ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பப்ளிக் எக்சாம்... அமைச்சரவை கூடி முடிவு.. செங்கோட்டையன் தகவல்

Google Oneindia Tamil News

ஈரோடு:மத்திய அரசு கொண்டுவந்துள்ள 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வு முறையை தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து அமைச்சரவை கூடி முடிவெடுக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் காமராஜர் திறந்து வைத்த அலங்கார நுழைவு வாயில் வாகனம் மோதி சேதமடைந்தது. இதையடுத்து 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அலங்கார நுழைவு வாயில் கட்டப்பட்டு வருகிறது.

Sengottaiyan said cabinet will decide on implementation of the 5th, 8th std public examination

அதற்கான பணிகளை அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர். அப்போது செய்தியாளர்களுக்கு செங்கோட்டையன் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்துதேர்வு முறை குறித்து பரிசீலித்து முடிவெடுக்கப்படும். வரும் மார்ச் மாதம் இறுதிக்குள் 1500 பள்ளிகளில் தலா 20 லட்சம் மதிப்பீட்டில் அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படும்.

பயோமெட்ரிக் முறையிலான மாணவர்கள் வருகைப் பதிவேட்டு முறை அரசின் நிதிநிலையை பொறுத்து அமையும். படிப்படியாக இந்த முறையானது, அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும். மாணவர்கள் பள்ளிக்கு வந்து விட்ட தகவலை பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாக அனுப்பவும் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன என்று செங்கோட்டையன் கூறினார்.

English summary
Education minister Sengottaiyan said that the Cabinet will decide on the implementation of the 5th and 8th General Examination System in tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X