ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாழுங்கிணற்றில் மிதந்த சுகன்யா.. 10 மாத கைக்குழந்தை தவிப்பு.. அதிர்ச்சியில் பவானி!

இளம்பெண் கிணற்றில் இருந்து மர்மாக மீட்கப்பட்டார்

Google Oneindia Tamil News

ஈரோடு: பாழடைந்த கிணற்றில் மிதந்து கிடந்தார் சுகன்யா.. 10 மாத குழந்தை உள்ள நிலையில், பெண்ணின் இளம் மரணம் கடும் அதிர்ச்சி பவானி பகுதியில் ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே வரதநல்லூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி சந்திரசேகர் - சுகன்யா.. இவர்களுக்கு கல்யாணம் ஆகி 2 வருடம்தான் ஆகிறது.. 10 மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

young woman committed suicide near erode

இந்நிலையில், போன செவ்வாய்கிழமை முதல் சுகன்யாவை காணவில்லை.. எங்கு போனார் என தெரியவில்லை.. அதனால் அவரை தேடி வந்தனர்.. பின்னர், காலையில் வீட்டின் பக்கம் இருந்த கிணற்றில் சுகன்யா மிதந்தபடி கிடந்தார். இதையடுத்து போலீசார் சுகன்யாவின் சடலத்தை கைப்பற்றி, விசாரணையை ஆரம்பித்தனர். அந்த சமயத்தில், வரதட்சனை கொடுமையால்தான் தங்கள் மகள் இறந்துவிட்டதாக பெற்றோர் தரவும், அது தொடர்பான விசாரணை சந்திரசேகர் மற்றும் சுகன்யா குடும்பத்தினரிடம் தொடங்கியது.

சந்திரசேகருக்கு பிசினஸ் ஒன்றை ஆரம்பிக்க 50 ஆயிரம் ரூபாயை சுகன்யாவின் பெற்றோரிடம் கடனாக வாங்கிஉள்ளார்.. ஆனால் ரொம்ப நாள் ஆகியும் அந்த பணத்தை திருப்பி தரவில்லை போல தெரிகிறது. அதனால் தன் அப்பா, அம்மாவிடம் வாங்கிய பணத்தை எப்படியாவது திருப்பி தந்து விடுங்கள் என்று சுகன்யா சொல்லி கொண்டே இருந்திருக்கிறார். இதில்தான் தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.

கொலைக்களம் ஆகும் கோட்டா.. ஒரே மாதத்தில் 102 பிஞ்சு குழந்தைகள் பலி.. ராஜஸ்தான் மருத்துவமனை மர்மம்!கொலைக்களம் ஆகும் கோட்டா.. ஒரே மாதத்தில் 102 பிஞ்சு குழந்தைகள் பலி.. ராஜஸ்தான் மருத்துவமனை மர்மம்!

மனம் நொந்தபடியே இருந்தாராம் சுகன்யா.. இந்த விரக்தியில்தான் சுகன்யா கிணற்றில் இருந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது, வேறு ஏதேனும் காரணமா என தெரியவில்லை. 10 மாத குழந்தை உள்ள நிலையில், இளம்பெண் சுகன்யா கிணற்றில் சடலமாக மிதந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

English summary
young woman committed suicide due to dowry issue, and bavani police investigation is going on it
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X