ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சூப்பர் ஐடியா.. நெட்டு தேவையில்லை.. 5 தனியார் சானல் மூலமா கிளாஸ் எடுப்போம்.. செங்கோட்டையன்

தமிழகத்தில் ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாது; டி.வி. மூலமாகத்தான் பாடத்திட்டம் கற்பிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

ஈரோடு: அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு சேனல் என்று 5 தொலைக்காட்சியில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்பை வரும் 13ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பார். பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்ட உடன் ஆன்லைன் கல்வி திட்டம் செயல்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளிகளில் வரும் 13ஆம் தேதி முதல் ஆன்லைன் கல்வி முறை தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார். ஆன்லைன் வழி வகுப்புகளை பெறக்கூடிய வகையில் அனைத்து மாணவர்களிடமும் ஸ்மார்ட்போன், இணையவசதி உள்ளிட்ட கட்டமைப்பு இருக்குமா? என்ற கேள்வி எழுந்தது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் பேசியுள்ள அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாது; டி.வி. மூலமாகத்தான் பாடத்திட்டம் கற்பிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

கோவிட்-19 நோய் பரவாமல் தடுப்பதற்காக 4 மாத காலமாக அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ள லாக்டவுனால் அதிகம் பாதிக்கப்பட்டது மாணவர்களும் கல்வித்துறையும்தான். பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று யாராலும் உறுதியாக கூற முடியவில்லை. உயர்நிலைக்கல்வித்துறையில் இறுதி தேர்வுகள் எப்போது நடைபெறும் என்று அறிவிக்க முடியவில்லை மிகவும் பாதிக்கப்பட்ட துறையாக கல்வித்துறை உள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக பள்ளிக்கூடங்கள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களைத் திறக்கக் கூடாது என்று அரசு கண்டிப்பாக ஆணையிட்டதால் பள்ளிகளில் இறுதி ஆண்டு தேர்வுகளை நடத்த முடியாமல் போனது, இதன் காரணமாக 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

கொரோனா பரவல் குறையாத காரணத்தினால் லாக்டவுன் நீடிக்கப்பட்டு பள்ளிகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், தனியார் பள்ளிகள் ஆன்லைன் கல்விமுறையில் வகுப்புகளை நடத்த துவங்கியுள்ளன. இதனிடையே, ஆன்லைன் கல்விமுறை தேவையா, இல்லையா என்று ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் விவாதம் நடந்தாலும் லாக்டவுன் காலத்தில் வீட்டில் இருந்தபடியே இணையம் மூலம் அறிவைப் பெறுவதுதான் சிறந்த வழியாக உள்ளது.

 "அப்படி போடு".. திமுகவை கதற விட போகும் எடப்பாடியார்.. கையில் எடுக்கும் "மாவட்ட பிரிப்பு" அஸ்திரம்!

ஆன்லைன் வகுப்புகள்

ஆன்லைன் வகுப்புகள்

மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகளையே தற்போது பயன்படுத்துகின்றன.
பல தனியார் கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கப்பட்டு விட்டன. வாட்ஸ் அப் மூலம் ஆசிரியர்கள் வீடியோக்களையும் பாடக்களையும் அனுப்பினால் மாணவர்கள் படித்து எழுதி திரும்பவும் பதில் எழுதி வாட்ஸ் அப் மூலம் பதிவிடுகின்றனர்.

ஆன்லைனில் வகுப்புகள்

ஆன்லைனில் வகுப்புகள்

மதுரை மாநகராட்சி பள்ளியில் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் தொடங்கி வைத்தார். ப்ளஸ் டூ முடித்து விட்டு நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளுக்கு இணையாக, மாநகராட்சி பள்ளியின் இந்த முயற்சி, பெற்றோர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. திருப்பூர் குமார் நகர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் வீடியோ கால் மூலமாக தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம்

தமிழ்நாட்டில் பல தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கூகுள் மீட் மூலம் பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில்தான் ஜூலை 13ஆம் தேதி முதல் அரசு பள்ளிகளில் வரும் 13ஆம் தேதி முதல் ஆன்லைன் கல்வி முறை தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார்.

டிவியில் பாடம் படிக்கலாம்

டிவியில் பாடம் படிக்கலாம்

ஆன்லைன் வழி வகுப்புகளை பெறக்கூடிய வகையில் அனைத்து மாணவர்களிடம் ஸ்மார்ட்போன், இணையவசதி உள்ளிட்ட கட்டமைப்பு இருக்குமா? என்ற கேள்வி எழுந்தது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் பேசியுள்ள அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாது, டி.வி. மூலமாகத்தான் பாடத்திட்டம் கற்பிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

அரசு மாணவர்களுக்கு டிவி மூலம் பாடம்

அரசு மாணவர்களுக்கு டிவி மூலம் பாடம்

அரசு பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்பை வரும் 13ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பார். பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்ட உடன் ஆன்லைன் கல்வி திட்டம் செயல்பாட்டிற்கு வரும். அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாகவும் பாடம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு சேனல் என்று 5 தொலைக்காட்சியில் ஒளிபரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார்.

தமிழக அரசு டிவி என்ன ஆச்சு

தமிழக அரசு டிவி என்ன ஆச்சு

பள்ளிக்கல்வித்துறைக்காக கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. தேர்வு நேரத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டன. தற்போது ஆன்லைன் வகுப்புகள் அனைத்தும் தனியார் டிவிக்கள் மூலம் பாடங்கள் நடத்தப்படம் என்று கூறியுள்ளார் அமைச்சர் செங்கோட்டையன். தமிழ்நாட்டில் அனைவரின் வீட்டிலும் டிவி இருக்கும் என்பதால் மாணவர்கள் பாடம் படிப்பதில் தடை ஏதும் இருக்காது என்றே நம்பலாம்.

English summary
Online classes for government school students in Tamil Nadu would commence soon and five private TV channels have agreed to telecast them for free, state School Education Minister K A Sengottaiyan said on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X