ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மனுஸ்மிருதி விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்.. திருமாவளவன் பேச்சு

Google Oneindia Tamil News

ஈரோடு: மனுதர்மம் விவகாரத்தில் திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது அவருக்கு எதிரான போராட்டங்கள் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி தன்மீதான நடவடிக்கைகள் குறித்து சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திப்பேன் என கூறினார்.

ஈரோடு மாவட்டத்தில் இருந்து கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வழியாக விழுப்புரம் நோக்கி சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி.க்கு அக்கட்சியினர் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி பகுதியில் வரவேற்பு அளித்தனர்.

அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர் இவ்வாறு கூறினார். தமிழகத்தில் ஓபிசி மாணவர்களுக்கு இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் பாரதிய ஜனதா அரசு அபிடவிட் தாக்கல் செய்தது.

கொள்கை முடிவு எடுக்கிற வரையில் இந்த இட ஒதுக்கீட்டை வழங்க முடியாது என்று மோடி அரசு அறிவித்தது. அதனால் உச்சநீதிமன்றம் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க முடியாது என்று தீர்ப்பளித்திருக்கிறது.

முதலமைச்சராக வேண்டும் என நான் ஆசைப்படக் கூடாதா..? ஆசைப்பட்டால் என்ன தவறு..? -திருமாவளவன் அதிரடி..!முதலமைச்சராக வேண்டும் என நான் ஆசைப்படக் கூடாதா..? ஆசைப்பட்டால் என்ன தவறு..? -திருமாவளவன் அதிரடி..!

27 சதவீதம்

27 சதவீதம்

இதற்கு முழுக்க முழுக்க மோடி அரசுதான் பொறுப்பு 50 விழுக்காடு மட்டுமல்ல 27 விழுக்காடு கூட வழங்க முடியாது என்று சொல்லி இருக்கிறது. பெரும்பான்மை இந்துக்களுக்காக தாங்கள் மாறுபட்டுக் கொண்டிருக்கும் என்று காட்டிக் கொண்டிருக்கும் பிஜேபி அரசு எப்படி இந்த பெரும்பான்மை ஓபிசி இந்து மாணவர்களுக்கு எதிராக இருக்கின்றது என்பதை இப்பொழுதாவது ஓபிசி மக்கள் யாவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

பெரும்பான்மை

பெரும்பான்மை

மோடி அரசு ஒரு சனாதன அரசு. மதவாத அரசு. சமூகநீதிக்கு எதிரான அரசு. பெரும்பான்மையாக உழைக்கும் இந்துக்களுக்கு எதிரான அரசு என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.

முதல்வர்

முதல்வர்

தமிழக அரசு இது தொடர்பாக உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி இட ஒதுக்கீடு தொடர்பாக அனைவரும் ஒருமித்த கருத்தோடு இருக்கிறோம் என்பதை உணர்த்த வேண்டும். அதனால் உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

திருமாவளவன்

திருமாவளவன்

தொடர்ந்து 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தொல் திருமாவளவன் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டை அரசு பள்ளி மாணவருக்கு வழங்குவது தொடர்பாக இதுவரை எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை.

அறிக்கை

அறிக்கை

ஆளுநரின் இந்த நடவடிக்கையை தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது கலையரசன் குழு என்பது இது தொடர்பாக அமைக்கப்பட்டிருக்கிறது அந்த குழு இதை 10 சதவீதமாக வழங்க வலியுறுத்தி இருக்கிறது. ஆனால் என்ன காரணத்தினாலோ தமிழக அரசு அதனை ஏழரை சதவீதமாக சுருக்கி ஆளுநருக்கு அறிக்கை அனுப்பி வைத்திருக்கிறது.

நடவடிக்கை

நடவடிக்கை

இரண்டு பேரும் சேர்ந்து நடத்துகிற நாடகம் இது. தமிழக அரசும் தமிழக ஆளுநரும் சேர்ந்து நடத்துகிற இந்த நாடகம் சமூகநீதிக்கு எதிரானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து மனுதர்மம் விவகாரத்தின் என் மீதான நடவடிக்கைகளை சட்டப்படி எதிர்கொள்வேன் என கூறினார்.

English summary
VCK President Thirumavalavan says that he will legally face case against Manusmiriti.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X