ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அரியர் மாணவர்களின் அரசனே!" ஐயா எடப்பாடியாரே.. முதல்வருக்கு அரியர் மாணவர்கள் வைத்த போஸ்டர்!

Google Oneindia Tamil News

ஈரோடு: ஈரோட்டில் கல்லூரி அரியர் மாணவர்கள் திருக்குறளை மையப்படுத்தி தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து பதாகைகள் வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    கல்லூரி தேர்வு ரத்து தொடர்பாக முதல்வர் சூப்பர் உத்தரவு!

    தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனோ தொற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இந்நிலையில் கொரோனோ தாக்கம் காரணமாக கல்லூரிகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இதன் காரணமாக நடத்தப்பட இருந்த தேர்வுகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டு வந்தன.

    மாணவர்களின் மனதை பாதிக்கும் நீட் வேண்டாம் : மோடிக்கு கடிதம் எழுதிய புதுச்சேரி முதல்வர் மாணவர்களின் மனதை பாதிக்கும் நீட் வேண்டாம் : மோடிக்கு கடிதம் எழுதிய புதுச்சேரி முதல்வர்

     தேர்வு ரத்து

    தேர்வு ரத்து

    இந்த நிலையில் மாணவர்கள் நலன் கருதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி , பாலிடெக்னிக் கல்லூரி பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக முதல்வர் அறிவித்தார். மேலும் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அனைவரும் ஆல்பாஸ்

    அனைவரும் ஆல்பாஸ்

    இதன்படி அரியர் வைத்துள்ள மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எத்தனை ஆண்டுகள் அரியர் வைத்திருந்தாலும் அந்த மாணவர்கள் தேர்வு கட்டணம் கட்டியிருந்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

    முதல்வருக்கு நன்றி

    முதல்வருக்கு நன்றி

    இந்த நிலையில் ஈரோடு கொல்லம்பாளையத்தில் திருக்குறளை மையபடுத்தி தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கல்லூரி அரியர் மாணவர்கள் பதாகைகள் வைத்துள்ளனர்.. அவர்கள் தங்களின் போஸ்டரில் அரியர்- மாணவர்களின் அரசனே.. என்று ஆரம்பித்துள்ளனர்.

    மக்கள் வியப்பு

    மக்கள் வியப்பு

    அத்துடன் 'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு' என்று திருக்குறளை குறிப்பிட்டுள்ளனர். ஐயா எடப்பாடியாரே நீர் வாழ்க..வாழ்க.. இங்கனம் அரியர் மாணவர்கள்.. என்று போஸ்டர் வைத்துள்ளனர். இந்த போஸ்டர் சாலையின் முக்கிய சந்திப்புகளில் வைக்கப்பட்டுள்ளதால் மக்கள் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்கள்.

    English summary
    erode Ariyar students put up a poster thanking the chief minister edappadi palanisamy over he order to all pass in semester exams.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X