9 வயசுதான் ஆகிறது.. இந்த சிறுமிக்கு இப்படி ஒரு மோசமான வியாதி.. உதவுங்கள் ப்ளீஸ்
சென்னை: 9 வயதே ஆன இளம் சிறுமி திஷாவிற்கு முதுகெலும்பில் செய்யப்பட உள்ள ஆபரேஷனுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
மேற்கு வங்க மாநிலம் பாகுராவிலில் உள்ள கிருஷ்ணநகர் பகுதியை சேர்ந்த சிறுமி திஷா. அங்கு பிரைமரி பள்ளிக்கூடத்தில் படித்து வரும் இவருக்கு பிறந்ததில் இருந்தே முதுகெலும்பில் பிரச்சனை உள்ளது. முதுகெலும்பு வளைந்து, நேராக இல்லாமல், இவர் கஷ்டப்பட்டு வந்தார்.

இவரின் உடலை சோதனை செய்ததில், திஷாவிற்கு congenital scoliosis with tethered cord syndrome எனப்படும் முதுகெலும்பு குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. முதுகு "எஸ்" போல வளைந்து இருந்ததால் இந்த சிறுமி அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் திஷாவின் ஆசிரியர்களின் அறிவுரையின் பெயரில், இவருக்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக மேற்கு வங்கத்தில் இருந்து சென்னை மியாட் மருத்துவமனைக்கு இவரின் பெற்றோர்கள் அழைத்து வந்தனர். திஷாவை சோதனை செய்த சென்னை மியாட் மருத்துவமனை மருத்துவர்கள், இவருக்கு நான்கு கட்டமாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டனர்.

அதன்பின் சர்ஜரி முடிந்தும் சில நாட்களுக்கு கண்காணிப்பு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். திஷாவிற்கு இருக்கும் இந்த குறைபாடு காரணமாக posterior stabilization மற்றும் deformity correction ஆகிய சர்ஜரிகளை செய்ய வேண்டும். இதற்கு செலவாக 4.50 லட்சம் ரூபாய் ஆகும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஐசியூ, ஆபரேஷன், ஆபரேஷனுக்கு பின்பான கண்காணிப்பு அனைத்திற்கும் இவ்வளவு ரூபாய் செலவாகும். ஆனால் திஷாவின் பெற்றோரிடம் இவ்வளவு பணம் இல்லை. அவர்களின் குடும்பம் வறுமையான குடும்பம். திஷாவின் அப்பா உத்தம் ராய் காய்கறி கடை வைத்துள்ளார். சென்னை வருவதற்கே இவருக்கு, திஷாவின் ஆசிரியர்கள்தான் உதவி செய்தனர்.

திஷாவின் சிகிச்சைக்கு அவரின் பெற்றோரால் பணம் கொடுக்க முடியாத நிலையில், நீங்கள் நினைத்தால் இந்த சிறுமிக்கு உதவலாம். நீங்கள் மனது வைத்தால் இந்த சிறுமிக்கு உடனே ஆப்ரேஷன் செய்ய முடியும். இந்த லிங்கை கிளிக் செய்து உடனே அந்த சிறுமிக்கு உங்களால் முடிந்த நிதி உதவியை செய்யுங்கள்.
உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்து, இந்த சிறுமியின் சிகிச்சைக்கு பணம் திரட்ட உதவிடுங்கள்!
RECOMMENDED STORIES