For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மக்கள் நல்வாழ்வு துறையில் நம்பர் 1.. மகுடம் சூடும் தமிழகம்.. அசாத்திய சாதனை படைத்த அதிமுக அரசு!

கடந்த 8 வருடங்களில் முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறையில் எண்ணிலடங்கா சாதனைகளை செய்து உள்ளது.

சென்னை: கடந்த 8 வருடங்களில் முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறையில் எண்ணிலடங்கா சாதனைகளை செய்து உள்ளது. இந்த கட்டுரையில் முதல்வர் பழனிசாமி அரசின் சாதனைகளை பார்க்கலாம்.

மக்கள் நல்வாழ்வு என்பது ஒரு சமுதாயத்தின் அனைத்து வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு ஆரோக்கியமான மக்களால் மட்டுமே ஆக்கபூர்வமான பங்கினை அளிக்க இயலும். முக்கிய சுகாதார குறியீடுகளில் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. நல்ல பொது சுகாதாரத்தை பராமரிப்பதில் அதிலும் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் பராமரிப்பதில் மற்ற மாநிலங்களை விட, நமது மாநிலம் முன்மாதிரி மாநிலமாக விரைந்து முன்னேறி வருகிறது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியின் கீழ் தமிழகத்தில் 99.8 சதவிதம் பிரசவங்கள் மருத்துவ நிலையங்களில் தகுதியும், பயிற்சியும் பெற்றவர்களால் நடத்தப்படுகிறது. இதனால் இந்த பிரசவங்களில் எந்த விதமான அசம்பாவிதங்களும் நடப்பது கிடையாது.

Great achievements Tamilnadu CM government in Health and Family Welfare Department

நடந்து வரும் அதிமுக ஆட்சியில் இளம்பிள்ளை வாதம், தொழுநோய் மற்றும் காசநோய் போன்ற தொற்று நோய்களை ஒழிப்பதில் தமிழகம் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றுள்ளது. போலியோ ஒழிப்பில் தமிழகம் முன்னோடியாக இருக்கிறது. கடந்த 8 வருடங்களில் எச்.ஐ.வி / எய்ட்ஸ் நோய் ஒழிப்பிலும் சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது.

அதிக உயிரிழப்புக்கு காரணங்களான நீரழிவு நோய், இதய நோய், உயர் இரத்த அழுத்த நோய் மற்றும் புற்றுநோய் போன்ற தொற்று இல்லாத நோய்களை கட்டுப்படுத்த தமிழக அதிமுக அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது. இதற்காக தமிழக முதல்வர் பழனிசாமியின் முதல்வர் காப்பீட்டு திட்டம் பெரிய அளவில் பலன் அளிக்கிறது.

முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறையில் செய்துள்ள சாதனைகள் பின்வருமாறு:

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரகத்தின் கீழ் செயல்படும் இரண்டாம் நிலை மருத்துவமனைகள் மக்களின் பல்வேறு விதமான சிறப்பு மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்ய ஏதுவாக முதல்வர் பழனிச்சாமி ஆட்சியின் தேவையான மாற்றங்களுடன் தரம் உயர்த்தப்பட்டு மாவட்ட இணை இயக்குநர்களின் கீழ் 29 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 206 வட்ட மருத்துவமனைகள், 67 வட்டம் சாரா மருத்துவமனைகள், 11 மருந்தகங்கள், 7 மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகள், 2 காசநோய் மருத்துவமனை / சானடோரியம், 7 தொழுநோய் மருத்துவமனை மற்றும் 1 மறுவாழ்வு மற்றும் புரணமைப்பு மனநலம் காப்பகம் ஆகியவைகள் மூலம் பொது மக்களுக்குத் தேவையான மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது.

