For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மூளையில் கட்டி.. 5 வயதில் உயிருக்கு துடிக்கும் இளம் பிஞ்சு.. சிகிச்சை செய்ய உதவிடுங்கள் மக்களே!

சென்னை: மூளையில் கட்டி வந்து மருத்துவமனையில் போராடிக் கொண்டு இருக்கும் 5 வயது பெண் குழந்தைக்கு உங்களால் முடிந்த உதவியை செய்திடுங்கள்!

''திரிஷ்டி, மல்ஹோத்ரா குடும்பத்தின் அழகே அவள்தான். அந்த தேவதை நடனம் ஆடும் போது ஒருவர் கூட கண் இமைக்க முடியாது. எந்த இசையாக இருந்தாலும் அவளின் கால்கள் தானாக ஆடும். மயக்கும் வகையில் அவள் அற்புதமாக தோற்றமளிப்பாள். அவள் மீதிருந்து உங்கள் பார்வையை அகற்ற முடியாது.

Help Drishti, Who Is Slowly Losing Her Eyesight due to tumor

அவளை மற்றவர்கள் பாராட்டும் போது எங்கள் இதயம் பெருமையால் நிறைந்தது. ஆனால் அவளின் மூளையில் கட்டி இருக்கிறது என்று தெரிந்தவுடன் எங்கள் கனவு மொத்தமும் சிதைந்தது. அவளின் வாழ்க்கையில் இது பெரிய தடையாக மாறியது. அவளின் சிகிச்சைக்கு எங்களிடம் போதிய பொருளாதார வசதி இல்லை'' இது திரிஷ்டியின் தாய் ரித்து மல்ஹோத்ராவின் கண்ணீர் வார்த்தைகள்.

2019 மார்ச் மாதம் திரிஷ்டி தனக்கு தலைவலிக்கிறது, பார்வை சரியாக தெரிவது இல்லை என்று கூறிய போது, அவளின் பெற்றோர்களுக்கு சந்தேகம் வந்தது. எதோ தவறாக இருக்கிறது என்று அவர்கள் நினைத்தார்கள். அதன்பின் எடுக்கப்பட்ட எம்ஆர்ஐ ஸ்கேன் முடிவுகள் அவர்களை நிலைகுலைய வைத்தது. தங்கள் மகளின் மூளையில் 45 மிமீக்கு கட்டி இருப்பது சோதனையில் தெரிந்தது.

அந்த கட்டியின் வலியால் திரிஷ்டி மிக மோசமான கஷ்டத்தை அனுபவித்து வருகிறாள். அவள் அந்த கட்டியை அகற்றும் வரை மிக மோசமான வலியை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரிஷ்டிக்கு கடந்த மே மாதம் 9ம் தேதி, முதல் அறுவை சிகிச்சை குர்கானில் உள்ள ஆர்ட்டிமிஸ் மருத்துவமனையில் செய்யப்பட்டது. ஆனால் அப்போது மூளையில் இருந்த கட்டியை அகற்ற முடியவில்லை. இதனால் அவளுக்கு இன்னொரு சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி இரண்டாவது சிகிச்சை செய்யப்பட்டது.

Help Drishti, Who Is Slowly Losing Her Eyesight due to tumor

ஆனால் இரண்டு சிகிச்சை செய்யப்பட்ட பின்பும் கூட திரிஷ்டியின் போராட்டம் ஓயவில்லை. தற்போது மருத்துவர்கள் திரிஷ்டிக்கு ரேடியோதெரபி கொடுத்தால்தான் குணமடைவாள் என்று கூறிவிட்டார்கள்.

