ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரிந்து போன மனைவி.. 2வது கல்யாணமும் செஞ்சாச்சு.. வெறுத்து போன கணவர்.. பிச்சைக்காரராக மாறிய அவலம்!

பஸ் ஸ்டேண்டில் பிச்சையெடுத்த அரசு ஊழியர் மீட்கப்பட்டுள்ளார்

Google Oneindia Tamil News

ஈரோடு: மனைவி இன்னொரு கல்யாணம் பண்ணி போய்ட்டாரு.. அதனால வாழ்க்கையே வெறுத்து போன ஒருவர் ஈரோட்டு பஸ் ஸ்டேண்டில் பிச்சை எடுக்க ஆரம்பிச்சிட்டார்.. இத்தனைக்கும் அவர் ஒரு அரசு ஊழியர் என்பதுதான் ஷாக் நியூஸ்!

அட்சயம் என்ற அறக்கட்டளையை சேர்ந்த இளைஞர்கள் பல்வேறு நல்ல காரியங்களை செய்து வருகிறார்கள். அதன்படி ஈரோடு பஸ் ஸ்டேண்ட்டில் ஒருவர் பிச்சை எடுப்பதை பார்த்ததும், அவரை மீட்கலாம் என்று முடிவு செய்தனர். அதற்காக அவரிடம் சென்று யார், என்ன என்று விசாரித்தனர். அப்போதுதான் அவர் சொன்ன கதையை கேட்டு இளைஞர்கள் ஆடிப்போய் விட்டார்கள்.

Young Man rescued beggar in Erode Bus Stand

இந்த நபர் பெயர் சிவக்குமார், வயசு 39 ஆகிறது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசில் உள்ள கருவூலத்தில் வேலை பார்த்து வந்தவர் என்பதும் தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் சிவக்குமாரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்து, பிறகு சிகிச்சை முடிந்ததும் ராசிபுரத்தில் உள்ள அணைக்கும் கரங்கள் காப்பகத்தில் சேர்த்தனர்.

ம்மா.. இதை நாய்னு சொல்ல மனசே வரலை.. தாய்மையின் உச்சம் இது! ம்மா.. இதை நாய்னு சொல்ல மனசே வரலை.. தாய்மையின் உச்சம் இது!

சிவக்குமாருக்கு சில வருஷங்களுக்கு முன்பு கல்யாணம் ஆகி உள்ளது. குழந்தை இல்லையாம். கல்யாணமாகி 3 வருஷத்திலேயே அவருடைய மனைவி பிரிந்து சென்று, வேறு கல்யாணம் செய்து கொண்டுள்ளதாக தெரிகிறது. இதனால்தான் சிவக்குமார் மனஉளைச்சலுக்கு ஆளாகி, குடிப்பழக்கத்துக்கும் அடிமையாகி விட்டார்.

வாழ்க்கையே வெறுத்துபோன அவருக்கு கிடைத்த அரசு வேலையையும் ஒழுங்காக செய்ய முடியவில்லை. அதனால்தான் வேலையை தூக்கி போட்டுவிட்டு, ஈரோடு, நாமக்கல் பகுதிகளில் சுற்றி திரிந்து பிச்சை எடுத்து வாழ்ந்து வந்துள்ளாராம். இப்போது அறக்கட்டளையில் மிகுந்த பாதுகாப்பாக உள்ளார் சிவக்குமார்!

English summary
Namakkal District Collector Office Govt Staff, rescued beggar in Erode Bus Stand by Youngsters
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X