ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எனக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதுண்டா.. கருப்பன் சம்பாதித்த சொத்து இது!

Google Oneindia Tamil News

ஈரோடு: சத்தியமங்கலத்தில் சாலையில் வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்த தெரு நாய்க்கு அப்பகுதி இளைஞர்கள் பிளக்ஸ் பேனர் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    தெரு நாய்க்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து பேனர் வைத்த இளைஞர்கள்! - வீடியோ

    நாய் மீது பாசம் கொண்டவர்கள் இந்த நாட்டில் பல கோடி பேர் இருக்கிறார்கள். நாயை தங்கள் வீட்டு பிள்ளை போல் பாவித்து வளர்த்து வருகிறார்கள். அவை சாப்பிடாவிட்டால் அவர்கள் குழந்தை சாப்பிடாததை போல் சோகமாகி விடுவார்கள்.

    இதேபோல் அவர்கள் ஆசையை வளர்த்த நாய் தங்களை விட்டு காணாமால் துடித்துப்போய் போஸ்டர் ஒட்டும் சம்பவங்களும் நடந்துள்ளது. நாய் என்பது செல்லப்பிராணி என்பதை தாண்டி குடும்பத்தில் ஒருவராக வலம் வருகிறது. இந்த சூழலில் சத்தியமங்கலத்தில் சாலையில் அடிபட்டு உயிரிழந்த தெரு நாய்க்கு அப்பகுதி இளைஞர்கள் பிளக்ஸ் பேனர் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள்.

    Paytm-க்கு சிக்கல்! கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கம்! ஏன் என்ன ஆச்சு?

    சத்தியமங்கலம்

    சத்தியமங்கலம்

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை பகுதியில் உள்ள வாரச் சந்தை வளாகத்தில் கருப்பு நிற தெருநாய் ஒன்று வசித்து வந்தது. இந்த நாய் வாரச்சந்தை வளாகத்தில் உள்ள டீ கடை மற்றும் மளிகை கடைக்கு வருபவர்களிடம் நெருங்கி பழகியதால் அங்கு டீ கடைக்கு வருவோர் தெருநாய்க்கு பிஸ்கட் உள்ளிட்ட திண்பண்டங்கள் கொடுப்பது வழக்கம்.

    சாலை விபத்தில் பலி

    சாலை விபத்தில் பலி

    மேலும் இந்த தெருநாய் கருப்பு நிறத்தில் இருந்ததால் இதற்கு கருப்பன் என்று செல்லமாக பெயரிட்டு அழைத்து வந்தனர். இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி தெரு நாய் அப்பகுதியில் சாலையில் சுற்றித் திரிந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது. கருப்பன் என்கிற தெரு நாய் உயிரிழந்த தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

    பிரிவால் வாடும் நண்பர்கள்

    பிரிவால் வாடும் நண்பர்கள்

    இதையடுத்து இறந்த நாய்க்கு அஞ்சலி தெரிவிக்கும் விதமாக நாயின் புகைப்படத்தை பயன்படுத்தி கண்ணீர் அஞ்சலி பிளக்ஸ் பேனர் அச்சடித்து அதில் "இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் பிரிவால் வாடும் நண்பர்கள் என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.

    மக்கள் அஞ்சலி

    மக்கள் அஞ்சலி

    இந்த கண்ணீர் அஞ்சலி பிளக்ஸ் பேனர் அப்பகுதியில் வைக்கப்பட்டு பேனருக்கு மாலை அணிவித்து அப்பகுதி மக்கள் அஞ்சலி செலுத்தினர். அன்பாய் பழகிய தெரு நாய்க்கு பிளக்ஸ் பேனர் வைத்து அஞ்சலி செலுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Local youth paid tearful tribute with flex banner to a street dog who died after being hit by a vehicle on the road in Sathyamangalam, erode/
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X