இதுகுறித்து திரிஷ்டியின் தந்தை கமல், ''கடவுள் மீது எங்களுக்கு இருக்கும் நம்பிக்கை, எங்களின் பொறுமை , பொருளாதாரம் என்று அனைத்தையும் 2019ம் வருடம் சோதித்துவிட்டது. இப்போது எங்களுக்கு மனிதம் மீது மட்டும்தான் நம்பிக்கை இருக்கிறது. எங்கள் குடும்பத்தில் இந்த வருடம் நடந்த நிகழ்வுகள் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

திரிஷ்டியின் கண்ணில் ஏற்பட்டு வரும் பிரச்சனை, அவளுக்கு சீக்கிரம் சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி உள்ளது. அவள் விரைவில் குணமடைய வேண்டும். ஒரு 5 வயது சிறுமியின் கஷ்டத்தை புரிந்து கொண்டு நல்ல மனம் கொண்ட மனிதர்கள் உதவுவார்கள் என்று எங்களுக்கு பெரிய நம்பிக்கை உள்ளது.

மருத்துவமனை பெட்டில் எங்கள் குழந்தை படுத்து இருப்பதை பார்க்கும் போது எங்களுக்கு பேச்சு வரவில்லை. அவள் குரல் எங்களுக்கு கேட்கிறது. அவளின் கண்கள் எங்களிடம் பேசுகிறது. ''அப்பா என்னை இதில் இருந்து காப்பாற்றுங்கள்'' என்று அவள் சொல்வது கேட்கிறது. அவளை எங்களால் கைவிட முடியாது.

என் மனைவிதான் திரிஷ்டியை மருத்துவமனையில் இருந்து பார்த்துக் கொள்கிறார். நான் வேலையை கவனித்துவிட்டு பின் மருத்துவமனைக்கு வருகிறேன். தினமும் 2-3 மணி நேரம் பயணம் செய்து மருத்துவமனைக்கு வருகிறோம். திரிஷ்டியின் சிகிச்சையில் தொடர்ந்து பொருளாதார சரிவை சந்தித்து வருகிறோம், என்று அவர் கூறியுள்ளார்.

Help Drishti, Who Is Slowly Losing Her Eyesight due to tumor

எப்படி உதவி செய்வது?

ரித்துவும், கமலும் தங்கள் குழந்தைக்கு திரிஷ்டி என்று பெயர் வைத்த போது இப்படி மோசமான நிகழ்வு நடக்கும் என்று நினைத்திருக்க மாட்டார்கள். திரிஷ்டி என்றால் பார்வை என்று அர்த்தம். ''தன்னால் சரியாக பார்க்க முடிகிறது'' என்று திரிஷ்டி சொல்லும் வரை அவர்களுக்கு வாழ்க்கை மீது நம்பிக்கை ஏற்படாது. நீங்கள் மனது வைத்தால் இவருக்கு உதவலாம். திரிஷ்டியின் சிகிச்சைக்கு உங்களால் உதவ முடியும்.

இந்த ImpactGuru.com தளத்திற்கு சென்று நீங்கள் திரிஷ்டியின் சிகிச்சைக்கு உதவி செய்ய முடியும். அதேபோல் இந்த செய்தியை உங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

அவள் மீண்டும் தன்னுடைய விருப்பமான பாடல்களுக்கு நடனம் ஆட வேண்டும். மீண்டும் சந்தோசமாக, துடிப்போடு இருக்கும் எங்கள் மகள் திரிஷ்டி எங்களுக்கு திரும்ப வேண்டும். நீங்கள் அதற்கு உதவி செய்வீர்கள் என்று நம்புகிறோம். அவள் தனது கட்டியில் இருந்து விடுபடும் நாளை பார்க்க ஆவலாக இருக்கிறோம். அவளுக்கு உதவ போகும் எல்லோருக்கும் நாங்கள் பெரிய நன்றிக்கடன்பட்டு இருக்கிறோம் என்று திரிஷ்டியின் தந்தை கூறியுள்ளார்.

நீங்கள் மனது வைத்தால் இவருக்கு உதவலாம். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரே விஷயம்தான்... இந்த லிங்கை உடனே கிளிக் செய்து உங்களால் முடிந்த தொகையை கொடுத்திடுங்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X