ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நான் தமிழன் அல்ல.. ஆனா என்ன ஆனாலும் சரி தமிழர்களை அவமதிப்பதை அனுமதிக்க மாட்டேன்- ராகுல்

Google Oneindia Tamil News

ஈரோடு: நான் தமிழன் அல்ல, ஆனால் தமிழ் உணர்வு மற்றும் கலாச்சாரத்தின் மதிப்பை உணர்ந்துள்ளேன் என ராகுல் காந்தி தெரிவித்தார்.

Recommended Video

    தமிழ் மொழியை மதிக்கும் ஆட்சியாக டெல்லி ஆட்சி இல்லை.. ராகுல் காந்தி வேதனை - வீடியோ

    தமிழகத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ள ராகுல் காந்தி, கொங்கு மண்டலத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து வைத்துள்ளார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள்.

    வாய்ப்புகள்

    வாய்ப்புகள்

    அங்கு அவர் பேசுகையில் நான் தமிழன் அல்ல, ஆனால் தமிழ் உணர்வு மற்றும் கலாச்சாரத்தின் மதிப்பை உணர்ந்துள்ளேன். என்ன ஆனாலும் சரி, தமிழ் மக்களை பிரதமரும் பாஜகவும் அவமதிப்பதை நான் அனுமதிக்க மாட்டேன். தமிழகத்தில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்த ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

    வாய்ப்புகள்

    வாய்ப்புகள்

    வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இருந்தும் அந்த அளவுக்கு தமிழகம் வளர்ச்சி பெறவில்லை. பணம் மதிப்பு ரத்து நடவடிக்கை, ஜிஎஸ்டி, பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஆகியன தமிழகத்தின் வளர்ச்சியை முடக்குகின்றன. 500 தொழிலதிபர்களின் நலன்களுக்காகவே இன்றைய மத்திய ஆட்சி நடத்தப்பட்டு வருகிறது.

    நம்பிக்கை

    நம்பிக்கை

    இந்திய வரலாற்றில் நாம் முதல்முறையாக ஜனவரி 26ஆம் தேதி பேரணி நடத்துவதைப் பார்க்க உள்ளோம். தங்களுக்கு உரியதை அரசு பறித்துவிட்டது என்பதை உணர்ந்துள்ளதால் விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள். தமிழ் மக்கள் மீது தமிழக இளைஞர்கள், இளம்பெண்கள் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளேன்.

    மோடி

    மோடி

    மோடியாலும் மத்திய அரசாலும் முடக்கப்படாத அரசு தமிழகத்தில் அமைந்தால் எந்தத் தடையும் தமிழர்கள் தகர்ப்பார்கள் என்றார் ராகுல் காந்தி. அவருக்கு ஈரோட்டில் மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தார். ஏழை எளிய மக்களுடன் ராகுல் காந்தி கனிவாக பழகியது காண்போரை வியக்க வைத்தது.

    English summary
    Congress Ex President Rahul Gandhi says that He is not a tamilan, but he has Tamil feelings and he respects tamil culture.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X