For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லாக்டவுனால் பாதிக்கப்பட்ட டீக்கடைகாரர்களுக்கு உதவிடுங்கள்.. டாடா டீ சக்ரா கோல்டின் முன்னெடுப்பு!

சென்னை: லாக்டவுனால் பாதிக்கப்பட்ட டீக்கடை காரர்களுக்கு உதவும் வகையில் டாடா டீ சக்ரா கோல்ட் நிறுவனம் முக்கிய வழி ஒன்றை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுக்க கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் இதனால் கடுமையாக நிதி நெருக்கடிக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் இந்த நிலைமை உள்ளது.

Help Tea stall owners with Tata Chakra Gold Tea during this economic depression

இந்த லாக்டவுன் காரணமாக நாடு முழுக்க கிட்டதட்ட 2 மாதமாக டீ கடைகள் இயங்கவில்லை. இதனால் தமிழகத்தில் டீ கடைக்காரர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். தமிழர்களின் வாழ்க்கையோடு டீ கடைகள் மிக நெருக்கமானது.

மச்சி ஒரு டீ சொல்லு.. அண்ணா ஒரு டீ என்பது தமிழர்களின் வாழ்க்கையோடு இணைந்த வசனம். ஒரு கிளாஸ் டீ மூலம் இணைந்த நட்புகள், உறவுகள், காதல்கள் பல இருக்கிறது. இப்படி மக்களுடன் மக்களாக இணைந்து இருக்கும் டீ கடைகள் லாக்டவுன் காலத்தில் இயங்காத காரணத்தால் டீ கடை வியாபாரிகள் பெரிய இழப்பை சந்தித்து இருக்கிறார்கள்.

தினசரி வருமானம் இல்லாத காரணத்தால் இவர்கள் எல்லோரும் வறுமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் இருக்கும் டீக்கடை காரர்களை காக்க டாடா டீ சக்ரா கோல்ட் களமிறங்கி உள்ளது. இதற்காக டாடா டீ சக்ரா கோல்ட் நிதி உதவி வழங்க உள்ளது. மக்களிடம் நேரடியாக நிதி வசூலித்து டீக்கடைக்காரர்களுக்கு அளிக்க உள்ளது.

நீங்களும் இதன் மூலம் தமிழகத்தில் இருக்கும் டீக் கடைக்காரர்களுக்கு உதவலாம். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை. இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். உள்ளே இருக்கும் டோனேட் பக்கத்தில் இருக்கும் கப்களை கிளிக் செய்து உதவி செய்யலாம்.

ஒரு டீ கப்பை கிளிக் செய்தால் 10 ரூபாய் நிதி உதவி செய்வதாக அர்த்தம். இதன் நீங்கள் விருப்பப்பட்ட எண்ணிக்கையில் கப்களை தேர்வு செய்து, உங்கள் வங்கி கணக்கு மூலம் உதவி செய்யலாம். இதனால் தமிழகத்தின் ஏழை டீ கடை வியாபாரிகள் நலம் அடைவார்கள். கொஞ்சம் உதவிடுங்கள்!

மேலும் விபரங்கள் மற்றும் உதவி செய்திட இந்த லிங்கை கிளிக் செய்திடுங்கள்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X