ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒன் ஹவர் டியூட்டி.. கை நிறைய காசு.. ஆசை வார்த்தையில் ஏமாந்த 2 இளம்பெண்கள்.. போலீசார் அதிரடி மீட்பு

கட்டாய விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்களை போலீசார் மீட்டனர்

Google Oneindia Tamil News

ஈரோடு: ஒன் ஹவர்தான் டியூட்டி.. கை நிறைய காசு பார்க்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி 2 இளம்பெண்களை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் ரோந்து பணியில் வழக்கம்போல ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஒரு இளைஞர், போலீசாரிடம் வந்து, சத்தி ரோடு அருகே உள்ள ஒரு 2 பெண்களை கூட்டி வந்து அடைத்து வைத்து விபச்சாரம் செய்வதாகவும், அவர்களை மீட்கும்படியும் புகார் சொன்னார்.

Two young women rescued by police near Erode

இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்தனர். அப்போது, அந்த இளைஞர் சொன்னபடியே 2 பெண்கள் அங்கு இருந்தனர்.

காதலனுடன் 2 நாள் ஊர் சுற்றிய ஹாஸ்டல் மாணவி.. வார்டன் என்ன செய்கிறார்.. திருச்சி போலீஸ் நறுக் கேள்வி காதலனுடன் 2 நாள் ஊர் சுற்றிய ஹாஸ்டல் மாணவி.. வார்டன் என்ன செய்கிறார்.. திருச்சி போலீஸ் நறுக் கேள்வி

போலீசாரை பார்த்ததும், அந்த பெண்கள் கதறி அழுதனர். விசாரணையில் அவர்கள் சொன்னதாவது: "நாங்கள் வெளியூர். பார்ட் டைம் வேலை பார்த்து எங்க செலவை நாங்களே பார்த்துக்கலாம்னு முடிவு பண்ணோம். அப்பதான் தோழி மூலமாக ஒரு புரோக்கர் அறிமுகம் கிடைக்கவும், வேலை கேட்டோம்.

அதற்கு ஒருநாளைக்கு ஒன் ஹவர்தான் டூட்டி, நல்ல காசு கிடைக்கும் என்று சொல்லி எங்களை அந்த புரோக்கரும், அவர் நண்பரும் இங்கே கூட்டி வந்து, கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபட வைத்துவிட்டனர்" என்று சொல்லி அழுதனர்.

இதையடுத்து, புரோக்கர் வேலையில் ஈடுபட்ட விஜயகுமார், அவரது நண்பன் பிரவீன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட பெண்கள், ஈரோட்டில் உள்ள காப்பகத்திற்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

English summary
Two young women are foced into prostitution and rescued by Erode Police. Two brokers have been arrested in connection with the matter
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X