ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எடப்பாடி 111+6.. ஓபிஎஸ் 118+23.. சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு மத்தியில் ‘ஓவர்டேக்’ செய்யும் ஓபிஎஸ்!

ஏற்கனவே 118 பேரை தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்திருந்த நிலையில், மேலும் 23 நிர்வாகிகளை நியமித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

Google Oneindia Tamil News

ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்த நிலையில், இரட்டை இலை தொடர்பான வழக்கில், இரு அணியினரும் பொதுக்குழுவைக் கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், தனது அணி வேட்பாளருக்காக தேர்தல் பணியாற்றுவதற்கு கூடுதல் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து அதிரடி காட்டியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே நூற்றுக்கும் மேற்பட்டவர்களை தேர்தல் பணிக்குழுவில் நியமித்துள்ளனர்.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிகளுக்காக 23 பேர் கொண்ட கூடுதல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்து ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

போகியில் பிறந்த ஓட்டக்கார தேவர் பன்னீர்செல்வம்! டீ கடை டூ முதல்வர்! அரசியலில் சாதித்தது, சறுக்கியது! போகியில் பிறந்த ஓட்டக்கார தேவர் பன்னீர்செல்வம்! டீ கடை டூ முதல்வர்! அரசியலில் சாதித்தது, சறுக்கியது!

அதிமுக வேட்பாளர்கள்

அதிமுக வேட்பாளர்கள்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாத், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த இடைத்தேர்தலில் இப்படி பலமுனை போட்டி நிலவும் சூழலில் அதிமுக சார்பில், ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரு அணிகளும் களமிறங்கின. ஈபிஎஸ் அணி சார்பில் கே.எஸ்.தென்னரசு, ஓபிஎஸ் அணி சார்பில் செந்தில் முருகன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

வேட்பு மனு தாக்கல்

வேட்பு மனு தாக்கல்

ஈரோடு இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதிமுக ஓபிஎஸ் அணியின் வேட்பாளர் செந்தில் முருகன் நேற்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இரட்டை இலை சின்னம் கேட்டு ஓபிஎஸ் அணி வேட்பாளர் செந்தில் முருகன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், அதிமுக சார்பில் பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்து, அவைத்தலைவர் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அவருக்கே இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

தேர்தல் பணிக்குழு

தேர்தல் பணிக்குழு

இடைத்தேர்தல் பணிகளுக்காக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருமே நூற்றுக்கும் மேற்பட்டவர்களை தேர்தல் பணிக்குழுவில் நியமித்துள்ளனர். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில், தேர்தல் பணியாற்ற, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில், 111 பேரை, தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக, எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, பாஸ்கரன், முன்னாள் எம்.பி.,க்கள் கோபால், ரத்தினவேல், முன்னாள் எம்.எல்.., ஆசைமணி, அமைப்பு செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோரை, தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமித்தார்.இதைத் தொடர்ந்து, தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்தது.

 118 + 23

118 + 23

அதேபோல, ஓபிஎஸ் அணியைப் பொறுத்தவரை 118 பேர் தேர்தல் பணிக்குழுவில் நியமிக்கப்பட்டனர். தேர்தல் பணிக்குழு தலைவராக வைத்திலிங்கம் நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட பொறுப்பாளர்கள், மாநில நிர்வாகிகள் என 118 பேர் தேர்தல் பணிக்குழுவில் இடம்பெற்றனர். இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிகளுக்காக 23 பேர் கொண்ட கூடுதல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்து ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 கூடுதல் பொறுப்பாளர்கள்

கூடுதல் பொறுப்பாளர்கள்

பிப்ரவரி 27 அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக் குழு பொறுப்பாளர்களுடன் கீழ்க்காண்பவர்களும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

நாஞ்சில் கோலப்பன்

நாஞ்சில் கோலப்பன்

நாஞ்சில் K.S. கோலப்பன் - கழக அமைப்புச் செயலாளர், G.R. ராமமூர்த்தி - கழக அமைப்புச் செயலாளர், இரா. பாண்டியம்மாள், Ex. M.L.A - கழக அமைப்புச் செயலாளர், வளசை P. மஞ்சுளா பழனிச்சாமி - கழக அமைப்புச் செயலாளர்., சிவில் முருகேசன், D.C.E., - கழக அமைப்புச் செயலாளர், L கோபிநாத் - கழக அமைப்புச் செயலாளர், Lion மாரிமுத்து - கழக அமைப்புச் செயலாளர், P. மணிகண்டன் கேரள மாநிலக் கழகச் செயலாளர், டாக்டர் ஆதிரா நேவிஸ் பிரபாகர், M.B.B.S., - கழக மருத்துவ அணிச் செயலாளர்., ஜெ. கோசுமணி அவர்கள் கழக மீனவரணிச் செயலாளர், காட்பாடி JVR என்கிற வெங்கடராமன், B.Com., - கழக கலைப் பிரிவுச் செயலாளர், E. தனபால் - அண்ணா தொழிற்சங்கப் பேரவைத் தலைவர், முனைவர் பாலாஜி வரதராஜன், M.A., Ph.D. - கழக சிறுபான்மையினர் அணி

மாநில நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

N. சுனில் - கழக மாணவர் அணி இணைச் செயலாளர், மேலூர் S.A. பாஸ்கரன் - தேர்தல் பிரிவு இணைச் செயலாளர், இமாக்குலீன் ஷர்மிளி, B.B.A., - கழக மகளிர் அணி இணைச் செயலாளர், டாக்டர் அழகு தமிழ்ச்செல்வி, M.B.B.S., DMRD, MDRD - கழக மகளிர் அணி இணைச் செயலாளர், D.ரஞ்சனா தேவி, B.Sc., - கழக மகளிர் அணி இணைச் செயலாளர், இந்திரா ஈஸ்வர், B.B.A., - கழக மகளிர் அணி துணைச் செயலாளர், செல்வி N. ஜெயதேவி, B.A., - கழக மகளிர் அணி துணைச் செயலாளர், பண்ருட்டி ஆசை தாமஸ் - கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர், திரு.S.A.லாலு, B.A., - கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு பொருளாளர் ஆகிய தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு கழக நிர்வாகிகளும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு அளித்து, சிறப்பான முறையில் தேர்தல் பணிகளை மேற்கொண்டு கழக வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
While Edappadi Palaniswami and O.Panneerselvam announced their candidates separately in Erode East constituency by-election, Supreme Court issued an order to convene a general committee to select a candidate. In this case, O. Panneerselvam has appointed additional election task force excutives for by-election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X