ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும்? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

Google Oneindia Tamil News

ஈரோடு: தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது தொடர்பாக இன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப் பாளையத்தில் இன்று நடமாடும் ரேஷன் கடை திட்டத்தை செங்கோட்டையன் துவக்கி வைத்ததார். இதன்பிறகு நிருபர்களை சந்தித்தார் அவர்.

அப்போது அவர் கூறுகையில், கோபிசெட்டிபாளையம் தினசரி மார்க்கெட் மேம்பாட்டுக்கு ரூ.6.99 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

 நவம்பர் 1ம் தேதி முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அட்டவணை நவம்பர் 1ம் தேதி முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அட்டவணை

கருணை முதல்வர்

கருணை முதல்வர்

மேலும் அவர் கூறுகையில், நீங்கள் பார்த்திருக்கக்கூடும். உலகத்திலேயே இல்லாத ஒரு திட்டம் நமது தமிழக முதல்வரால் கருணை உள்ளத்தோடு கொண்டு வரப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர், ஜெயலலிதா என்ன திட்டங்களை எதிர்காலத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று திட்டமிட்டாரோ, அதே திட்டங்களை முதல்வர் செயல்படுத்துகிறார்.

பள்ளிகள் திறப்பது எப்போது?

பள்ளிகள் திறப்பது எப்போது?

இந்திய நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக, அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீடு செய்துள்ளார் என்றார். அசாம், ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது, தமிழகத்தில் எப்போது பள்ளி திறப்பு என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இப்போது அதற்கான சாத்தியக் கூறு கிடையாது என்று தெரிவித்தார்.

ஷிப்ட் இல்லை

ஷிப்ட் இல்லை

சில தினங்கள் முன்பு அவர் அளித்த பேட்டியில், மாநிலத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்போது அனைத்து வகுப்புகளும் ஒரே நேரத்தில் செயல்படத் தொடங்கும். அனைத்து பள்ளிகளிலும் போதுமான உள்கட்டமைப்பு இருப்பதால், ஷிப்ட் முறையில் வகுப்புகள் இருக்காது என்று கூறியிருந்தார்.

நீட் தேர்வு

நீட் தேர்வு

மேலும் செங்கோட்டையன் இன்று தனது பேட்டியில் கூறுகையில், தமிழக அரசு கொண்டு வந்துள்ள கல்வித் திட்டத்தில் இருந்து தான் நீட் தேர்வில் 174 கேள்விகள் வந்துள்ளன. இது மகிழ்ச்சிக்குரிய செய்தி. இந்தியாவுக்கு வழிகாட்டியாக அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி உள்ளோம்.

பெருமை

பெருமை

மேலும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள நீட் தேர்வில் பெரும்பாலான கேள்விகள் தமிழக அரசின் மாநில பாடத்திட்டம் தொடர்பானது என்பது பெருமைக்குரிய தகவல். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

English summary
Tamil Nadu schools reopening date: Tamil Nadu education minister Sengottaiyan says, schools reopen will not happen very soon, because of these coronavirus circumstances.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X