ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் உதயநிதி ஸ்டாலின்.. போட்டியிடப்போகும் தொகுதி எது?

Google Oneindia Tamil News

ஈரோடு: சட்டசபை தேர்தலில் போட்டியிட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் போட்டியிடப்போகும் தொகுதி என்பது குறித்த கேள்விக்கு தலைமை தான் முடிவு செய்யும் என்று பதில் அளித்தார்.

Recommended Video

    ஈரோடு: நான் போட்டியிடும் தொகுதியை தலைமை முடிவு செய்யும்.. உதயநிதி ஸ்டாலின் பேட்டி..!

    சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் திமுக இளைஞரணி நிர்வாகிகளை நேரில் சந்தித்து தேர்தல் பணிகளில் உற்சாகமாக ஈடுபட வைக்க உதயநிதி ஸ்டாலின் தீவிரமாக சுற்றுப்பயணத்தை தொடங்கிவிட்டார்.

    அடிக்கடி திமுகவினருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்தி வரும் உதயநிதி ஸ்டாலின், இந்த முறை முதல் முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறார். எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    படத்திறப்பு விழா

    படத்திறப்பு விழா

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பவானியில் திமுக மாநில மாணவரணி துணை செயலாளர் ரங்கசாமி என்பவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உயிரிழந்தார். அவரது படத்திறப்பு விழாவில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அத்துடன் உயிரிழந்த ரங்கசாமி படத்தைத் திறந்து வைத்தார்.

    எஸ்ஏசியுடன் கூட்டணி?

    எஸ்ஏசியுடன் கூட்டணி?

    அப்போது செய்தியாளர்கள், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினிடம், நடிகர் விஜயின் தந்தை ஆரம்பித்த கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்று கேட்டார்கள். அதற்கு பதிலளித்த உதயநிதி, அதற்கு நீங்கள் எஸ்ஏ சந்திரசேகரிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறினார்.

    தலைமை முடிவு செய்யும்

    தலைமை முடிவு செய்யும்

    இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் வரும் தேர்தலில் நீங்கள் போட்டியிடும் தொகுதி என்ன என்பது குறித்து கேட்கப்பட்டார்கள், அதற்கு உதயநிதி, வரும் சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடும் தொகுதி குறித்து தலைமைதான் முடிவு செய்யும் என்றார்.

    உதயநிதி உறுதி

    உதயநிதி உறுதி

    இதனிடையே ஈரோட்டைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே குச்சிகாடு பகுதியில் கட்டப்படும் கோயில் மற்றும் நூலகம் கட்டுமானப் பணியை உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் மூலமாக பயன் பெறவுள்ள மாணவர்களை அழைத்து கலந்துரையாடினார்.
    அப்போது பேசிய உதயநிதி, கடந்த 3 ஆண்டுகளில் மருத்துவக் கனவுடன் இருந்த 13 மாணவர்களை நாம் இழந்திருக்கிறோம் என்றும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட்தேர்வு ரத்து செய்யப்படும் என்றார்.

    English summary
    It has been reported that DMK Youth Secretary Udayanithi Stalin is preparing to contest the assembly elections. Asked about the constituency in which he would contest, he said it was up to the leadership to decide.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X