மேலும் மகப்பேறு மற்றும் குழந்தை நல்வாழ்வினை மேம்படுத்துவதை முக்கியத்துவமாக கொண்டு 104 அரசு மருத்துவமனைகளில் (அனைத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளுக்கு உட்பட) ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு (CEmONC) மையங்கள், 114 அரசு மருத்துவமனைகளில் உள்ள பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்கள் (NBSU) மற்றும் 42 அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயுற்ற பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் (SNCU) ஆகியவை இவ்வியக்ககத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

Great achievements Tamilnadu CM government in Health and Family Welfare Department

மருத்துவம், அறுவை சிகிச்சை , மகப்பேறு மற்றும் மகளிர் நலம், கண், காது, மூக்கு மற்றும் தொண்டை , பால்வினை நோயியல், எலும்பு முறிவு, மயக்கவியல், குழந்தை நலம், பல் மருத்துவம், மனநல மருத்துவம், அவசரகால ஊர்தி சேவை, ஆய்வுக்கூட சேவை, தொழு நோய், காசநோய், நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் தொற்றா நோய் போன்ற சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. இதனால் அதிமுக அரசின் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் சுகாதாரத்துறையில் மாறிவரும் காலத்திற்கு ஏற்றார்போல் நவீன சிகிச்சைகளை அளித்து முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறது.

2019-20ம் ஆண்டு முதல்வர் பழனிசாமி அரசால் இத்துறையில் செய்யப்பட்ட சாதனைகள்:

* அதிமுக அரசால் கடலூர் மாவட்டம், பண்ரூட்டி அரசு மருத்துவமனைக்கு ஒரு கூடுதல் மருந்தாளுநர்
பணியிடம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

* அதிமுக அரசால் மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநரகத்திற்கு ஒரு மின் பணியாளர் பணியிடம்
தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

* தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு இரண்டு உதவி மருத்துவர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.

* சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு இரண்டு கூடுதல் மருந்தாளுநர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.

* அரசு தலைமை மருத்துவமனை இராமநாதபுரத்தில் மாவட்ட தொடக்க நிலை இடையூட்டு சேவைமையம் ரூ.100.00 இலட்சம் செலவில் கட்டிடப்பணிகள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

* அதிமுக அரசால் கடலூர் மாவட்டம் வேப்பூர் அரசு வட்டம் சாரா மருத்துவமனை கூடுதல் படுக்கை
வசதிகளுடன் அரசு வட்ட மருத்துவமனையாக ரூ.123.00 இலட்சம் செலவில் தரம் உயர்த்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

* முதல்வர் பழனிச்சாமி அரசால் காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ரூ.112.00 இலட்சம் செலவில் கூடுதல் படுக்கை வசதிகளுடன் அரசு வட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

Great achievements Tamilnadu CM government in Health and Family Welfare Department

* மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடங்கள் மற்றும்
உபகரணங்களுக்காக ரூ.322.00 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* சேலம் மாவட்டம், சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் பிதேர பரிசோதனை கூடம் கட்டுவதற்கு ரூ.315.00 இலட்சம் நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.

* முதல்வர் பழனிச்சாமி அரசால் நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அறுவை அரங்கு மற்றும் 12 படுக்கைகள் கொண்ட அறுவை சிகிச்சைக்கு பின்கவனிப்பு பிரிவு கட்டுவதற்கு ரூ.132.00
இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கும்பகோணம், இராமநாதபுரம், விருதுநகர், காஞ்சிபுரம், உதகமண்டலம், அரசு மருத்துவமனை திருப்பத்தூர், மருத்துவமனைகளில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவுகளை மேம்படுத்துவதற்கு ரூ.12,700.00 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* முதல்வர் பழனிச்சாமி அரசால் கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அரசு மருத்துவமனைக்கு புதிய குழந்தைகள் நலப்பிரிவு ரூ.50.00 இலட்சம் செலவில் கட்டிடப்பணிகள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

* புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ரூ.80.00 இலட்சம்
செலவில் கூடுதல் படுக்கை வசதிகளுடன் அரசு வட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

* விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு புதிய வெளிநோயாளிகள் பிரிவு மற்றும் அறுவை அரங்கம் ரூ.370.00 இலட்சம் செலவில்
கட்டடப்பணிகள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

* திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் அரசு தலைமை மருத்துவமனைக்கு கூடுதல்
உபகரணங்கள் வழங்க ரூ.1271.70 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* நீலகிரி மாவட்டம், எமரால்டு அரசு வட்டம் சாரா மருத்துவமனைக்கு கட்டிடங்கள், உபகரணங்கள், பணியாளர்கள், தளவாடங்கள் மற்றும் துணி வகைகளுக்காக ரூ.2063.10 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*முதல்வர் பழனிச்சாமி அரசால் இரண்டாம்நிலை மருத்துவமனைகளில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு மற்றும் TAEI மையத்தை மேம்படுத்த, கூடுதல் உபகரணங்கள் வழங்க ரூ.1233.96 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளான ஈரோடு, நீலகிரி, விருதுநகர், நாகப்பட்டினம், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டம், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம், மணப்பாறை, திருச்சி மாவட்டம், மேட்டூர் அணை, சேலம் மாவட்டம், பத்மநாபபுரம், கன்னியாகுமரி மாவட்டம், பொள்ளச்சி, கோயம்புத்தூர் மாவட்டம், தென்காசி, திருநெல்வேலி மாவட்டம், வாலாஜாபேட்டை, வேலூர் மாவட்டம், பென்னாகரம், தருமபுரி மாவட்டம், பெரியகுளம், தேனி மாவட்டம், காரைக்குடி, சிவங்கை மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் வலி நிவாரணம் கடுமை தணிவுமையம் (Pain and Palliative Care Unit) அமைக்கப்பட்டுள்ளது.

*முதல்வர் பழனிச்சாமி அரசால் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கடலூர் மற்றும் திருப்பூரில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவிற்கு கூடுதல் உபகரணங்கள் வழங்க ரூ.200.00 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* அரசு மருத்துவமனை விருத்தாச்சலம், கடலூர் மாவட்டம், ஓமலூர் சேலம் மாவட்டம், மேலூர், மதுரை மாவட்டம், அறந்தாங்கி, புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் உடுமலைப்பேட்டை, திருப்பூர் மாவட்டம் ஆகியவற்றிற்கு புதிய சி.டி.ஸ்கேன் உபகரணம் வழங்குவதற்கு ரூ.875.00 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* முதல்வர் பழனிச்சாமி அரசால் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளான திருப்பூர் மற்றும் கிருஷ்ணகிரி
ஆகியவற்றிற்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி வழங்குவதற்கு ரூ.1200.00 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் அரசு வட்ட மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகளுக்கு இன்றியமையாத உபகரணங்கள் வாங்க ரூ.150.00 இலட்சம் நிதி
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின்கீழ் செயல்படும் அரசு மருத்துவமனைகளுக்கு சாய்தள வசதி மற்றும் தீ விபத்து தடுப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கான ரூ.2971.96 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*முதல்வர் பழனிச்சாமி அரசால் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அரசு மருத்துவமனைக்கு ரூ.134.00 இலட்சம் செலவில் கட்டிட பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

* கடலூர் மாவட்டம், கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆர்த்ரோஸ்கோபி வழங்க ரூ.3.75 இலட்சம் நிதி ஒதுக்கடு செய்யப்பட்டுள்ளது.

* சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கட்டு அரசு தலைமை மருத்துவமனை, விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை மற்றும் வேலூர்மாவட்டம், திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு Hi-Tech Oto Rhino Laryngology உபகரணம் வழங்க ரூ.30.00 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*முதல்வர் பழனிச்சாமி அரசால் திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனை, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனை, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனை, சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கட்டு அரசு தலைமை மருத்துவமனை மற்றும் வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு தாய்பால் சேமிப்பு வங்கி Human Breast Milk Bank ஏற்படுத்த உபகரணங்கள் வழங்க ரூ.45.00 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*விழுப்புரம் மாவட்டம், அரசு மருத்துவமனை விழுப்புத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும் புதியதாக கட்டில்கள், மெத்தைகள் வாங்குவதற்கு ரூ.38.00 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பேறுகால தாய்மார்கள் இறப்பு விகிதம் குறைப்பு:

