள்வதற்கு கூட இன்றைக்கு அரசாங்கம் தயாராக இல்லை. உயர்மின் கோபுரம் அமைப்பதால் பாதிப்பு ஏற்படும் என உலக சுகாதார அமைப்பு கூட விளக்கம் தந்திருக்கிறார்கள். அந்த அறிவிப்பை கூட ஏற்றுக்கொள்கிற நிலையிலே அரசில் உள்ளவர்கள் இல்லை. இதுபோன்ற பிரச்னைகளை அரசாங்கத்தின் கவனத்துக்கு எடுத்து செல்ல விவசாயிகள் சங்கத்தையும் மேற்கு மாவட்ட எம்பிக்களையம் ஒருங்கிணைடந்து செயல்பட அழைத்துள்ளோம். அவர்கள் இணைந்து செயல்பட போகிறார்கள்.

8 நாடாளுமன்ற உறுப்பினர்கள்

8 நாடாளுமன்ற உறுப்பினர்கள்

கொங்கு மண்டலத்தில் உயர்மின் கோபுரம் , ஐடிபிஎல் எண்ணெய்க்குழாய் , எட்டு வழிச்சாலை , காவிரி - திருமணிமுத்தாறு இணைப்பு போன்ற விவசாயிகள் பாதிக்கப்படுகின்ற பிரச்சனைகளுக்கு ஆதரவாக ஈரோடு , நீலகிரி , கரூர் ,கோவை , திருப்பூர் , நாமக்கல் , சேலம் , பொள்ளாச்சி என 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகிற 29 ம் தேதி செயல்திட்டம் குறித்த சென்னிமலையில் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது என்றார். எந்த திட்டத்தையும் தாங்கள் எதிர்க்கவில்லை என்றும் விவசாயிகள் பாதிக்கப்படாதவகையில் மாற்று வழியில் செயல்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

English summary
no separate protest for farmers problem , all west distict mps and famers join protest in future: says mdmk mp ganesamoorthy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X