For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இதய பாதிப்பால் அவதிப்படும் 5 வயது சென்னை சிறுமி.. உதவிக்கரம் நீட்டுங்களேன்

சென்னை: மோசமான உடல் குறைபாட்டால் தவித்து வரும் கனிஷ்காவிற்கு உங்களால் முடிந்த உதவியை செய்திடுங்கள்.

கனிஷ்கா, சரியாக லாக்டவுன் நேரத்தில்தான் உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அவளின் அப்பா கார்த்திக், சிங்கபெருமாள் கோவில் பகுதியில் எலக்ட்ரானிக் கடை ஒன்று வைத்து இருக்கிறார். பிபிஏ படித்த இவர் சொற்பமான வருமானம் வாங்குகிறார்.

Help 5 Year old Kanishka heart operation

தற்போது லாக்டவுன் காரணமாக இவருக்கு எந்த விதமான வருமானமும் வருவதில்லை.வீட்டில் இருக்கும் அவரின் மனைவி குடும்ப பணிகளை பார்த்துக் கொள்கிறார். அவருக்கு இன்னொரு மூத்த மகளும் இருக்கிறார்.

கூடுவாஞ்சேரி அரசு மருத்துவமனையில் கனிஷ்கா குறை மாதத்தில் பிறந்தார். அவளுக்கு பிறக்கும்போதே இதயத்தில் பிரச்சனை இருந்தது. அவளுக்கு இதற்கு முன்பே அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது. சில நாட்கள் முன் மீண்டும் அவளுக்கு உடல் நிலை மோசமாகி மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள் .

Help 5 Year old Kanishka heart operation

இந்த நிலையில் அவளுக்கு உடனே இன்னொரு அறுவை சிகிச்சை வேகமாக செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவளுக்கு Dextocardia S/p Right Bidirectional Glenn எனப்படும் இதயக்குறைபாடு நோய் இருந்துள்ளது.

அறுவை சிகிச்சை வகைகளில் ஒன்றாக Fontan Surgeryயை அவளுக்கு உடனே செய்ய வேண்டும். இதற்கு செலவு ரூபாய் 3,80,000 ஆகும். ஆனால் அவளின் அப்பாவிடம் இவ்வளவு தொகை இல்லை.

Help 5 Year old Kanishka heart operation

கனிஷ்காவிற்கு உடனே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். கனிஷ்கா உயிரை காக்க உடனடியாக மக்கள் பணம் கொடுத்தால்தான் சிகிச்சை மேற்கொள்ள முடியும்.

நீங்கள் கனிஷ்கா உயிரை காக்க விரும்பினால், இந்த லிங்கை கிளிக் செய்து பணம் கொடுத்து உதவிடுங்கள். நீங்கள் கொடுக்கும் 100, 1000 ரூபாய் என்று ஒவ்வொரு ரூபாயும் கூட இந்த குழந்தையின் உயிரை காத்திடும்.

Help 5 Year old Kanishka heart operation

இந்த செய்தியை உங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X