அதேபோல் இந்தியாவின் பெரிய மாநிலங்களில், குறைந்த பேறுகால தாய்மார்கள் இறப்பு விகிதத்தினை பொறுத்தவரை தமிழ்நாடு இரண்டாவது இடத்தை வகிக்கிறது. 2018-19-ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் 556 பேறுகால தாய்மார்கள் இறப்புகள் நிகழ்ந்துள்ளன (பேறுகால தாய்மார்கள் இறப்பு விகிதம் 1,00,000 உயிருடன் பிறந்த குழந்தைகளுக்கு 60). தமிழ்நாடு அரசு வளர்ந்த நாடுகளுக்கு இணையாக பேறுகால தாய்மார்கள் இறப்பு விகிதத்தைக் குறைக்க முதல்வர் பழனிச்சாமி அரசால் அதிக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

பிறப்பு இறப்பு பதிவு விவரங்கள் பல்வேறு மென்பொருள் வாயிலாக சம்பந்தப்பட்ட துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வந்த இணையதளம் மூலம் பிறப்பு இறப்பு சான்றிதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியினை, தமிழ்நாடு முழுவதும் ஒரே மென்பொருள் வாயிலாக பிறப்பு இறப்பு பதிவுகள் மேற்கொண்டு இணையதளம் மூலம் பிறப்பு இறப்பு விரிவுப்படுத்திட மாண்புமிகு தமிழக முதல்வரால் 04.07.2017 அன்று இணைய வழி சான்றிதழ் பெரும் வசதி சட்டமன்றத்தில் அறிவிப்பு செய்யப்பட்டது.

பிறப்பு இறப்பு குடிமுறை பதிவுக்கு என http://crstn.org இணைய வழி வலைதளம் மாண்புமிகு முதல்வர் பழனிசாமி அவர்களால் 04.03.2019 அன்று துவக்கி வைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. மாநிலத்தில் 2018 ஆம் ஆண்டில் 9,13,331 பிறப்பு பதிவுகளும், 5,45,203 இறப்பு பதிவுகளும் மேற்கண்ட மென்பொருளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 2019-ம் ஆண்டு மே 31 வரையில் 3,22,551 பிறப்பு பதிவுகளும், 2,11,697 இறப்பு பதிவுகளும், பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆரம்ப சுகாதார நிலையங்கள்:

ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல்வர் பழனிசாமி அரசால் மிக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, பேணிகாக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது 1806 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. அதிமுக அரசால் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெறும் பணிகள் மாதாந்தோறும் மாநில அளவில் சரிபார்க்கப்படுகிறது. அவ்வாறு ஆய்வு செய்யப்பட்ட அறிக்கை மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கு அனுப்பப்படுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் அளிக்கப்படும் சேவைகள் குறித்து துணை இயக்குநர், சுகாதாரப் பணிகள் அவர்களிடமிருந்து பெறப்படும் மருத்துவ நிலையங்களின் சேவை அறிக்கை மூலம் தொகுக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. 2018-19

ஆண்டில் 12,50,25,700 வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 161 வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 25,40,242 உள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சராசரியாக 100 உள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 1,28,053 பிரசவங்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றுள்ளது. ஒரு மாதத்தில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சராசரியாக 5 பிரசவங்கள் நடைபெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் 2018-19 ஆம் ஆண்டில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1,28,053 பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. ஆரம்ப சுகாதார நிலைய வசதிகளை அதிகரித்தல், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களையும் 24 மணி நேர ஆரம்ப சுகாதார நிலையங்களாக மேம்படுத்துதல், பிரசவத்தின் போது ஒரு உதவியாளர் உடன் இருத்தல், 'அல்ட்ராசோனோகிராம்' வசதிகள் வழங்குதல் மற்றும் 30 படுக்கைகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையங்களை அறுவை சிகிச்சை அரங்கங்களுடன் மேம்படுத்துதல், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டம், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உணவளித்தல், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மகப்பேறு சுற்றுலா ஏற்பாடு, பிரசவித்த தாய்மார்களுக்கு வாகன வசதி மற்றும் பிரசவத்திற்கு முன் காத்திருப்பு மையங்கள் அமைத்தல் போன்ற வசதிகளை ஏற்படுத்தியதே ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்கள் நடைபெறுவதற்கான முக்கிய காரணங்கள் ஆகும்.
அறுவை சிகிச்சை மூலம் பிரசவங்கள்

