ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"ஐயா.. காரை நிறுத்துங்க".. ஓடிவந்த முதியவர்.. காரை நிறுத்திய கலெக்டர்.. பெரியவர் சொன்ன கதை.. சோகம்!

ஈரோடு கலெக்டரின் காரை வழிமறித்து முதியவர் மனு தந்துள்ளார்

Google Oneindia Tamil News

ஈரோடு: "கலெக்டர் ஐயா.. காரை நிறுத்துங்க.." என்று திடீரென ஒரு அலறல் சத்தம் கேட்கவும் அதிர்ந்து போய்விட்டார் ஈரோடு கலெக்டர் கதிரவன்!

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது...அந்த சமயத்தில் கலெக்டர் கதிரவன் வேறு ஒரு நிகழ்ச்சிக்காக காரில் கிளம்ப வெளியே வந்தார்.

காரில் ஏறியதும், கார் புறப்பட்டது.. அந்த நேரம் பார்த்து கலெக்டர் ஐயா... காரை நிறுத்துங்க என்று சத்தம் போட்டுக் கொண்டே ஒரு பெரியவர் காரின் முன்னால் வந்தார்.. இதனால் டிரைவர் திடீர் என பிரேக் போட்டார்... தட்டு தடுமாறியபடி வந்த அந்த பெரியவரை பார்த்ததும் கலெக்டர் அதர்ந்து போனார்.. உடனடியாக காரை விட்டு இறங்கி வந்தார்.

கலெக்டர் ஐயா..

கலெக்டர் ஐயா..

அந்த முதியவருக்கு விபத்து ஒன்றில் கால் உடைந்திருந்தது.. கையில் ஒரு மனு வைத்திருந்தார்.. கலெக்டர் அவரிடம் என்ன ஏதென்று விசாரிக்கவும், "என் சொத்துக்களை எல்லாம் என் பொண்ணு புடுங்கிக்கிட்டா... எனக்கு சாப்பிடவே வழியில்லை ஐயா.. "என்றார். உடனே கலெக்டரும், அந்த மனுவை வாங்கி கொண்டு, "உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன், கவலைப்படாம போங்க" என்று அவருக்கு நம்பிக்கை தெரிவித்தார்.

63 வயது ராஜு

63 வயது ராஜு

பிறகு அங்கிருந்த போலீசாரை அழைத்து, "இவர் தந்த இந்த புகாரின் பேரில் உடனே நடவடிக்கை எடுங்க.. காலில் இவருக்கு சிகிச்சை தரணும்" என்றார். இதையடுத்து போலீசார் பெரியவரை அழைத்து ஊர், விலாசம், பிரச்சனை குறித்து விசாரித்தனர்.. இவர் பெயர் ராஜூ, வயது 63 வயதாகிறது... பெருந்துறை பகுதியை சேர்ந்தவராம்... எலக்ட்ரீசியனியனாக இருந்திருக்கிறார்.

இளைய மகள்

இளைய மகள்

மனைவி, 2 மகள்கள் உள்ளனர்... ஆனல் குடும்ப பிரச்சனையால் மனைவியை பிரிந்து பல காலம் தனியாகவே வசித்து வந்துள்ளார்.. அப்போதுதான் எலக்ட்ரிஷியனாகவே இருந்து பணம், நகை, சொத்து சம்பாதித்துள்ளார்... அதில் 2 மகள்களுக்கும் கல்யாணம் செய்துவிட்டார்... சமீபத்தில் இளைய மகளை மட்டும் தன்னுடன் குடும்பத்துடன் வந்து தங்கி கொள்ளுமாறு முன்பு சொல்லி உள்ளார்.

சிகிச்சை

சிகிச்சை

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் ராஜூவுக்கு விபத்தில் கால் உடைந்துவிட்டது.. இதை பயன்படுத்தி கொண்டு, அவரது மகள் வீட்டில் இருந்த நகை, பத்திரம், பணம் ஏடிஎம் கார்டு எல்லாவற்றையும் எடுத்து சென்றுவிட்டாராம்.. அதனால்தான் நடவடிக்கை கேட்டு கலெக்டர் ஆபீஸ்வரை வந்துள்ளார் என தெரியவந்தது. பின்னர், 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அவரை சிகிச்சைக்காக போலீசார் அழைத்து சென்றனர்.

English summary
old man petition to Erode Collector kathiravan about his daughter
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X