ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சத்தியமங்கலம் சித்தி விநாயகர் கோயிலில் நடந்த படுகொலை.. போலீஸ் ஸ்டேசன் அருகில் நடந்த பயங்கரம்

Google Oneindia Tamil News

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் போலீஸ் ஸ்டேசன் அருகே உள்ள சித்தி விநாயகர் ஆலயத்தின் முன்பு 30 வயதுள்ள இளைஞர் செங்கற்களால் தாக்கி கொடூமாக கொலை செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானி ஆற்றங்கரையோரம் சித்தி விநாயகர் ஆலயத்தின் முன்பு, தலையில் ரத்தக்காயங்களுடன் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சத்தியமங்கலம் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது 30 வயது மதிப்புள்ள இளைஞரின் தலையில் செங்கலை போட்டு கொலை செய்திருப்பதை போலீசார் நேரில் பார்தத்னர்

அருகில் கிடந்த பை

அருகில் கிடந்த பை

அங்கு கொலை செய்யப்பட்ட நபரின் தலை அருகே துணிகள் அடங்கிய பேக் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. இந்த இரு தடங்களையும் கைப்பற்றிய போலீசார் கொலை செய்யப்பட்ட நபர் செங்கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டதை உறுதி செய்தார்கள்.

கட்டுமானப்பணி

கட்டுமானப்பணி

போலீசார் அப்போது நடத்திய விசாரணையில், கோயில் பிரகார சுவர் கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. கோயில் முன்வாசல் கதவு முன்பு மணல் குவித்து வைக்கப்பட்டிருந்தது. மணல் குவியலுக்கும் கோயில் வாசல்படிக்கும் இடையே இருந்த மறைவான பகுதியில் கொலை நடந்திருக்கிறது.

சிசிடிவி வேலைசெய்யவில்லை

சிசிடிவி வேலைசெய்யவில்லை

கோயில் பூசாரி இன்று காலை கோயில் வாசலை திறக்கும்போது கொலை நடந்தது வெளியே தெரியவந்தது. கொலையான சம்பவயிடத்திற்கு மேலே சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்தது. ஆனால் அது பழுதடைந்ததால் கொலை சம்பவம் பதிவாகவில்லை. இதனால் கொலையாளியை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

சத்தியில் பரபரப்பு

சத்தியில் பரபரப்பு

போலீசார் இறந்த இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொல்லப்பட்ட நபர் யார், எதற்காக கொலை செய்தார்கள் என்பது குறீத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் சத்திய மங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
A 30-year-old youth was stoned to death in front of the Siddhi Vinayagar temple near the Sathyamangalam police station in Erode district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X