ஜெசிக்காவின் உயிர்காக்க உதவி செய்யுங்கள் ப்ளீஸ்
சென்னை: இதய நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் ஜெசிக்காவிற்கு உங்களால் முடிந்த உதவியை செய்திடுங்கள்.
ஜெசிக்காவிற்கு வெறும் மூன்றரை வயதுதான்.. ஆனால் இந்த இளம் வயதிலேயே ஜெசிக்கா இதயத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் போராடி வருகிறார். இவர் பால்வாடியில் படிக்கும் போது செய்யப்பட்ட மருத்துவ சோதனையில் இவருக்கு இதயத்தில் பிரச்சனை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இவரை சோதிக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். இந்த சோதனையில் ஜெசிக்காவிற்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஜெசிக்காவின் அப்பா கவியரசன் மீன் பிடி தொழிலில் பணியாற்றி வருகிறார். ஆனால் அந்த பணியும் கூட கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. இவரிடம் ஜெசிக்காவின் இதய பிரச்னைக்கு சிகிச்சை அளிக்க வசதி இல்லை.

இதனால் தற்போது ஜெசிக்காவின் சிகிச்சைக்கு அவரின் அப்பாவிடம் பணம் இல்லை. ஜெசிக்கா Pulmonary Atresia/VSD, PDA supplying branch PAs என்ற பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜெசிக்காவிற்கு செய்ய வேண்டிய சிகிச்சை முறை: Cardiac Cathetarization followed by surgery - ICR with RV to PA conduit இந்த சிகிச்சைக்கு மொத்தம் 3,80,000 ரூபாய் செலவு ஆகும். இது போக மருத்துவ செலவுகள் நிறைய ஏற்பட்டுள்ளது.

நீங்கள் உதவி செய்தால் மட்டுமே ஜெசிக்காவிற்கு சிகிச்சை மேற்கொள்ள முடியும். நீங்கள் மனது வைத்தால் இவருக்கு உடனே ஆப்ரேஷன் செய்ய முடியும். இந்த லிங்கை கிளிக் செய்து உடனே ஜெசிக்காவிற்கு உங்களால் முடிந்த நிதி உதவியை செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications




















RECOMMENDED STORIES