ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஈரோடு மாணவன் யாசினுக்கு கவுரவம்.. 'ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்'

Google Oneindia Tamil News

Recommended Video

    Student Yasin: ஈரோடு மாணவன் யாசினுக்கு கவுரவம்- வீடியோ

    ஈரோடு: சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரம் பணத்தை போலீசில் ஒப்படைத்த ஈரோடு மாணவன் முகமது யாசினின் நேர்மையை பாராட்டும் வகையிலும், மற்ற மாணவர்கள் நேர்மையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவும் இரண்டாம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் அவரது கதை இடம் பெற்றுள்ளது. இதைகேட்டு அவரது தாய் மிகவும் பூரிப்படைந்துள்ளார்.

    ஈரோடு கனிராவுத்தர் குளம் நந்தவன் தோட்டத்தைச் சேர்ந்தவர் பாஷா. இவரது மனைவி அப்ரஜ் பேகம். இவர்கள் துணி வியாபாரம் செய்து வருகிறார்கள் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் முகமது முஜமின் 9ம் வகுப்பு படிக்கிறார். இளைய மகன் முகமது யாசின் சின்னசேமூர் துவக்க பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கிறார்.

    சிறுவன் முகமது யாசின் கடந்த ஆண்டு ஜுலை மாதம் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார். காலை 11 மணி அளவில் இடைவேளையின் போது சிறுநீர் கழிக்க வில்லரசம்பட்டி சாலையில் சென்றுள்ளார்.

    முடிந்தது கோடை விடுமுறை.. திறந்தன புதுவையில் பள்ளிகள்முடிந்தது கோடை விடுமுறை.. திறந்தன புதுவையில் பள்ளிகள்

    சாலையில் பணம்

    சாலையில் பணம்

    அப்போது சாலையோரத்தில் ஒரு பை கிடந்ததை எடுத்து பார்த்துள்ளார்.அதில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனது வகுப்பு ஆசிரியை ஜெயந்தியிடம் மாணவர் யாசின் பையை ஒப்படைத்தார். அவர் அந்த பையில் உள்ள ரூபாய் நோட்டுக்களை எண்ணி பார்த்த போது ரூ.50 ஆயிரம் இருந்துள்ளது.

    யாசினை பாராட்டிய ரஜினி

    யாசினை பாராட்டிய ரஜினி

    இதையடுத்து மணவர் யாசின், அந்த பணத்தை ஈரோடு மாவட்ட எஸ்பி சக்திகணேசிடம் ஒப்படைத்தார். இந்த செய்தி வெளியான உடன் நடிகர் ரஜினிகாந்த் சிறுவன் முகமது யாசினை நேரில் அழைத்து பரிசு கொடுத்து பாராட்டினார். மேலும் போலீசாரும் யாசினை வெகுவாக பாராட்டினார்கள்.

    2ம்வகுப்பு பாடபுத்தகத்தில்

    2ம்வகுப்பு பாடபுத்தகத்தில்

    இந்நிலையில் முகமது யாசினின் நேர்மையை பாராட்டும் வகையிலும், மற்ற மாணவர்களும் நேர்மையுடன் இருக்க வேண்டும் என்பதை விளக்கும் வகையிலும் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தமிழ் 2ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இச்சம்பவம் இடம் பிடித்துள்ளது.

    பூரிப்படைந்த தாய்

    பூரிப்படைந்த தாய்

    அதாவது ஆத்திச்சூடி நேர்பட ஓழுகு என்ற தலைப்பில் சாலையில் கிடந்த பணத்தை எடுத்து ஆசிரியரிடம் மாணவர் யாசின் ஒப்படைத்ததும், பின்னர் போலீசில் ஒப்படைத்ததையும் அதைத்தொடர்ந்து மாணவர் முகமது யாசினை போலீஸ் பாராட்டியதையும் புகைப்படத்துடன் அச்சிட்டுள்ளார்கள். இதுகுறித்து அறிந்து முகமது யாசினின் தாய் அப்ரஜ்பேகம் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அவரது மகனின் படம் மற்றும் செயல் 2ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருப்பதை ஆசிரியர்கள் அழைத்து தெரிவித்துள்ளார்கள். இதை கேட்டு பூரிப்படைந்தார் அவரது தாய். 'ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்' என்ற திருக்குறள் யாசினின் தாய்க்கு நிச்சயம் பொருந்தும்.

    English summary
    The story of Erode honesty boy Yasin in the 2nd class textbook, who hands over Rs 50,000 to police
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X