For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆடுகளை ஆட்டையப் போடும் திருடர்கள்... மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் புகார் - வீடியோ

By Suganthi
Google Oneindia Tamil News

Recommended Video

    ஆடுகளுடன் வந்து புகார் கொடுத்த பொதுமக்கள்-வீடியோ

    திருப்பூர்: காங்கேயம், சிவன்மலை பகுதிகளில் ஆடுகள் திருடு போவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் ஆடுகளுடன் வந்து மனு அளித்தனர்.

    திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை கிராமத்தில் 10 நாட்களில் 100க்கும் மேற்பட்ட ஆடுகள் திருடு போயுள்ளன. ஆடுகளை இழந்த பொதுமக்கள் இதனால் அதிர்ச்சி அடைந்தனர்.

    Goats theft in Sivan malai, Tiruppur

    ஆடுகள் திருட்டுப் போவது குறித்து உடனே போலீசாரிடம் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் போதிய ஆள் பலம் இல்லாத காரணத்தால் நடவடிக்கை எடுக்க முடியாது என கூறியுள்ளனர்.

    இதனால் கொதிப்படைந்த மக்கள், மாவட்ட ஆட்சியரிடம் ஆடுகளை காட்ட எடுத்து வந்தனர். ஆடுகள் திருடு போவதை தடுக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர். பொதுமக்கள் ஆடுகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    English summary
    Tiruppur Sivan malai village people came with goats in district collector office and requested to stop looting goats in villages
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X