• search
ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

எதிர் வீட்டு தினேஷ்.. வாசலில் கிடந்த குமாரியின் சடலம்.. மிரண்டு போன ஈரோடு.. கொடுமை!

|

ஈரோடு: கள்ளக்காதலனுடன் பழக கூடாது என்று வீட்டில் அட்வைஸ் தந்தனர்.. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் தற்கொலையே செய்து கொண்டார்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ளது முதியனூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் சிவண்ணா... இவர் ஒரு கூலி தொழிலாளி.. மனைவி பெயர் குமாரி... 27 வயதாகிறது.. இவர்களுக்கு கல்யாணம் ஆகி 15 வருஷமாகிறது.. ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

Young Woman committed suicide because of her boyfriend near Erode

இந்நிலையில், குமாரிக்கு, எதிர் வீட்டில் வசிக்கும் தினேஷ் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக உருமாறியது.. தாளவாடியில் உள்ள வேளாண் துறை அலுவலகத்தில் தற்காலிக டிரைவராக தினேஷ் வேலை பார்த்து வருகிறார்.. இவருக்கும் கல்யாணமாகிவிட்டது.. 6 மாத கைக்குழந்தையும் உள்ளது.

இவர்கள் அடிக்கடி பேசுவதையும், பழகுவதையும் 2 வீட்டாருமே கண்டுபிடித்து விட்டனர்... இரு வீட்டிலுமே பிரச்னை வெடித்தது. இதைத்தொடர்ந்து 2 பேரும் தாளவாடியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

தினேஷை சந்திக்க கூடாது, பேசக்கூடாது என்று குமாரிக்கு அட்வைஸ் தந்தனர்.. இதனால் மன உளைச்சலுக்கு ஆளானார் குமாரி.. இதனிடையே,குமாரி கணவனுடன் குடும்பம் நடத்துவதை கண்ட தினேஷ், தன்னுடனேயே வந்துவிடுமாறு குமாரியை கட்டாயப்படுத்தி உள்ளார்.. அவ்வாறு வரவில்லையென்றால், ஜாலியாக இருந்தபோது எடுத்த வீடியோக்களை வெளியிடுவதாகவும் மிரட்டி உள்ளார்.

இதனால், கணவனா, கள்ளக்காதலனா என்ற குழப்பத்திற்கு ஆளானார் குமாரி.. ஒருகட்டத்தில் விரக்தியடைந்த குமாரி, விடிகாலை நேரத்தில் வீட்டில் தூக்கு போட்டுக் கொண்டார். இதையடுத்து, குமாரியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்ததுடன், மகளின் இறப்புக்கு எதிர்வீட்டு தினேஷ்தான் காரணம் என்று சொல்லி அவர் வீட்டு முன்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்..

தினேஷை கைது செய்தால்தான் குமாரியின் சடலத்தை எடுப்போம் என்று சொல்லி முழக்கமிட்டனர்.. தகவலறிந்து சத்தியமங்கலம் போலீசார் விரைந்து வந்தனர். உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.. அதற்குள் தினேஷ் தலைமறைவாகிவிடவும், அவரை தேடி பிடித்து கைது செய்வதாக உறுதி அளித்தனர்.. அதன்பிறகு பெற்றோரை, ஆசனூர் ஸ்டேஷனுக்கும் அழைத்து சென்றனர்.

விபூதி வேணாம்னா வாங்காமல் இருக்க வேண்டியதுதானே.. ஸ்டாலினை போட்டு தாக்கிய உதயகுமார்! விபூதி வேணாம்னா வாங்காமல் இருக்க வேண்டியதுதானே.. ஸ்டாலினை போட்டு தாக்கிய உதயகுமார்!

இதனிடையே தினேஷ் வீட்டு வாசலில் கிடந்த குமாரியின் உடலை கைப்பற்றி சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு போஸ்ட் மார்ட்டத்துக்கும் அனுப்பி வைத்தனர். கிட்டத்தட்ட 8 மணி நேரம் , தினேஷ் வீட்டு வாசலிலேயே குமாரியின் சடலம் கிடந்தது.. இறுதியில் குமாரியின் கணவர் சிவண்ணா அளித்த புகாரின் பேரில் தினேஷ் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை தேடி வருகின்றனர். கள்ளக்காதலனுடன் பழககூடாது என்று சொன்னதற்காக, இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

English summary
Young Woman committed suicide because of her boyfriend near Erode
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X