அறுவை சிகிச்சை மூலம் பிரசவங்கள், 124 ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடத்தப்படுகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2018-19 ஆம் ஆண்டில் 11,076 பிரசவங்கள் அறுவை சிகிச்சைகள் மூலம் நடைபெற்றுள்ளன. தேசிய ஊரக நல்வாழ்வுத்திட்ட ஆறாவது ஆய்வுக்குழு தமிழகத்தில் மேற்கொண்டுவரும் அறுவை சிகிச்சைகள் தொடர்பான முயற்சிகளை பாராட்டியுள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2018-19 ஆம் ஆண்டில், 50,126 குடும்ப நல அறுவை சிகிச்சைகள் நடைபெற்றன. இது மாநிலத்தில் நடைபெறும் மொத்த குடும்ப நல அறுவை சிகிச்சைகளில் 19 விழுக்காடாகும். தற்போது 390 ஆரம்ப சுகாதார நிலையங்களில் குடும்ப நல அறுவை சிகிச்சைகள் நடத்தப்படுகின்றன.

அதேபோல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால் மாதவிடாய் கால சுகாதாரத் திட்டம் 27.03.2012 அன்று துவக்கி வைக்கப்பட்டது. இத்திட்டம் தற்போது தமிழகர் முதல்வர் பழனிசாமி மூலம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் விலையில்லா சானிடேரி நாப்கின்கள் தமிழகத்தின் அனைத்து கிராமங்களில் 10 முதல் 19 வயது வரையுள்ள பள்ளிக்கு செல்லும் மற்றும் பள்ளிக்கு செல்லாத வளரிளம் பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஓராண்டில் 2 மாதங்களுக்கு ஒரு முறை ஆறு சானிடேரி நாப்கின்கள் கொண்ட ஒரு பை வீதம் (6 Pad per Pack) மூன்று பைகள் என 18 பைகள் வழங்கப்படும்.

மேலும், அனைத்து அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு ஆறு சானிடேரி நாப்கின்கள் கொண்ட ஏழு பைகள் வீதம் (6 Pad per Pack) வழங்கப்படுகிறது. சிறைச்சாலைகளில் உள்ள பெண் கைதிகள், கீழ்ப்பாக்கம் அரசு மனநோய் மருத்துவமனையில் உள்ள பெண் உள்நோயாளிகள் ஆகியோருக்கும் ஆறு சானிடேரி நாப்கின்கள் கொண்ட ஒரு பை வழங்கப்படுகிறது.

தமிழக சுகாதாரத்துறை மூலம் மார்ச் 2019 வரை செயல்படுத்தப்பட்ட முக்கிய சாதனைகள் பின்வருமாறு: •

*1,700 ஆரம்ப சுகாதார நிலையங்களை 3 செவிலியர்களுடன் 24 மணிநேரமும் இயங்கச்
செய்தது

*உடனடி தகவல் பரிமாற்றத்திற்காக அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் கணினி மற்றும் இணைய இணைப்பு வழங்கப்பட்டுள்ளது

• கர்ப்பகால சிகிச்சைக்காக ஏப்ரல் 2018 முதல் மார்ச் 2019 வரை ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வந்த 14,13,465 கர்ப்பிணிகளில் 6,30,904 தாய்மார்களுக்கு மதிய உணவ வழங்கப்பட்டுள்ளது

• ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏப்ரல் 2018 முதல் மார்ச் 2019 வரை பிரசவித்த 1,41,553 தாய்மார்கள், 47,267 பேர் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டவர்கள் மேலும் 1,21,858 தாய்மார்களுக்கு தங்கும் நாட்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.

• 30 படுக்கைகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏப்ரல் 2018 முதல் மார்ச் 2019 வரை சிக்கலான கர்ப்பம் என்று கண்டறியப்பட்ட 32,978 கர்ப்பிணி தாய்மார்கள் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கும் தங்கும் நாட்களுக்கு உணவளிக்கப்பட்டுள்ளது.

