For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யும் போது.. எப்படி சேமிப்பது.. கரம் கொடுக்கும் HDFC Life

வருமான வரியை (Income Tax Returns) கணக்கிடும் போதும் உங்கள் சம்பளத்தில் பெறிய தொகையை எப்படி சேமிப்பது என்று பார்க்கலாம்.

சென்னை: வருமான வரியை (Income Tax Returns) கணக்கிடும் போதும் உங்கள் சம்பளத்தில் பெறிய தொகையை எப்படி சேமிப்பது என்று பார்க்கலாம்.

கவர்ச்சிகரமான சம்பள உயர்வு அதிக வரி விதிப்பால் காணாமல் போகும் போது!

பொதுவாக ஒரு நிதி ஆண்டின் இறுதியில், நீங்கள் உங்கள் பட்டய கணக்காளர் உடன் அமர்ந்து வருமான வரியை (Income Tax Returns) கணக்கிடும் போதும், உங்களின் சம்பளத்தில் மிகப்பெரிய தொகையை நீங்கள் மூல வருமான வரியாக (Tax Deducted at Source) செலுத்தி இருப்பீர்கள் என்று தெரிய வரும்.

நீங்கள் சம்பாதித்த பணத்தில் அந்த வரிகள் அனைத்தும் எவ்வாறு வசூலிக்கப்பட்டன என்று நீங்கள் எப்போதாவது குழப்பமடைந்து இருக்கலாம். ஆனால், நீங்கள் தனி ஆள் இல்லை. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தன்னுடைய நண்பர் மற்றும் பட்டய கணக்காளர் லியோ மேட்டர்ஸ்டார்ப்பிடம் கூறிய வசனம் ஒன்று இப்போது பிரபலம். ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் லியோவிடம் '' உலகிலேயே வருமான வரியை புரிந்து கொள்வதுதான் கடினம'' என்று குறிப்பிட்டு இருந்தார்.

HDFC Life: Term and Health insurance plans in Tamil

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் போன்ற மிகப்பெரிய புத்திசாலியால் கூட வரி முறையை, கணக்கை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால, உங்களாலும் புரிந்து கொள்வது கடினம்தான். வரி திட்டமிடல் மூலம் உங்கள் கணக்காளர் உங்களுக்கு மதிப்புமிக்க பணத்தை இழக்கவோ அல்லது சேமிக்கவோ முடியும் என்பதைக் இதன் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

சம்பள உயர்வு வரும் போதே வரி விதிப்பு பயமும் சேர்ந்து வரும்

நீங்கள் அதிக பணம் சம்பாதிக்க தொடங்கும் போதும், நீங்கள் செலுத்தும் வரி அதிகமாகும். ஆகவே, அந்த சம்பள உயர்வைப் பெறுவதற்கு நீங்கள் ஆண்டு முழுவதும் உழைத்து வருகிறீர்கள் என்றால், நீங்கள் ஒரு நிதி வருடத்தின் தொடக்கத்தில் வரித் திட்டமிடலுக்கு சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். அப்போதுதான் வரி செலுத்துவதைச் சேமிக்க முடியும். உங்களின் நீண்ட நேர பணிக்கான வெகுமதி, அதிக வருமான வரிகளின் சுமையால் குறைவதை நீங்கள் கண்டிப்பாக விரும்ப மாட்டீர்கள்.

நிதியாண்டு முடிந்தபின் வரி அதிர்ச்சிகளைத் தவிர்ப்பதற்கு, ஒழுங்கான திட்டமிடலை அதற்கு முன்பே செய்வதுதான் புத்திசாலித்தனம்.

நீங்கள் என்ன செய்ய முடியும்?

ரமேஷ் சுக்லா, ஒவ்வொரு மாதமும் ஒரு நடுத்தர அளவிலான நிர்வாகியின் சம்பளமான ரூ .56,915யை பெறுகிறார். அவர் 2020 ஜனவரி முதல் மாதத்திற்கு ரூ .6,000 சம்பள உயர்வு எதிர்பார்க்கிறார். இந்த நிலையில் அவரிடம் அலுவலக கணக்கு குழு, நீங்கள் உங்கள் வரி விதிப்பில் சேமிப்பு தொடர்பான திட்டங்களை சமர்ப்பிக்கவில்லை எல்லாம், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் உங்கள் சம்பளத்தில் பெரும் தொகையை நீங்கள் இழக்க நேரிடும்.

வரியைக் குறைக்க இரண்டு முதன்மை வழிகள் உள்ளன: 1) வரி விதிக்கக்கூடிய வருமானத்தை குறைத்தல் 2) விலக்குகளை அதிகரித்தல். ஆனால் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சேர்ந்தது.நீங்கள் உங்கள் வரி விதிக்கக்கூடிய வருமானத்தை, விலக்குகளை கொண்ட முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் குறைக்க முடியும்.

ரமேஷ் சுக்லாவின் நண்பர், அவரை விட சில வருட சீனியர், பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்க்கும் அவர் 80டி சட்டப்பிரிப்பு மற்றும் ஐடி சட்டப்பிரிவு மூலம் வரியை சேமிக்க முடியும் என்று கூறினார். இதை ஆராய்ந்ததன் மூலம் ரமேஷ் தன்னுடைய வருமானத்தில் தன்னுடைய வரியில் எதிர்காலத்தில் அதிகமானதை சேமிக்க முடியும் என்று கண்டறிந்தார்.இதனால் அவர் தனக்கும், தன்னுடைய பெற்றோருக்கும் மருத்துவ காப்பீடு எடுத்தார். இந்த காப்பீடு காரணமாக 80டி சட்ட பிரிவு மூலம் 50 ஆயிரம் ரூபாய் வரை சேமித்தார். மேலும் ULIPs மற்றும் மற்ற திட்டங்கள் மூலம் ஐடி சட்ட விதியின் 80டி பிரிவின் மூலம் 1.5 லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடியும்.

அதேபோல் நீங்கள் லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் பாலிசி மூலம் இன்னும் அதிகமாக வரி விலக்கை பெற முடியும். HDFC Life போன்ற அரசு அங்கீகரித்த வரி திட்டங்கள் மூலம் ULIP போன்ற திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்யலாம். இதன் மூலம் நீங்கள் வருமான வரி விலக்கு மட்டுமின்றி காப்பீடும் கிடைக்கும், இதனால் ULIP மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

இதுபோன்ற வருமான வரி விலக்கு முறைகள் மூலம் நீங்கள் வருமான வரியையும் பெற முடியும், காப்பீடும் பெற முடியும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X