ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக அரசை கட்டுப்படுத்துவது போல்.. தமிழக மக்களையும் கட்டுப்படுத்த நினைத்தால் அது நடக்காது- ராகுல்

Google Oneindia Tamil News

ஈரோடு: தமிழ் மொழியை மதிக்கும் ஆட்சியாக டெல்லி ஆட்சி இல்லை என ராகுல் காந்தி வேதனை தெரிவித்தார்.

Recommended Video

    தமிழ் மொழியை மதிக்கும் ஆட்சியாக டெல்லி ஆட்சி இல்லை.. ராகுல் காந்தி வேதனை - வீடியோ

    தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்துள்ள ராகுல் கொங்கு மண்டலத்தில் கலக்கிக் கொண்டிருக்கிறார். அவருக்கு மக்களும் சிறப்பான வரவேற்பு அளித்து மகிழ்கிறார்கள்.

    இன்றைய தினம் ஈரோட்டில் மக்கள் முன் அவர் பேசுகையில் தமிழகத்துக்கு வருவதில் உள்ளபடியே பெருமைப்படுகிறேன். துரதிருஷ்டவசமாக இன்று நாட்டு நிலைமை நன்றாக இல்லை. தமிழ் கலாச்சாரம், வரலாறு மற்றும் தமிழ் மொழியை மதிக்கும் ஆட்சியாக டெல்லி ஆட்சி இல்லை.

    நான் தமிழன் அல்ல.. ஆனா என்ன ஆனாலும் சரி தமிழர்களை அவமதிப்பதை அனுமதிக்க மாட்டேன்- ராகுல் நான் தமிழன் அல்ல.. ஆனா என்ன ஆனாலும் சரி தமிழர்களை அவமதிப்பதை அனுமதிக்க மாட்டேன்- ராகுல்

    வரலாறு

    வரலாறு

    தமிழகத்தில் உள்ள ஆட்சியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களை கட்டுப்படுத்தலாம் என நினைக்கிறார்கள். தமிழக அரசை கட்டுப்படுத்துவதன் மூலம் தமிழர்களை கட்டுப்படுத்தலாம் என நினைப்பது நடக்காது. தமிழ் உணர்வு மூலம்தான் தமிழர்களை கட்டுப்படுத்த முடியும் என்பதை தமிழகத்தின் வரலாற்றைப் படித்தால்தான் புரியும்.

    தந்தை

    தந்தை

    தமிழக மக்கள் என பாட்டியான இந்திரா காந்தி மீதும் தந்தை ராஜீவ் மீதும் அன்பு காட்டினர். தமிழக மக்களுடன் எனக்கு இருப்பது அரசியல் உறவு அல்ல. தமிழக மக்களுடன் எனக்கு குடும்ப உறவு உள்ளது. தமிழக மக்களின் பிரச்சினைகளை கேட்க வந்துள்ளேன்.

    மாநிலங்கள்

    மாநிலங்கள்

    எனது கருத்துகளைக் கூற நான் இங்கு வரவில்லை, நீங்கள் கூறுவதைக் கேட்க உங்கள் பிரச்சினைகளை அறிய வந்துள்ளேன். தமிழ்நாட்டின் வரலாறு, மக்கள், தமிழ் மொழியில் இருந்து நாட்டின் இதர மாநிலங்கள் கற்றுக் கொள்ள ஏராளமாக உள்ளது என ராகுல் தெரிவித்துள்ளார்.

    பிரச்சாரம்

    பிரச்சாரம்

    ராகுல் காந்தி கொங்கு மண்டலத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். முன்னதாக ஒன்னா கை கோர்ப்போம், வாங்க ஒரு கை பார்ப்போம் என வாசகம் அடங்கிய பிரச்சார வீடியோவையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Congress EX President Rahul Gandhi says that Centre has not giving respect for Tamil Language.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X