ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விரட்டி விரட்டி லஞ்சம்.. ஸ்கெட்ச் போட்ட போலீஸார்.. சிக்கியும் 'எஸ்' ஆன இன்ஸ்பெக்டர்

Google Oneindia Tamil News

ஈரோடு: பக்காவா போலீஸார் ஸ்கெட்ச் போட்டும் "எஸ்" ஆன ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் குறித்த செய்திதான் இது!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் டிராபிக் இன்ஸ்பெக்டராக இருப்பவர் பதி. வயது 47 ஆகிறது. ஆனால் செக்போஸ்ட்டில் ஒரு லாரியை விடுவது கிடையாது. விரட்டி விரட்டி லஞ்சம் வாங்குவதுதான் இவரது டியூட்டியே. ஒருநாளைக்கு குறைந்தது 10 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக கறந்து விடுவாராம்.

குறிப்பாக, சத்தியில் இருந்து பண்ணாரி, திம்பம் வழியாக கர்நாடக மாநிலம் செல்லும் லாரிகளை செக்கிங் செய்வதுபோல, வண்டிகளை தடுத்து நிறுத்தி, அந்த டிரைவர்களிடம் லஞ்சம் வாங்கி கொண்டு வந்திருக்கிறார். இது சம்பந்தமான புகார்கள் ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு வர ஆரம்பித்தது.

மாறுவேடம்

மாறுவேடம்

அதனால் இன்ஸ்பெக்டர் பதியை பிடிக்க முடிவு செய்து, அதற்கான பிளானையும் போட்டார்கள். அதன்படி, நேற்றுமுன்தினம் இரவு லஞ்ச ஒழிப்பு போலீசார் 2 பேர் டிரைவர், கிளினீர் போல கெட்-அப்புக்கு மாறினார்கள். ஒரு லாரியை எடுத்து கொண்டு, பதி டியூட்டி பார்க்கும் ரூட்டில் அதாவது சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி நோக்கி மாறுவேஷத்தில் வந்தனர்.

மாமூலை எடு

மாமூலை எடு

அப்போது பதி, தனக்கு சொந்தமான 'ஹூண்டாய் இயான்' காரில் சென்று வாகன சோதனையில் தனி ஒருவராக ஈடுபட்டு கொண்டிருந்தார். வழக்கம்போல் லாரியை தடுத்து ஓரங்கட்ட சொன்னார். லாரி டிரைவராக இருந்த போலீஸ்காரரிடம் மாமூலை எடு என்றார்.

விசாரிக்கணும்

விசாரிக்கணும்

பதி மாமூல் கேட்டதும், கிளீனர், டிரைவர் இருவருமே கீழே இறங்கி வந்தார்கள். பிறகு பாக்கெட்டில் ஏற்கனவே ரசாயனம் தடவி வைத்திருந்த ரூபாய் நோட்டுக்களை பதியிடம் தரவும், அவரும் அதை வாங்கி கொண்டார். உடனே இருவரும், "நாங்க 2 பேரும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார். போலீஸ் ஸ்டேஷன்வரை வாங்க, உங்களை விசாரிக்கணும்" என்றனர்.

காரில் வந்த பதி

காரில் வந்த பதி

இதை கொஞ்சமும் பதி எதிர்பார்க்காத பதி, உடனே வாங்கிய பணத்தை கீழே போட்டுவிட்டார். பிறகு சுதாரித்து கொண்டு, "சரி, நான் என் காரிலேயே ஸ்டேஷன் வருகிறேன்" என்று சொல்லி காரில் ஏறி கொண்டார். லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரும் லாரியில் ஏறிக் கொண்டனர். லாரிக்கு பின்னால் பதி காரை ஓட்டிவருவதை திரும்பி திரும்பி பார்த்துகொண்டே வந்தார்கள். ஆனால் கெஞ்சனூர் செல்லும் சாலை வந்தபோது, பின்னாடியே வந்துகொண்டிருந்த பதி எஸ்கேப்!

மின்னல் வேகம்

மின்னல் வேகம்

மின்னல் வேகத்தில் லாரியை கார் கடந்து கெஞ்சனூர் நோக்கி சென்றது. இதை எதிர்பார்க்காத போலீசார் பதியை விரட்டி சென்றார்கள். காரின் வேகத்துக்கு லாரியும் இருட்டு வேளையில் நடுரோட்டில் பறந்தது. ஆனாலும் காரை அவர்களால் பின்தொடரவே முடியவில்லை. இதனிடையே எதிரே பைக்கில் வந்த ஒருவரை பதியின் கார் இடித்துவிட, அவர் படுகாயம் அடைந்து விழுந்தார். பொதுமக்கள் விரைந்து வந்து அந்நபரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

திணறும் போலீஸ்

திணறும் போலீஸ்

இப்போது பதி எங்கிருக்கிறார் என்று போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காகவும், விபத்தை ஏற்படுத்தி நபர் ஒருவரை படுகாயம் அடைய செய்ததற்காகவும் பதி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. எப்படி எப்படியோ ஸ்கெட்ச் போட்டு பிடித்தும் இன்ஸ்பெக்டர் பதியை பிடிக்க முடியவில்லையே என போலீசார் திணறி வருகிறார்கள்.

English summary
Traffic Inspector Pathi caught and escaped from Vigilance for Bribery near Sathiyamangalam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X