ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குழந்தையை பார்த்துக்கோங்க.. இரு நாளில் வந்துவிடுகிறேன் என கூறி ஒரு வாரமாகியும் வராத தாய்க்கு வலை

Google Oneindia Tamil News

Recommended Video

    இரண்டு நாளில் வந்துவிடுகிறேன் என கூறி வராத தாய்க்கு வலை-வீடியோ

    ஈரோடு: 5 வயது குழந்தையை பார்த்துக் கொள்ளும்படி விட்டு சென்ற தாய் ஒருவாரத்திற்கு மேல் ஆகியும் திரும்பி வராததால் குழந்தையுடன் பெண் ஒருவர் ஈரோடு மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

    ஈரோடு பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி (65) என்பவர் ஈரோடு அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 19-ஆம் தேதி கண் அறுவை சிகிச்சைக்காக சேர்ந்தார். பின்னர் சிகிச்சை முடிந்து சில நாட்கள் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார்.

    அப்போது மருத்துவமனையில் பக்கத்து பெட்டில் இருந்த வேணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தின் மூலம் வேணி, மகேஸ்வரியின் குடும்பத்தாருடன் நெருங்கி பழகியுள்ளார்.

    காலில் விழுந்து வாக்கு கேட்க சொன்ன அமைச்சர்.. அப்படியே செய்த பூந்தமல்லி அதிமுக வேட்பாளர்!காலில் விழுந்து வாக்கு கேட்க சொன்ன அமைச்சர்.. அப்படியே செய்த பூந்தமல்லி அதிமுக வேட்பாளர்!

    சிகிச்சை

    சிகிச்சை

    இந்த பழக்கத்தின் காரணமாக வேணி அவரது அப்பாவின் கண் அறுவை சிகிச்சைக்காக தஞ்சாவூர் செல்வதாகவும் அதுவரை தனது மகன் பிரகதீஷை (5) பார்த்துக் கொள்ளுமாறும் மகேஸ்வரி மற்றும் அவரது மகளிடம் கேட்டுள்ளார்.

    குழந்தை

    குழந்தை

    அதற்கு மகேஸ்வரியின் மகள் அவருக்கு தெரிந்த ஈரோடு மணல் மேட்டை சேர்ந்த சிவா என்பவரின் மனைவி சாலேத் (22) என்பவரை அறிமுகம் செய்து வைத்து குழந்தையை இவர் பார்த்துக் கொள்வார் என கூறியுள்ளார்.

    போலீஸ் ஸ்டேஷன்

    போலீஸ் ஸ்டேஷன்

    இதனையடுத்து சாலேத்தை தொடர்பு கொண்ட வேணி அவரது மகனை ஒரு நாளில் திரும்ப வந்து கூட்டி செல்வதாக பேசி விட்டு சென்றுள்ளார். ஆனால் வேணி ஒருவாரத்திற்கு மேல் ஆகியும் திரும்ப வராததால் சாலேத் சந்தேகம் அடைந்து நேற்று ஈரோடு மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.

    கடன் பிரச்சினை

    கடன் பிரச்சினை

    இந்த புகாரின் பேரில் சாலேத்திற்கு வேணியை அறிமுகம் செய்து வைத்த மகேஸ்வரி மற்றும் அவரது மகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில் குழந்தையை விட்டு சென்ற வேணிக்கு கடன் பிரச்னை உள்ளது.

    அறிவுரை

    அறிவுரை

    குழந்தையை வளர்க்க முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். சாலேத்துக்கும் திருமணமாகி குழந்தைகள் இல்லை. இதனால் மகேஸ்வரி மற்றும் அவரது மகள் கூறிய அறிவுரையின் பேரில் சாலேத்திடம் விட்டு சென்றிருக்கலாம்.

    தறி தொழிலாளி

    தறி தொழிலாளி

    வேணியின் செல்போனிற்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. வேணியின் கணவர் தறிபட்டறை தொழிலாளி என தெரியவந்தது. அவருக்கு தகவல் தெரிவித்துள்ளோம். விரைவில் குழந்தை உரியவரிடம் ஒப்படைக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    English summary
    Erode Police in search of a lady who leaves her 5 years old baby to another lady because of debt problem.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X