ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"கேம் சேஞ்சர்".. அதிமுகவை "டீலில்" விட போகும் அன்புமணி.. பாமக அந்த முடிவை எடுக்குதா? என்ன நடக்கும்?

Google Oneindia Tamil News

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைதேர்தலில் பாமக என்ன நிலைப்பாட்டை எடுக்கும்.. அந்த கட்சி தனித்து நிற்குமா? கூட்டணி வைக்குமா? அல்லது தேர்தலை புறக்கணிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைப்பெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடக்கும் என்று இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கே அதிமுக கூட்டணி சார்பாக தமிழ் மாநில காங்கிரஸின் யுவராஜா போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கே தமிழ் மாநில காங்கிரசுக்கு பதிலாக அதிமுகவே போட்டியிடும் என்ற முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளார்.

ஆன்மீக உணர்வுகளை புண்படுத்திக்கிட்டே இருக்கீங்க..! திமுக அரசுக்கு எதிராக பாஜக கையில் எடுத்த 'மூவ்’! ஆன்மீக உணர்வுகளை புண்படுத்திக்கிட்டே இருக்கீங்க..! திமுக அரசுக்கு எதிராக பாஜக கையில் எடுத்த 'மூவ்’!

 கூட்டணி

கூட்டணி

இந்த இடைத்தேர்தலில் இதனால் அதிமுக வேட்பாளருக்கு தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளரின் ஆதரவு இருக்கும் என்பது உறுதியாகி உள்ளது. இன்னொரு பக்கம் பாஜக இன்னும் அதிமுகவிற்கான ஆதரவை தெரிவிக்கவில்லை. ஒரு பக்கம் பாஜக சார்பாக 14 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டு உள்ளது. அதோடு ஏபி முருகானந்தம் பாஜக சார்பாக போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. இன்னும் உறுதியாக இதில் அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த நிலையில் பாமக என்ன செய்யும்? யாருடன் கூட்டணி வைக்கும் என்ற கேள்வி இன்னொரு பக்கம் எழுந்துள்ளது.

பாமக

பாமக

கடந்த ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கு முன்பாக அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறியது. அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறிய போது, தேர்தல் நேரத்தில் நிர்வாகிகளை எடப்பாடி "கண்ட்ரோல்" செய்யவில்லை என்று ராமதாஸ் வெளிப்படையாக குற்றஞ்சாட்டி இருந்தார். அதிமுக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை ராமதாஸ் வைத்து இருந்தார். கூட்டணி தர்மத்தை அதிமுக காப்பாற்றவில்லை. அதிமுகவிற்கு ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை. அதன்பின்பும் எடப்பாடியை கடுமையாக விமர்சனம் செய்தார்.

திமுக

திமுக

அவ்வப்போது திமுகவிற்கு ஆதரவாக பேசிய ராமதாஸ், அன்புமணி ஆகியோர்கள் அதிமுகவில் இருந்து விலகிக்கொண்டே இருந்தனர். தேர்தல் நேரத்தில் அதிமுக நிர்வாகிகள் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. நிர்வாகிகளை சரியாக கட்டுப்படுத்த எடப்பாடிக்கு தெரியவில்லை. இதனால் எடப்பாடியுடன் கூட்டணி வைப்பதில் பலன் இல்லை என்று கூறி ராமதாஸ் அதிமுகவுடனான கூட்டணியை விமர்சனம் செய்து இருந்தார். இன்னொரு பக்கம் அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம். நாங்கள் தனியாகத்தான் நிற்போம் என்று அன்புமணி ராமதாஸ் வருகிறார்.

நெருக்கம்

நெருக்கம்

ஆளுனர் மோதல் உட்பட பல்வேறு விவகாரங்களில் திமுகவுடன் பாமக நெருக்கம் காட்டி வருகிறது. முக்கியமாக ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் திமுகவிற்கு ஆதரவாக அறிக்கைகளை பாமக வெளியிட்டு வந்தது. இந்த நிலையில்தான் சமீபத்தில் பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது.இந்த பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசினார். அதில், அதிமுக இப்போது 5 பாகங்களாக உடைந்துவிட்டது. பலரும் இங்கே சத்தம்தான் போட்டு வருகிறார்கள். பாமகதான் மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறது. நாங்கள்தான் எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறோம், என்று கூறினார்.

நெருக்கம்

நெருக்கம்

இந்த நிலையில்தான் அதிமுகவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் பாமக ஈரோடு கிழக்கு தேர்தலில் என்ன நிலைப்பாட்டை எடுக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கணிசமாக வன்னியர் வாக்குகள் உள்ளன. இந்த வாக்குகள் கண்டிப்பாக ஈரோடு கிழக்கில் கேம் சேஞ்சராக இருக்கும். இந்த வாக்குகள் ஓரளவிற்கு கடந்த தேர்தலில் அதிமுகவிற்கு சாதகமாக இருந்திருக்கும். இந்த முறை பாமக எடுக்கும் நிலைப்பாட்டை பொறுத்து அந்த வாக்குகள் இடமாறும் வாய்ப்புகள் உள்ளன. அதிமுக பாமகவுடன் கூட்டணி வைக்காத பட்சத்தில் கடந்த முறை பாமக மூலம் பெற்ற வாக்குகளை அதிமுக இந்த முறை இழக்க நேரிடும். பாமக இப்போதைக்கு திமுக கூட்டணிக்கு செல்லும் வாய்ப்புகளும் தெரியவில்லை.

திமுக

திமுக

திமுக கூட்டணியில் இப்போதைக்கு பாமக இணைவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. இதனால் பெரும்பாலும் பாமக தனித்து நிற்கலாம், மற்ற சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட பார்க்கலாம். அல்லது இடைத்தேர்தல் தானே என்பதால் தேர்தலை புறக்கணிக்கலாம். பாமக என்ன முடிவை எடுக்கும்? அது திமுக அல்லது அதிமுகவில் யாருக்கு சாதகமாக மாறும் என்பதை எல்லாம் வரும் நாட்களில்தான் பார்க்க வேண்டும்.

English summary
ramadoss, anbumani ramadoss, m k stalin, dmk, pmk dmk alliance, alliance of dmk, dmk pmk alliance ramadoss, திமுக கூட்டணி, திமுக பாமக கூட்டணி, அதிமுக மெகா கூட்டணி, பாமக திமுக, பாமக அன்புமணி ராமதாஸ், ராமதாஸ் பாமக, பாமக மு ஸ்டாலின் ராமதாஸ், edappadi palanisamy, o panneerselvam, EPS, OPS, aiadmk single leadership issue, madras high court judgement on aiadmk general council meeting, o panneerselvam happy about madras high court judgement, அதிமுக பொதுக்குழு கூட்டம், அதிமுக , அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று, அதிமுக பொதுச்செயலாளர், அதிமுக பொதுக்குழு கூட்டம் லேட்டஸ்ட் நியூஸ், எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம், ஈபிஎஸ், ஓபிஎஸ், அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம், erode east annamalai, erode east bjp, erode east, erodu east by election, ஈரோடு கிழக்கு பாஜக, பாஜக ஈரோடு கிழக்கு அண்ணாமலை, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திமுக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பாஜக, அதிமுக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், Thirumagan Evera , Evks Elangovan son, Evks Elangovan son no more, Erode East Constituency, Congress mla passes away, ஈரோடு கிழக்குத் தொகுதி, திருமகன் ஈவெரா, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகன் மரணம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகன் திருமகன், காங்கிரஸ் எம்.எல்.ஏ. மரணம், t by-election? Will Anbumani join hands with M K Stalin or Edappadi Palanisamy?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X