• ஏப்ரல் 2018 முதல் மார்ச் 2019 வரை 1,59,446 கர்ப்பிணி தாய்மார்களுக்கு இரத்தசோகை நோய் உள்ளது கண்டறியப்பட்டு இரும்பு சத்து (Iron Sucrose) ஊசி போடப்பட்டது.

• அரசு மருத்துவமனைகளில் ஏப்ரல் 2018 முதல் மார்ச் 2019 வரை 4,74,128 அலகுகள் 89 இரத்த வங்கி மூலமாகவும், 20,888 அலகுகள் 301 இரத்த சேமிப்பு மையங்கள் மூலமாகவும் நோயாளிகளுக்கு இரத்தம் செலுத்தப்பட்டுள்ளது.

• சிக்கலான கர்ப்பம் என்று கண்டறியப்பட்ட தாய்மார்களுக்கு உரிய சிகிச்சை வழங்க ஏப்ரல்
2018 முதல் மார்ச் 2019 வரை 120 மருத்துவ அலுவலர்கள் மருத்துவக் கல்லூரிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் RMNCH+A ஆலோசனை வழங்க 218 ஆலோசகர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்

• ஏப்ரல் 2018 முதல் மார்ச் 2019 வரை 3,64,269 கர்ப்பிணிப் பெண்கள் வீட்டிலிருந்து மருத்துவமனைக்கும், மருத்துவமனையிலிருந்து மேல் சிகிச்சைக்காக உயர் மருத்துவமனைகளுக்கும் இலவசமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஏப்ரல் 2018 முதல் மார்ச் 2019 வரை 2,71,765 பிரசவித்த தாய்மார்கள்மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்துச் சென்று விடப்பட்டுள்ளனர்.

• 371 ஆரம்ப சுகாதார நிலையங்களில் அறுவை அரங்கங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. 73 இடங்களில் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவுகள், குழந்தை நல சிறப்பு மருத்துவர் மற்றும் பயிற்சி பெற்ற செவிலியர்களுடன், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

*ஏப்ரல் 2018 முதல் மார்ச் 2019 வரை 1,14,564 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவுகள் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

• 114 வட்ட மருத்துவமனைகள் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில்
மூன்று செவிலியர்களுடன் இளம் சிசு நிலை நிறுத்த சேவைப் பிரிவு நிறுவப்பட்டுள்ளது. செவிலியர் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரைக் கொண்டு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, குழந்தைகள் நல மருத்துவமனை (ICH, Chennai), சென்னை , திருநெல்வேலி, மதுரை, மற்றும் திருவண்ணாமலை ஆகிய மருத்துவக் கல்லூரிகளிலும் பெரம்பலூர் மாவட்ட தலைமை மருத்துவமனையிலும் 6 ஊட்டச்சத்து புனர்வாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டு 691 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

• 371 ஆரம்ப சுகாதார நிலையங்களில் அறுவை அரங்கங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன.

• 73 இடங்களில் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவுகள், குழந்தை நல சிறப்பு மருத்துவர் மற்றும் பயிற்சி பெற்ற செவிலியர்களுடன், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஏப்ரல் 2018 முதல் மார்ச் 2019 வரை 1,14,564 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவுகள் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

• 114 வட்ட மருத்துவமனைகள் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில்
மூன்று செவிலியர்களுடன் இளம் சிசு நிலை நிறுத்த சேவைப் பிரிவு நிறுவப்பட்டுள்ளது. செவிலியர் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரைக் கொண்டு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, குழந்தைகள் நல மருத்துவமனை (ICH, Chennai), சென்னை , திருநெல்வேலி, மதுரை, மற்றும் திருவண்ணாமலை ஆகிய மருத்துவக் கல்லூரிகளிலும் பெரம்பலூர் மாவட்ட தலைமை மருத்துவமனையிலும் 6 ஊட்டச்சத்து புனர்வாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டு 691 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X