For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

4 வயசு யாஷ்னா.. உயிருக்கு போராடும் இளம் பிஞ்சு.. இந்த சிறு குழந்தைக்கு உதவிடுங்கள்!

சென்னை: லிம்போபிளாஸ்டிக் லிம்போமா எனப்படும் ரத்த வெள்ளை அணுக்களின் அதீத உற்பத்தியால் ஏற்படும் ஒரு கட்டியால் போராடும் 4 வயது குழந்தைக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்களேன்.

4 வயதில் தத்தி தடுமாறி நடந்து எதை பற்றியும் கவலைப்படாமல் ஒரு பட்டாம்பூச்சி போல் பறந்துக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு மத்தியில் யாஷ்னா உயிருக்காக போராடி வருகிறாள்.

Help 4 Year Old Yashna, Suffering from Actue Lymphoblastic Lymphoma

அவர் லிம்போபிளாஸ்டிக் லிம்போமா என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோயானது ரத்தத்தில் அபரிமிதமான வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்வதாகும். இது கட்டியாக உருவெடுத்துள்ளது. இதற்காக அவர் மதுரை மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இவரது தந்தை ரயில்நிலையத்தில் கூலித் தொழிலாளியாவார்.

Help 4 Year Old Yashna, Suffering from Actue Lymphoblastic Lymphoma

இவருக்கு யாஷ்னா மட்டுமல்லாது மன்ஷி (7), ஜினால் (5) ஆகிய இரு குழந்தைகள் உள்ளன. இவரது சிகிச்சைக்கு ரூ 6 லட்சம் செலவாகும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் 3 குழந்தைகளை வைத்துக் கொண்டு வெறும் 6 ஆயிரம் மட்டுமே மாத சம்பளமாக வாங்கும் யாஷ்னாவின் தந்தை செய்வதறியாது அழுதுக் கொண்டிருக்கிறார்.

Help 4 Year Old Yashna, Suffering from Actue Lymphoblastic Lymphoma

தற்போது ஊரடங்கால் குடிக்கக் கஞ்சிக் கூட வழியில்லாத இந்த தந்தை உடல்நலம் பாதித்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்க கருணை உள்ளம் கொண்டவர்கள் நிதியுதவி அளிக்க வேண்டும் என யாஷ்னாவின் தந்தை கேட்டுக் கொண்டுள்ளார்.

Help 4 Year Old Yashna, Suffering from Actue Lymphoblastic Lymphoma

நீங்கள் யாஷ்னாவின் உயிரை காக்க விரும்பினால், இந்த லிங்கை கிளிக் செய்து பணம் கொடுத்து உதவிடுங்கள். நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் அந்த குழந்தையின் உயிரை காத்திடும்.

இந்த சிறுமிக்கு உதவுவது குறித்து இந்த செய்தியை உங்கள் சமூகவலைதளங்களில் பகிர்ந்து நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!. 4 வயது குழந்தை எந்த உடல்உபாதையுமின்றி நலம் பெற்று ஓடியாட உதவுங்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X