ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மயிலுக்கு ஒன்னும் ஆகாது.. டோன்ட் ஒர்ரி, நல்லா இருக்காம்.. ஆபரேஷன் சக்சஸ்

நாய் கடித்து இறக்கை இழந்த மயிலுக்கு 2 மணி நேரம் ஆபரேஷன் நடந்தது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மயிலுக்கு ஒன்னும் ஆகாது, நல்லா இருக்காம்-வீடியோ

    சத்தியமங்கலம்: குத்துயிரும் குலையுயிருமாக இறக்கை துண்டித்து விழுந்து கிடந்த மயிலுக்கு ஆபரேஷன் நடந்துள்ளது.

    சத்தியமங்கலம் அருகே தூக்கநாயக்கன்பாளையம் என்ற பகுதி உள்ளது. இங்குள்ள வயல் பகுதிக்கு அடிக்கடி மயில் உட்பட நிறைய பறவைகள் வந்து செல்லும். அப்படி ஒருநாள் வயலுக்கு வந்த மயிலைதான் அங்கிருந்த நாய் ஒன்று விரட்டி பிடித்து கடித்துள்ளது.

    நாயின் பிடியில் மயில் வசமாக சிக்கி கொண்டு சீரழிந்தது. தன் கோர பற்களை வைத்து மயிலின் இறக்கையை கடித்து துப்பியது. இதில் மயிலின் இறக்கை துண்டாகி விழுந்து கிடந்தது. நாய் விரட்டி பிடித்ததையும், மயிலின் அபாய அகவலை கேட்ட விவசாயிகள் ஓடிவந்தனர்.

    பறக்க முடியவில்லை

    பறக்க முடியவில்லை

    அதற்குள் அந்த மயிலை அப்படியே போட்டுவிட்டு தப்பிவிட்டது. இறக்கை ஒடிந்து தரையில் உயிருக்கு மயில் போராடியது. மயிலுக்கு இறக்கை ஒடிந்து கிடப்பதால் அதனால் பறக்கவே முடியவில்லை. விரைந்து வந்த மக்கள், மயிலை தூக்கி சென்று வனச்சரகர் மனோஜ்குமாரிடம் ஒப்படைத்தனர்.

    இறக்கை இல்லை

    இறக்கை இல்லை

    இதனையடுத்து மயில் சத்தியமங்கலத்தில் உள்ள வன கால்நடை மருந்தகத்தில் உடனடியாக மயில் அனுமதிக்கப்பட்டது. மயிலுக்கு வன கால்நடை மருந்தக டாக்டர் அசோகன் சிகிச்சை அளிக்க வந்தார். அப்போதுதான் இறக்கை ஒடிந்து மயில் அவஸ்தை பட்டு கிடப்பதை பார்த்தார். இறக்கை இருந்தால்தான் மயிலால் பறக்கவே முடியும் என்பதால் மயிலுக்கு ஆபரேஷன் செய்ய முன்வந்தார்.

    மயிலுக்கு சாப்பாடு

    மயிலுக்கு சாப்பாடு

    அதன்படி சேலம் அழகாபுரத்தில் உள்ள அமுல்யா மருத்துவமனைக்கு மயிலை கொண்டு வந்தார். ஏற்கனவே மயில் சாப்பிடவில்லை போல இருக்கு. சாப்பிட்டு 15 நாள் ஆனது போல தெரிகிறதாம். அதனால் ரொம்பவும் களைப்பாக இருந்திருக்கிறது. அதனால் முதல்வேலையாக மயிலுக்கு சாப்பாடு தந்திருக்கிறார். அதற்கு பிறகுதான் ஆபரேஷனுக்கு ரெடி செய்திருக்கிறார் டாக்டர்.

    சிறிய பிளேட்

    சிறிய பிளேட்

    வலியால் அவதிப்படும் மயில், ஆபரேஷன் நடக்கும்போதும் வலியால் கஷ்டப்படாமல் இருக்க மயக்க மருந்து தரப்பட்டது. இதனை தொடர்ந்து மயிலுக்கு இறக்கை முறிந்த பகுதியில் சிறிய பிளேட் ஒன்று வைத்து இந்த ஆபரேஷன் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட ஆபரேஷனுக்கு மட்டும் 2 மணி நேரம் ஆகிவிட்டது. மயக்கம் தெளிந்து மெதுவாக மயில் கண்ணை திறந்தது. இதனையடுத்து டாக்டர் அசோகன், சத்தியமங்கலம் வன கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்.

    எலும்புகள் கூட வேண்டும்

    எலும்புகள் கூட வேண்டும்

    இப்போதும் மயிலுக்கு சிகிச்சை போய் கொண்டுதான் இருக்கிறது. என்ன இருந்தாலும் ஆபரேஷன் ஆன உடம்பு அல்லவா? 15 நாள் கழித்து ஸ்கேன் எடுத்து டாக்டர் பார்ப்பாராம். எலும்புகள் கூடிவிட்டது என்று தெரிந்தால், மயிலால் பறக்க முடியும் என்ற நிலை வந்தால், அப்போதே மயிலை கொண்டு போய் காட்டு பகுதியில் விட்டுவிடுவதாக சொன்னார் டாக்டர் அசோகன்.

    English summary
    Surgery to Wound Peacock for 2 hours near Sathiyamangalam
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X